உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க இணையதளம்

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க இணையதளம்

சென்னையில் நேற்று நடந்த, மயிலாப்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தனது மகளுக்கு அனுஷா என்று வேலு பெயர் வைத்துள்ளார். அது தமிழ்ப்பெயர் அல்ல. ஆனால், மணமக்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு, அழகான தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.முதல்வர் பேசும் வீடியோவை, 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்த, நிதன் சிற்றரசு என்பவர், 'குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் வைக்க சரியான சமூக வலைதளங்கள் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில், வலைதளம் உருவாக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.அதற்கு தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், 'குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர், அதற்கான பொருள் அடங்கிய இணையப்பக்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக துவக்கப்படும்' என, அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

SIVA
மே 01, 2025 20:47

சுடலை , சுடலைமாடசாமி என்று வைக்கலாம்


அப்பாவி
மே 01, 2025 19:36

பேருக்கு முன்னாடி தமிழ்–னு சேத்துரலாம். தமிழ்ஸ்டாலின், தமிழின்பநிதி, தமிழுதைநிதி, ன்னு வெச்சுக்கிட்டா பிரச்சனை தீர்ந்தது. இனி தமிழல்லாத பேர் எது வந்தாலும் தமிழ்னு முன்னாடி வெச்சு தமிழ் வளர்க்கலாம்.


nb
மே 01, 2025 17:27

ரஷ்ய மொழியில் பேரு வைக்கலாம் அது தப்பு இல்ல


konanki
மே 01, 2025 17:10

கருணாநிதி -ஸ்டாலின்-உதயநிதி-துர்கா ,வேத மூர்த்தி சபரீஸன்,கிருத்திகா, உதயசூரியன் ,இன்ப நிதி, ஆதித்யா - இந்த கருணாநிதி குடும்பத்தின் பெயர்கள் எதுவுமே தமிழ் பெயர்கள் இல்லை.


Nellai tamilan
மே 01, 2025 15:00

ஊருக்கு மட்டும் தான் உபதேசம். வீட்டில் இருக்கும் தன்மயா, க்ருத்திகா, இன்ப நிதி, உதய நிதி போன்ற வடமொழி பெயர்கள் எல்லாம் எப்போது மாற்றப்படும்.


vijai hindu
மே 01, 2025 12:32

கல்யாணத்துக்கு போனோமா மணமக்களை வாழ்த்திட்டு வராம தமிழ் பெயர் இல்ல வெங்காய பெயர் இல்லை என்று சொல்வதை விட்டுவிடு உன் பெயர் என்ன தமிழ் பெயரா ஊருக்கு உபதேசம்


vbs manian
மே 01, 2025 11:32

ஊருக்கு பெரிய உபதேசம்.


xyzabc
மே 01, 2025 11:26

அப்போ டாஸ்மாக் என்று பெயர் வைக்க கூடாதா?


saravan
மே 01, 2025 10:34

ஸ்டாலின்


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
மே 01, 2025 09:20

எனக்கு தெரிந்து தஞ்சையில் மிகப் பழமையான நூறாண்டுகளுக்கு மேல் புழக்கத்திலுள்ள பாப்பு பிள்ளை காலனி உள்ளது. ரிசர்வ் பேங்க் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, யுனைடெட் பேங்க் காலனி, யுனைடெட் இந்தியா காலனி, LIC காலனி, செக்ரட்டரியேட் காலனி, NGO காலனி, ஆபீஸர்ஸ் காலனி, டீச்சர்ஸ் காலனி, சாந்தி காலனி, சௌந்தர்யா காலனி. இது இப்படியிருக்க பல இடங்களிலும் காலனி என்பதை ஆங்காங்கே தமிழில் தவறாக காலணி என்று எழுதி வைத்திருக்கும் அவலத்தையும் காண்கிறோம். காலனி எனும் சொல்லை பொது புழக்கத்திலிருந்து நீக்கிய அரசு அதற்கான மாற்று சொல்லாக எதையும் அறிவிக்காமல் தப்பி விட்டது. உலகமே நொட்டை சொல்லியிருக்குமே. எனவே அவரவர் விருப்பப்படி பெயர் மாற்றம் செய்து அதை பதிவு செய்து கொள்ளலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை