உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.,வை பலப்படுத்துவோம்

தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.,வை பலப்படுத்துவோம்

'வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வை பலப்படுத்துவோம்' என, அக்கட்சியின், 53வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டங்களில், தமிழகம் முழுதும், முன்னாள் அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர். அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம், தமிழகம் முழுதும் நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகின்றனர். சமீபத்தில், சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், செம்மஞ்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார். முன்னதாக, அவருக்கு மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேடையின் முகப்பு, தலைமை செயலகம் வடிவில் அமைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் கூட்டத்தில் பங்கேற்ற வேலுமணிக்கு, செங்கோல் பரிசும் வழங்கப்பட்டது. முதல்வர் வேட்பாளருக்கும், கட்சியின் தலைமைக்கும் மட்டுமே தொண்டர்கள் செங்கோல் வழங்குவது வழக்கமாம். ஆனால், தலைமை நிலைய செயலர் என்ற பதவியில் இருக்கும் எஸ்.பி.வேலுமணிக்கு செங்கோல் வழங்கப்பட்டுள்ளது. வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழகம் முழுதும் கட்சியை பலப்படுத்த எஸ்.பி.வேலுமணியை முன்னிலைப்படுத்தும் புது முயற்சியில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே அவருக்கு செங்கோல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, பன்னீர்செல்வம், தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, ஏற்கனவே ஆறு முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியிடம் முறையிட்டனர். அதற்கு பழனிசாமி, 'நீக்கப்பட்டவர்களை இனி கட்சியில் சேர்க்க முடியாது' என, திட்டவட்டமாக மறுத்து விட்டார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், சசிகலா மரியாதை செலுத்திய பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க.,வை ஒன்றிணைப்பது எங்களின் வேலை; மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர் தான் முதல்வர்' என்றார்.இதற்கிடையில், அ.தி.மு.க.,வின் உட்கட்சி தேர்தல் திட்டத்தை பழனிசாமி தவிர்த்துள்ளார். வரும் டிசம்பர் இறுதியில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலராக தன்னை மீண்டும் தேர்வு செய்த பின், உட்கட்சி தேர்தல் நடத்தி, தனக்கு ஆதரவானவர்களை, மாவட்ட செயலர்கள், ஒன்றிய, நகர, கிளை செயலர்களாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கும் திட்டமும் வைத்துள்ளார். அதனால், சசிகலா ஆதரவுடன் கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கும், முதல்வர் வேட்பாளர் பதவிக்கும் எஸ்.பி.வேலுமணி வந்து விடக்கூடாது என்பதற்காக, அவருக்கு செக் வைக்கும் வகையில், பழனிசாமி காய் நகர்த்த துவங்கியுள்ளார். அதே நேரத்தில், பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில், பொதுக்குழுவில் கட்சி ஒற்றுமை குறித்து பேசுவதற்கும், ஆறு முன்னாள் அமைச்சர்களும், அவர்களின் ஆதரவு மாவட்ட செயலர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் திட்டமிட்டுள்ளனர். ஆனாலும், முன்னாள் அமைச்சர்களின் முயற்சி பலிக்குமா என்பது பின்னர் தான் தெரிய வரும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

செங்கோல் வழங்குவது புதிதல்ல

எஸ்.பி.வேலுமணிக்கு செங்கோல் வழங்கியது குறித்து, அ.தி.மு.க., இலக்கிய அணி மாநில துணைச்செயலர் பட்டுக்கோட்டை சின்ன சுவாமிநாதன் கூறியதாவது:செங்கோலை முதன் முதலாக எம்.ஜி.ஆரிடம் வழங்கியது பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கந்தசாமி தேவர். அதன்பின், எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவும் வழங்கியுள்ளார். ஜெயலலிதாவுக்கும், பழனிசாமிக்கும் பலமுறை செங்கோல் வழங்கப்பட்டது.முதல்வர் வேட்பாளருக்கு மட்டும் செங்கோல் வழங்கப்படுவதில்லை. பொதுவாக அரசியல் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கும், செல்வாக்கு பெற்றவர்களுக்கும் வழங்கப்படுகிறது. தொண்டர்கள் விருப்பத்தின் படி தான் செங்கோல் வழங்கப்படுகிறது. செங்கோல் கொடுப்பதால் மட்டும், ஒருவர் முதல்வர் வேட்பாளராக முடியாது. அதேசமயம், முதல்வர் வேட்பாளருக்கு தான் செங்கோல் வழங்க வேண்டும் என, எந்த விதிமுறையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

பக்கிரிசாமி, குறிஞ்சிபாடி
நவ 01, 2024 21:11

சிமென்ட் வச்சி கட்டுங்க, பலமாயிடும்


Raja Vardhini
நவ 01, 2024 21:01

திரு.எடப்பாடி அவர்கள் மீண்டும் மீண்டும் தெளிவாக கூறிய பின்பும், ஏன் இந்த வீண் வதந்தி பரப்பும் வேலை? திமுக கைக்கூலி பன்னீர் விசுவாசமோ..


எஸ் எஸ்
நவ 01, 2024 20:13

எடப்பாடி தன் பிடிவாதத்தை விட்டு கொடுத்து கட்சி நலத்தை சிந்திக்க வேண்டும். அனைவரும் இணைந்தால் 2026 இல் திமுக வுக்கு கடுமையான போட்டியாக இருக்கும்


Ahamed Rafiq
நவ 01, 2024 19:06

அதிமுக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் புது குள்ள நரி கூட்டம் வந்து இருக்குறது அதிமுக, திமுக இது இரண்டும் தான் களம் காண போகிறது இரண்டில் ஒன்று ஆட்சியை பிடிக்கும் மற்ற ஒன்று எதிர் கட்சியாக அமரும் 2026 வரை காத்து இருப்போம்.


Easwar Kamal
நவ 01, 2024 18:19

பேசாமல் இந்த எடப்பாடி ஏதாவது ஒன்றுக்கு ஆசை படணும். முதல்அமைச்சர் அல்லது அதிமுக பொது செயலாளர். எதையாவது ஒன்றை வேலுமணிக்கு கொடுத்து கட்சி ஜெயிக்க வழி செய்யலாம். இருந்த இந்த 4 ஆண்டுகள் ஒன்னும் பண்ண முடியலை. இதை புரிந்து செயல்படுங்கள்.


ராமகிருஷ்ணன்
நவ 01, 2024 14:46

எடப்பாடியால் அதிமுகவை பலப்படுத்த முடியாது. புதைக்க மட்டுமே முடியும்.


சாண்டில்யன்
நவ 01, 2024 14:09

நான் செய்யவில்லை அட்மின் செய்துட்டார்னு பழி போட்டு தப்பிக்க மட்டும்தானா அட்மின் அட்றாஸிட்டிக்கே செங்கோல் தரும் காலகட்டத்தில் அவருக்கு செங்கோல் தருவதில் தப்பில்லை. எது எப்படியோ எடப்பாடி எடக்குப்பாடி ஆயிடாமே இருந்தா சரி


Kadaparai Mani
நவ 01, 2024 13:47

This reply is for one Mr.Kalyanaraman. Why are worried about the internal affairs of AIADMK. You develop your party with your party ideology which even a novice called hatred politics three days back. During the Devar Iyah jayanthi Mr.ponnaian himself presided meeting in Chennai. When ever any instruction given by EPS all the senior ministers are obeying and they have already started ground work for the elections in 2026. Paid media realizing that AIADMK is constructing huge alliance with newcomer now trying big stories to defame AIADMK which is the largest party in tamil nadu.


S.L.Narasimman
நவ 01, 2024 12:12

இந்த சசிகலா ஓபி எஸ் தினகரன் இவங்களை அதிமுக வில் சேர்க்க தொண்டர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ பிசெபி ,அண்ணாமலை மற்றும் பெய்டு மீடியாக்கள் தலைகீழா நின்று முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


சாண்டில்யன்
நவ 02, 2024 14:08

பெய்டு மீடியாக்கள் என்பது அபாண்டம் காலணா செலவில்லாமல் IT ED CBI இன்னபிற நால்வகை படைப்பிரிவுகளையும் ஏவி சாதகமாக்கிக் கொள்வதே நிகழ்காலம் சொத்தையும் தொழிலையும் காத்துக் கொள்ள போட்றா ராஜா போடுன்னு கோலெடுத்தவன் கையில் குரங்காடும் சாரி ஸாரி ஸரி SARI


Kadaparai Mani
நவ 01, 2024 11:58

Why you are scared of Edappadi palanisamy. Who first revolted after the death of Jaya madam.Panneer selvam always maintains dual relationship with BJP and DMK. Whose son called Mr.Stalin personally and hailed dmk is running best government. EPS with the help of former ministers able to score twenty percent in parliamentary elections. AIADMK is the only party can defeat DMK led alliance.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை