உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாருக்கு வார விடுமுறை: மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி

போலீசாருக்கு வார விடுமுறை: மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: போலீசாருக்கு வார விடுமுறை நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரணையில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:போலீசாருக்கு வார விடுமுறை வழங்காமல் இருப்பது எந்த வகையில் ஜனநாயகம், இது மனித உரிமை மீறல் அல்லவா?போலீசாருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை, எந்த அளவுக்கு பின்பற்றப்படுகிறது என டி.ஜி.பி.,பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஏப் 22, 2025 01:15

நீதிபதிகளின் பாதுகாப்பிற்கு வாரத்தில் ஒரு நாள் லீவு கொடுத்து விட்டால் போச்சு.


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 22:21

கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை தசரா விடுமுறை ..ராணுவ வீரர்களுக்கு என்ன விடுமுறை ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை