உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  உரிமைகளை பாதுகாக்க உறுதி ஏற்போம்: ஸ்டாலின்

 உரிமைகளை பாதுகாக்க உறுதி ஏற்போம்: ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும், டிச., 10ம் தேதி, சர்வதேச மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம், வயது அல்லது சமூக பின்னணியை பொருட்படுத்தாமல், நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமான, உரிமைகள் குறித்து, சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக, ஐக்கிய நாடுகள் சபையானது, 'மனித உரிமைகள், நம் அன்றாட அத்தியாவசியங்கள்' என, அறிவித்துள்ளது. அந்த வகையில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலை நாட்டிட, மனித உரிமைகள் நாளில் நாம் அனை வரும் உறுதி ஏற்போம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை