உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளர்.சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ndnr678m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் பெரிய கருப்பன் மொபைல்போன் மூலம் அஜித்குமார் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார்.தாயாரிடம் ஸ்டாலின் பேசுகையில், 'ரொம்ப 'சாரி'மா. தைரியமா இருங்கள். 'ஆக்சன்' எடுக்க சொல்லி உள்ளேன். சீரியசா 'ஆக்சன்' எடுக்க சொல்லியுள்ளேன். என்ன செய்யணுமோ செய்ய சொல்றேன். மந்திரி பார்த்து கொள்வார். தைரியமாக இருங்கள். உங்களை அழைத்தில் மகிழ்ச்சி' என்றார்.தொடர்ந்து அஜித்குமார் சகோதரரிடம் பேசிய ஸ்டாலின், ' வணக்கம் தம்பி. நடக்கக்கூடாதது நடந்து விட்டது. தைரியமா இருங்கள். 'ஆக்சன்' எடுக்க சொல்லியுள்ளேன். என்ன பண்ணணுமோ அமைச்சரிடம் சொல்லி செய்ய சொல்லயுள்ளேன். தைரியமாக இருங்கள். சம்பவம் நடந்ததும் நடவடிக்கை எடுத்துள்ளோம். கைது செய்துள்ளோம். செய்ய வேண்டியதை செய்து கொடுக்க சொல்கிறோம். நடந்ததை யாராலும் ஏற்க முடியாது. ஒத்துக்க முடியாது. தண்டனை பெற்று தருவோம்,' எனக்கூறினார். https://x.com/mkstalin/status/1940030888982847697இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அத்துடன் கூறியுள்ளதாவது: திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலன் கூறியுள்ளார்.

மாற்றம்

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது போலீசார் நடத்திய தாக்குதல்தான் மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 போலீசார் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.5 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. மாவட்ட எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். டி.எஸ்.பி., பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது.இருப்பினும், இந்தச் சம்பவத்தில் போலீசைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான சந்தேகமும் எற்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும்.இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி போலீசாரை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் போலீசார் எப்போதும் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

SVR
ஜூலை 02, 2025 09:30

எவ்வளவோ இந்த மமாதிரி கொலைகள் தமிழ் நாட்டில் நடந்துள்ளன. மிக நல்ல திராவிட மாடல் விடியாத அரசு.


Raj S
ஜூலை 02, 2025 00:56

காவல் துறை அமைச்சர் மொதல்ல பதவி விளக்கணும்... ஆனா இந்த துண்டு சீட்டு யாரு அந்த அமைச்சர்னு தெரியாதே??


GMM
ஜூலை 01, 2025 22:53

திருபுவனம் கொலையில் ஆதார பூர்வ தடயங்கள் சிக்கியதால், அனைத்து கட்சிகள், அதிகார வர்க்கம் குற்ற வீரியம் குறைக்க தடுமாறுகிறது. பெரும் குற்றம் நிகழ்ந்தால், ஆளும் கட்சி ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஆட்சி கலைக்க துணிந்த அதிகார அமைப்பு தேவை. ஆட்சி பிடிப்பு எளிது அல்ல. அப்போது தான் ஆட்சியாளருக்கு மரண பயம் வரும். நீதி விசாரணை, சிபிஐ விசாரணை ஒரு ஆறுதல் நடவடிக்கை. இனி சிக்காமல் குற்றம் தொடரும்.? ஆட்சி கலைப்பு மற்றும் கட்சி போட்டியிட தடை தான் சரியான மருந்து.


theruvasagan
ஜூலை 01, 2025 22:25

திருப்புவனம் விவகாரம் சிபிஐ க்கு மாற்றம். யார் மாற்றினது. முதல்வர் எந்த சிபிஐ . சிபிஐ என்றால் வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா என்று முன்பு இவர்களால் விமரிசிக்கப்பட்ட அமைப்பு. மாநில போலீசு துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறவருக்கே அந்த துறை மேல நம்பிக்கை இல்லை போல.


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 22:17

நடக்கக் கூடாதது நடந்துவிட்டது முதல்வர். சார் ஆமாம் சார். உங்கள் ஆட்சியில் 25 வது தடவை நடக்கக் கூடாதது நடந்து விட்டது சார்.


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 22:15

நிஜமாகவே வருத்தப்பட்டிருந்தால் நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கவேண்டும். ஆனால் அலைபேசியில் வெறுமனே சாரி சொன்னது ஏன்? அது வந்து. துண்டு சீட்டு எழுதிக் கொடுக்கும் நபர் லீவாம் .


HoneyBee
ஜூலை 01, 2025 21:22

இதை கூட ஏதாவது மடை மாற்றம் செய்து ஆர் எஸ் பி மீடியாக்களை வைத்து மக்களின் மனதை திசை திருப்பி விடுவார்கள் இந்த திராவிட மாடல்


Ramesh Sargam
ஜூலை 01, 2025 21:10

வரும் நாட்களில் வேறு ஒரு அவல நிகழ்வு ஏற்பட்டபின்பு, இந்த நிகழ்வு மறந்து போகும். இதுவும் கடந்து போகும் என்று சொல்வார்கள் அதுபோல.


m.arunachalam
ஜூலை 01, 2025 21:05

கோவில் விஜயம் பெருமைகளை பறைசாற்ற என்றும் , அணிந்துகொண்டு செல்லாமல் காரில் வைத்துவிட்டு சென்ற அந்த புண்ணிய ஆத்மாக்கள் ஆரம்பித்து வைத்த பிரச்சனை எங்குவரை சென்றுவிட்டது. இதில் முதல் குற்றவாளி அவர்கள்தான் .


rama adhavan
ஜூலை 01, 2025 20:57

இந்த கொலையில் மதியஸ்தம் செய்த திமுக காரர்கள், டி எஸ் பி முதலானோரை குற்றவாளிகள் பட்டியலில் கொலையை மறைக்க முயன்ற குற்றத்திற்கு எப் ஐ ஆர் போட்டு உள்ளே தள்ளி குற்றவாளிகள் லிஸ்டில் கூடுதல் சார்ஜ் ஷீட் போட வேண்டும்.