உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் மனதில் இருப்பது என்ன: சர்வே எடுக்கிறது உளவுத் துறை!

மக்கள் மனதில் இருப்பது என்ன: சர்வே எடுக்கிறது உளவுத் துறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசியல் கள நிலவரம், தேர்தல் வந்தால் யாருக்கு சாதகம் பாதகம் என்பது குறித்து உளவுத்துறை போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர்.தமிழகத்தில் ஆளும் கட்சியின் பதவிக்காலம் வரும் 2026ல் முடிவடைகிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஆளும்கட்சி பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதை எதிர்பார்த்து எதிர்க்கட்சியினரும் தங்கள் பிரசாரத்தை முன்கூட்டியே துவக்கி விட்டனர்.இத்தகைய சூழ்நிலையில் மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களிடையே சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். உளவுத்துறை போலீசார், கிராமங்களுக்கு நேரில் சென்று கருத்து சேகரித்து வருகின்றனர்.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், சட்டசபை தொகுதி வாரியாக பிரசாரம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அவர் மக்கள் மற்றும் விவசாயிகளிடம் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் என்ன திட்டங்களை செய்யும் என்பதை வாக்குறுதி அளித்து வருகிறார். இதனால் மக்களை இ.பி.எஸ்., சந்தித்து பேசும் போது மக்களின் ஆதரவு எப்படி உள்ளது, என்னென்ன தேர்தல் வாக்குறுதிகள் தெரிவித்தார் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.தி.மு.க., அரசின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பது குறித்தும் உளவுத்துறையினர் தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

உ.பி
ஜூலை 24, 2025 03:28

மாதாந்திர இ.பி ரீடிங், பெட்ரோல் 75 ரூபாய், சிலிண்டர் மானியம் 100 ரூபாய். இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினால் திமுக ஜெயிக்கும்


பாரத புதல்வன்
ஜூலை 23, 2025 21:54

குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சின் தீமைகளை இலங்கையில் ராஜ பக்சே நடத்திய அரசால் மக்களுக்கு நடந்தது என்ன என்பதை தமிழக மக்கள் புரிந்து அறிந்து எதிர் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் இலங்கை நிலைமை தான் நமக்கும்.டெங்கு, மலேரியவை போல ஒழிக்க பட வேண்டியது குடும்ப வாரிசு ஆட்சியைத்தான்.


anbu suresh
ஜூலை 23, 2025 21:39

அவர் வர்றது இருக்கட்டும் நீ அதுக்கு மேல போய் சேர்ந்துடாத


பாரத புதல்வன்
ஜூலை 23, 2025 18:48

சர்வே அறிக்கை ஒன்றை மட்டுமே பிரதானமாக கூறுகிறது அதாவது தீ மு க வை ஆட்சியை2026 தேர்தலில் அகற்றும் முடிவு 100 சதம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது..


T MANICKAM
ஜூலை 23, 2025 17:59

உளவுத்துறை ஒன்றும் நிர்ணயம் செய்யமுடியாது.கள்ள ஓட்டே ஜெயிக்கும்...


என்றும் இந்தியன்
ஜூலை 23, 2025 17:43

டாஸ்மாக்நாடு உளவுத்துறை போலீசார் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டதே " திராவிட மடியல் அறிவிலி அரசின் ஏவல் துறை" என்று ஆகவே அந்த செயலை செவ்வனே செய்கின்றார்கள், அது தானே இந்த செய்தியின் சாராம்சம்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூலை 23, 2025 17:17

சர்வே எதற்கு. தி முக ஒழிந்தால் போதும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 23, 2025 17:09

உங்களுடன் ஸ்டாலின் என்று சொல்லிவிட்டு ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டார். எந்திரிச்சு வரட்டும். அப்புறம் பாத்துக்கலாம்.


sankaranarayanan
ஜூலை 23, 2025 16:56

தமிழக அரசியல் கள நிலவரம், தேர்தல் வந்தால் யாருக்கு சாதகம் பாதகம் என்பது குறித்து உளவுத்துறை போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர்.இதை உடனே உச்ச நீதிமன்றம் தடை செய்யவேண்டும் ஆட்சியில் இருக்கும் இவர்கள் எப்படி உளவுத்துறையை சம்பந்தமே இல்லாத வேலைக்கு இவர்களுக்கு சாதகமாக இருக்க பயன்படுத்தப்படுகிறது இது முற்றிலும் தவறு வேண்டுமானால் இவர்கள் கட்சி ஆட்களை நியமித்து இந்த வேலையை செய்யலாம் உளவுத்துறை அரசாங்க நபர்களை பயன்படுத்தக்கூடாது


D.Ambujavalli
ஜூலை 23, 2025 16:50

கைப்புண்ணுக்கு கண்ணாடியா ? இன்னும் எட்டு மாதம் இருக்கிறதே, எப்படித்தான் தள்ளப்போகிறோமோ, எது எதில் விலைஏற்றமோ, எத்தனை வரிகளோ, இந்த ‘custody murder’ எண்ணிக்கை பொன் விழாக்காணுமா அல்லது century யே போடுமா என்று நீண்டுகொண்டே போகிறது உளவுத்துறை பத்துப்பேரை ‘தயாரித்து’ மாடல் questionnaire தயாரித்து, அளிக்கப்போகும் அறிக்கையில் ‘இன்னும் நூறாண்டு காலம் திமுகவே, இன்பநிதி யின் கொள்ளுப்பேரன் வரை வந்து, தமிழ் நாட்டில் ஒரு மூலை முடுக்கு விடாமல் கொள்ளை அடிக்க வேண்டும் என்று விரும்புவதாகத்தான் இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை