உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷா நிகழ்ச்சியில் பேனர் மாறியதன் பின்னணி என்ன?

அமித் ஷா நிகழ்ச்சியில் பேனர் மாறியதன் பின்னணி என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்ட பேனரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு தமிழகம் வந்தார். இந்த பயணத்தின் போது, தேர்தல் கூட்டணி மற்றும் பா.ஜ., மாநில தலைவர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gxc819ab&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., நிர்வாகி தமிழிசையின் தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறிய அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ., மாநில தலைவர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பின் போது, பின்புறம் வைக்கப்பட்டிருந்த பேனரில் செய்யப்பட்ட திடீர் மாற்றம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. குருமூர்த்தியுடனான சந்திப்புக்கு முன்பு, 'என்.டி.ஏ., கூட்டணி' என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால், 2026 சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களும் அமித் ஷாவுடன் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குருமூர்த்தியுடனான சந்திப்புக்கு பிறகு, 'பா.ஜ., தமிழகம், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பு' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பேனரில் நயினார் நாகேந்திரனின் போட்டோவும் இடம்பெற்றிருந்தது. இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Krishnamurthy Venkatesan
ஏப் 11, 2025 21:41

திமுக சில துண்டுகளை வீசி சட்டமன்ற தொகுதிகள் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளும். எதிர்க்கட்சிகள் ஓன்று சேராமல் இருப்பதற்கும் சில துண்டுகளை பணம், பொருட்கள் வீசும் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியலில் எல்லாம் சகஜம் என்ற சித்தாந்தத்தின்படி அதிமுக, பிஜேபி, ntk, pmk மற்றும் சில கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். பண பட்டுவாடாவை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மக்களும் ஓசி பிரியாணி, கட்டிங், இலவச பொருட்களுக்கு ஆசைப்படாமல் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்காகவும் போதை, குடி இல்லாத தமிழகத்தை உருவாக்க நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.


தஞ்சை மன்னர்
ஏப் 11, 2025 17:15

ஒருவேளை அமித் தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்கப்போகுது என்னவோ ஆடை வைத்து


Indian
ஏப் 11, 2025 17:01

என்ன பேனர் வைத்தாலும் நோட்டா தான்


வாய்மையே வெல்லும்
ஏப் 11, 2025 21:21

இம்ரான் ஷூ பாலிஷ் பத்தவில்லையாம் .. உங்க சேவையை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்


Barakat Ali
ஏப் 11, 2025 16:37

திமுக கூட்டணி 30 இடங்கள் .... அதிமுக கூட்டணி 190 இடங்கள் .... டிவிக்கே 5 .... மற்றவை 9 .....


மதிவதனன்
ஏப் 11, 2025 22:16

நான் கூட DMK O என்று போடுவீர்கள் என்று பார்த்தேன் , பெரிய மனசு பண்ணி 30 பாராட்டுக்கள்


Gnana Subramani
ஏப் 11, 2025 16:30

திராவிடத்தால் அழிந்தோம் என்று ஒரு கும்பல் இருந்ததே .


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஏப் 11, 2025 16:20

மும்மொழியில் போர்டு வைக்கமாட்டார்களா ?


V K
ஏப் 11, 2025 15:44

ரொம்ப முக்கியம் நாட்டு மக்களுக்கு இன்னும் எவ்வளவு நாற்காலி போட்டு இருக்கு அங்கே


Velan Iyengaar
ஏப் 11, 2025 15:42

அடிமை அமாவாசை அப்புறம் வர்ர்ரேன் என்று சொல்லி இருக்கும் .... மரம்வெட்டி வேற புது குண்டை தூக்கி போட்டுட்டார் .... ஆகவே ... என்னனு சொல்ல ... பேனரை மாத்திட்டோம் .... அம்புட்டுதேன் யுவர் ஆனர் வேணுன்னா பச்சமுத்து ...ஏ சி ஷண்முகம் .... பெயில் வாங்கி வெளியேவந்து தேவநாதன் எல்லோருக்கும் தலா ஒரு நாற்காலி போட்டுத்தாங்க


Pandi Muni
ஏப் 11, 2025 16:06

குல்லாவ மருந்திட்டியே மூர்க்கா


Ravichandran
ஏப் 11, 2025 15:25

ஒரு வருடத்திற்க்கு முன்பே நான் தெரிவித்தேன். அண்ணாமலை ஆடு அல்ல, ஆனால் பாலிஆடு என்று. பாவம் அவரை பலி கொடுத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. உழைப்பு அண்ணாமலை அவர்களுடையது, உண்பது யாருடையது?


K V Ramadoss
ஏப் 11, 2025 17:26

ஒன்றும் குடிமுழுகி போகவில்லை.. அண்ணாமலை இங்குதான் இருப்பார்.. அவருடைய சேவை தொடரும்.. அவர் எதிர்கால தமிழ் நாட்டு முதல்வர்..


Tiruchanur
ஏப் 11, 2025 14:25

2024ல் பாஜக பெற்றது 11.24% வாக்குகள். NDA பெற்றது 18.5% வாக்குகள். அண்ணாமலை பாஜக தலைவராக இல்லாமல் வேறு யார் வந்தாலும் அவை முறையே 8%, 13% ஆகிவிடும். பாஸ்க்கு இது நன்றாகவே தெரியும். அதான் இந்த கடைசி நிமிட மாற்றம்


visu
ஏப் 11, 2025 14:49

உணர்ச்சி வசப்படாமல் ADMK PMK DMDK பிஜேபி கூட்டணி அமைத்து காலம் கண்டால்தான் வெற்றி நிச்சயம் ADMK PMK DMDK கட்சிகள் நிலை உணர்ந்து பலத்துக்கேற்றவாறு இடங்களை பெற்றால் தி மு க வீழ்த்த முடியும் இல்லாவிட்டால் மறுபடி 5 வருடம் இந்த காட்டாட்சியை அனுபவிக்க நேரிடும் அண்ணாமலை ops தினகரன் கிருஷ்ணசாமி என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் EPS நிலையை கொஞ்சம் உணர்ந்து கொண்டு விட்டார் அப்படியே அண்ணாமலையோடு இணக்கமாக போனால் நல்லது


Velan Iyengaar
ஏப் 11, 2025 15:31

ஆட்டுக்குட்டியின் கடேசி நிமிடங்கள் என்று தலைப்பு போட்டிருந்தாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ...ஹா ஹா ஹா ஹா


Velan Iyengaar
ஏப் 11, 2025 15:35

மாயைகளை உருவாக்குவது ....இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக்கொள்வது .....11.24% கணக்கில் புகழ்வாய்ந்த மற்றும் மாபெரும் கட்சித்தலைவர்களான ஏ சி ஷண்முகம் ...பச்சமுத்து ....எனப்படும் பாரிவேந்தர் ....மயிலை பெனிபிட் ஃபன்ட் புகழ் தேவநாதன் , போன்ற சில உருப்படிகள் தாமரை சின்னத்தில் பெற்ற வாக்குகளும் அடங்கும் என்பதை நினைவூட்டுகிறேன் ... மேலும் கோவை மற்றும் குமரி தொகுதிகளை கழித்துவிட்டு கணக்கிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன் அப்போ உண்மையான கணக்கு தெரியும் ... அந்த கணக்கில் ஆட்டுக்குட்டி செல்வாக்கா இல்ல செல்லாக்காசா என்பதும் புலனாகும் .....


Nallavan
ஏப் 11, 2025 15:50

ஈபிஎஸ் மற்றும் அதிமுக, எப்போதும் பிஜேபி பற்றி தவறாக பேசியது இல்லை. ஆனால் அண்ணாமலை, அதிமுக ஆட்சி, தலைவர்கள் அனைவரையும் தவறாக பேசினார். இப்போது ஈபிஎஸ், அண்ணாமலை யுடன் இணக்கமாக போகவேண்டும் என்றால், என்ன அவசியம். ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை