உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல; முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல; முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

சென்னை: தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது.இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள். பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
மே 08, 2025 22:42

2026 தேர்தலில் திமுக தோல்வி அடையும். அப்பொழுது நீங்கள் கூட அதுவே முடிவல்ல என்று இருக்கவேண்டும்.


Keshavan.J
மே 08, 2025 20:51

அன்புள்ள அப்பா தேர்தல் முடிவு எதுவானாலும் அதுவே முடிவு . அழக்கூடாது. EVM டுபாக்கூர் என்று சொல்ல வேண்டும்.


என்றும் இந்தியன்
மே 08, 2025 17:34

ஒரே வார்த்தையில் என்னைப்பாருங்கள் எதற்கும் லாயக்கில்லாதவன் என்று என்னை சொன்னார்கள் இப்போது நான் டாஸ்மாக்கினாட்டின் முதல் மந்திரியாய் இருக்கின்றேன் பாருங்கள் இதைத்தான் ஸ்டாலின் சொன்னார் என்று அறிவோமாக


Suppan
மே 08, 2025 16:53

இதே அறிவுரையை நீட் தேர்வுக்கும் கூறியிருக்கலாம் விடியலார் . என்னவோ


வாய்மையே வெல்லும்
மே 08, 2025 15:11

தலீவா எவன் கணக்கில் முட்டை வாங்கினானோ அவனுக்கு பெருமை படுத்த அரசு வேலை கொடுக்கவும். அது தான் மாடல் அரசு செய்யும் தரமான அரசியல்.. செய்யுங்க கலியுக ஊரான் வீட்டு அப்பனே. உன்னால தான் பயித்தியக்கார அரசியல் செய்யமுடியும்.


SUBRAMANIAN P
மே 08, 2025 14:12

ஆமா, இப்போ ஐயாவுக்கும், அவரு மகனுக்கும் தான் துண்டுச்சீட்டு இருந்தாக்கூட ஒழுங்கா தமிழையே படிக்கத்தெரியாது. எப்படி முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருக்காங்க. அதனால படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்ல.. போனாப்போகுது அரசியல்வாதி ஆகிடுங்க. எந்த தகுதியும் வேண்டாம்..


Kjp
மே 08, 2025 12:51

பெயி.லான வர்கள் கவலை வேண்டாம்.அடுத்து ஆட்சிக்கு வந்தால் ஆல் பாஸ் போட்டு விடுவோம்பண்ணிரண்டாம் பொது தேர்வையே ரத்து செய்து விடுவோம்.. .


Ram
மே 08, 2025 12:19

ஐயா இதில் ஃபெயில் ஆகி மன வேதனை அடைவர்களுக்காக இந்த தேர்வு முறையை ரத்து செய்து விடுங்கள், ஓஹா அடுத்த தேர்தல் வாக்குறுதி.


D Natarajan
மே 08, 2025 11:37

எல்லோரும் பாஸ் .


நாஞ்சில் சேகர்
மே 08, 2025 10:32

நீட்டை ரத்து செய்வோம் 2026 கண்டிப்பாக ?


சமீபத்திய செய்தி