உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் மீது என்ன நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கேள்வி

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் மீது என்ன நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த இரண்டு பெண்கள் உட்பட 42 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று(ஜூன் 20) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மது விற்போர், துணை போகும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

போலீசார் மீது என்ன நடவடிக்கை?

இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கூறியதாவது: சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அலட்சியத்தால் கள்ளக்குறிச்சியில் பலர் இறந்துள்ளனர். சட்ட விரோதமாக மது விற்பனையை போலீசார் எப்படி அனுமதிக்கின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று இனி மேலும் ஒரு சம்பவம் நடக்க கூடாது. சட்டவிரோத மது விற்பனை செய்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை மக்களே நேரில் சென்று வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

V GOPALAN
ஜூன் 23, 2024 14:33

Dear judge why are you sleeping on 52 pending cases on this arrack seller for the last 10 years


K.aravindhan aravindhan
ஜூன் 21, 2024 10:51

நீதிமான்கள் அயல் தேசத்தவர் போல் கருத்துக்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல


S. Neelakanta Pillai
ஜூன் 21, 2024 07:08

கனம் கோட்டார் கருத்து கந்தசாமியாக மாறி ரொம்ப காலம் ஆகிவிட்டது. 42 பேர் செத்ததுக்கு நீதி வழங்க இந்த கோட்டாருக்கு புத்தி இல்லை இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்க கூடாதாம், இது எப்படி இருக்கு நடந்ததை அழித்துவிட்டு புதிதாக அறிவுரை சொல்வது கோர்ட் என்றால் காலம் காலமாக அறிவுரை சொல்லும் மன்றங்களாக மாறிவிட்டது..... யாருக்கும் வெட்கமில்லை


R Kay
ஜூன் 21, 2024 03:11

விற்கவைத்து மாமூல் பெற்ற அரசியல்வாதிகளுக்கு தண்டனை ஏதுமில்லையா? அவர்கள் குற்றவாளிகளில்லையா கனம் கோர்ட்டார் அவர்களே?


இராம தாசன்
ஜூன் 20, 2024 23:25

அடுத்த தேர்தலில் அவர்களுக்கு சீட் கொடுத்து அவர்களை முன்னுக்கு கொண்டுவருவோம் - ஏதோ எங்களால் விடியல் ஆட்சி முடிந்தது


Mohanakrishnan
ஜூன் 20, 2024 21:09

குண்டாஸ் சட்டம் ஒன்லி பேர் 10 ருபேஸ் திருடன்


தமிழன்
ஜூன் 20, 2024 21:07

அவர்களுக்கு ஒரு மாதிரி பதவி கொடுத்து விட வேண்டியது தான். இவ்வளவு தான் திமுக அரசின் திறமை. கணம் நீதிபதி அவர்கள் . சட்ட விரோதமாக அது விற்பனையை அனுமதித்த அரசு மீது என்ன நடவடிக்கை என்று கேட்க வேண்டாமா ? திமுக அரசை எந்த வித தயவு தாட்சண்யம் இல்லாமல் உடனடியாக கலைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.


தமிழ்வேள்
ஜூன் 20, 2024 19:43

எங்கள் கட்சியின் அட்சய பாத்திரமே அவர்கள் தான்... அப்புறம் எப்படி எஜமான்?...


elangovan
ஜூன் 20, 2024 20:27

Correct


KRISHNAN R
ஜூன் 20, 2024 19:25

இலவசம், குடி மற்றும் அனைத்தும்...யாரால்..நடத்தப்படுகிறது.. என்று ஊருக்கே தெரியும்... கேள்வி கேட்டு....


N Sasikumar Yadhav
ஜூன் 20, 2024 19:13

சம்பவத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக திறனற்ற திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை