உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காந்தி என்ன சொன்னார்? கேட்கிறார் அமைச்சர் ரகுபதி

காந்தி என்ன சொன்னார்? கேட்கிறார் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: 'காந்தி என்ன சொன்னார்? ஒரு பெண், நடு இரவிலே 12 மணிக்கு தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி விட்டு திரும்பும் நாளன்று தான் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார்' என அமைச்சர் ரகுபதி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு ரகுபதி அளித்த பேட்டி: யார் அந்த சார் என அ.தி.மு.க., கேள்வி எழுப்புகிறது. யார் அந்த சார் என்று அந்த சாருக்கு தான் தெரியும். விசாரணைக்கு பிறகு அந்த சார் யார் என்று தெரிய வரும். நாங்கள் அல்ல அந்த சார். காந்தி என்ன சொன்னார்? ஒரு பெண், நடு இரவிலே 12 மணிக்கு தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி விட்டு திரும்பும் நாளன்று தான் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார்.அதை இந்தியாவிலேயே கடைபிடிக்கும் மாநிலமாக தமிழகம் தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அந்த கட்சி தலைவர் (விஜய்) சென்று பார்த்து விட்டு வந்து பேசட்டும். அங்கு பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது. பத்து மணிக்கு மேல் இரவு அவர்கள் வெளியே நடமாட முடிகிறதா? தயவு செய்து வெளியே போர் பாருங்கள். முதலில் பீஹார், ஒடிசா மாநிலங்களுக்கு சென்று அவர் பார்த்துவிட்டு வந்து கூறட்டும்.நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று சொல்லும் அவருக்கு நாங்கள் இதை தான் பதிலாக சொல்கிறோம். தயவு செய்து வெளியே போய் பாருங்கள். இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று நாங்கள் நிரூபிக்கின்றோம். மக்கள் எங்களை நம்புவார்கள். மக்கள் மத்தியில் நாங்கள் விளக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சம்பா
டிச 31, 2024 05:48

உன்ன மாதிரி மட்டைகள விரட்டி அடிக்க சொன்னார்


Perumal Pillai
டிச 31, 2024 00:32

கொள்ளை அடிச்ச காசில் விநாயகர் பெயரில் ஒரு மெடிக்கல் காலேஜ் கட்ட சொன்னார் .


Bhakt
டிச 30, 2024 21:05

வாய் கூசலையா "சார்"?


Duruvesan
டிச 30, 2024 20:14

பெங்களூரு முழுக்க வந்து பாரு, தெரிஞ்சா பேசுங்க இல்லை மூடிட்டு இருங்க


Oru Indiyan
டிச 30, 2024 19:30

காந்தி தேச தந்தை எனர்ச்சல், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு காந்தி தான் அப்பாவா என்று அருவருப்பான வசனம் பேசிய திருடர் முன்னேற்ற கழகத்தின் மந்திரி ஏன் காந்தி பேசியதை பற்றி பேசுகிறார்.


N Sasikumar Yadhav
டிச 30, 2024 18:46

இவ்வளவு பெரிய காமெடியை கொஞ்சங்கூட சிரிக்காமல் சொல்லிவிட்டார் ஈவெ ராம்சாம் எழுதிய மரணசாசன 21ம்பக்க முன்னேற்ற கழக உறுப்பினர்


Hariharan S
டிச 30, 2024 18:22

அந்த குறை இல்லாமல் நீங்கள் தநா வை பீகார் ஒரிசா (பழைய) நிலைக்கு கொண்டு வந்துள்ளீர்கள்


சம்பா
டிச 30, 2024 16:16

எப்படி இப்படி கூசாம சொல்லுரார்


GoK
டிச 30, 2024 16:06

இவுனுங்க காந்தி பெயரை இழுக்குறாணங்களா, நாசமா போச்சு


R.MURALIKRISHNAN
டிச 30, 2024 14:54

பகலில் தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடக்க இயலவில்லை. எங்களுக்கு திமுக வேண்டாம் போப்பா.


முக்கிய வீடியோ