உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரத்தில் 5 பன்னீர்செல்வத்தின் நிலை என்ன?: ஓபிஎஸ் வெற்றியை பாதித்ததா?

ராமநாதபுரத்தில் 5 பன்னீர்செல்வத்தின் நிலை என்ன?: ஓபிஎஸ் வெற்றியை பாதித்ததா?

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அதே பெயரில் மொத்தம் 5 பேர் களமிறங்கினர். அவர்களின் ஓட்டு நிலவரம் வெளியாகி வருகின்றன. இவர்கள் ஓட்டுகளை சேர்த்தாலும் ஓபிஎஸ் வெற்றிக்கு உதவாது.ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 'பலாப்பழம்' சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதில் தனது பலத்தை நிரூபித்து அதிமுக.,வினரை ஒன்றிணைத்து கட்சியை கைப்பற்றிவிடலாம் என எண்ணி இருந்தார். ஆனால், அவருக்கு போட்டியாக அதே பன்னீர்செல்வம் பெயரில் மேலும் 4 பேர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம், இடைஞ்சல்கள் வந்தாலும் வெற்றி பெறுவோம் என களப்பணியாற்றினார்.இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டுவரும் ஓட்டுகளில், மதியம் 12:30 மணி நிலவரப்படி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 53,167 ஓட்டுகளுடன் 2வது இடத்தில் (41,260 ஓட்டுகள் வித்தியாசம்) உள்ளார். ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்பவர் 573 ஓட்டுகளும், மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் என்பவர் 433 ஓட்டுகளும், ஒய்யாதேவர் மகன் பன்னீர்செல்வம் என்பவர் 314 ஓட்டுகளும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என்பவர் 107 ஓட்டுகளும் பெற்றனர். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு கூட 1230 ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால், 'டம்மி'யாக களமிறங்கி 4 பேரும் அதில் பாதியை கூட பெறவில்லை. அதே சமயம் இந்த டம்மி பன்னீர்செல்வங்களின் ஓட்டுகளை மொத்தமாக எண்ணினாலும். ஓபிஎஸ்-க்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

saravanan
ஜூன் 05, 2024 11:54

ராமநாதபுரம் தொகுதி மக்கள், வெளிநாட்டுக்காரன் எலெக்ஷனிலே நின்று அதிக பணம் கொடுத்தால் அவனுக்கே கண்டிப்பாக ஓட்டு போடுவார்கள் அப்படிப்பட்ட அறிவுமிக்கவர்கள்.


Dhivya 1960
ஜூன் 05, 2024 09:22

ஜெ க்கு பிறகு எடப்பாடி கையில் உள்ள இரட்டை இலை, ...இலை போல் அதிமுக உள்ளது ...துரோகம் செய்து வந்த எடப்பாடிக்கு மக்களின் தீர்ப்பு சவுக்கடி போல் இருக்கும்


முரளி
ஜூன் 04, 2024 21:47

கழகத்தை கோட்டை விட்டால் இதுதான் நிலைமை ?


M Selvaraaj Prabu
ஜூன் 04, 2024 21:16

டம்மியாக இறங்கினாலும் இறங்கியவர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து இருப்பார்கள். பின் இவர்களுக்கு என்ன கவலை?


Jones
ஜூன் 04, 2024 21:00

அதிமுகவின் துரோகி


Kumar Kumzi
ஜூன் 04, 2024 22:34

நீ இந்திய தேசத்தின் துரோகி


K V Ramadoss
ஜூன் 04, 2024 18:16

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.


aaruthirumalai
ஜூன் 04, 2024 13:47

பன்னீரீன் கண்களில் கண்ணீர்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி