உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழைக்காலம் வந்தாலே மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை

மழைக்காலம் வந்தாலே மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை

சென்னை:மழைக்காலம் வந்தாலே மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தி.மு.க., அரசுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம்தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், சென்னை மாநகரின் எந்தப் பகுதியிலும் வெள்ளத் தடுப்புப் பணிகள் முடிந்ததாக தெரியவில்லை.இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக வடகிழக்கு பருவ மழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆனாலும், அதுகுறித்த எந்த அக்கறையுமின்றி, மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வெள்ளத் தடுப்பு பணிகளை, அரசு மிகவும் அலட்சியமாக மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.2021ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் சென்னையில் மழைவெள்ள பாதிப்புகள் அதிகரித்து விட்டன. வெள்ளத் தடுப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததே காரணம். கடந்த ஆண்டு பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது குடும்பத்திற்கு 6000 ரூபாய் வழங்கி மக்கள் கோபத்தை தணிக்க, தி.மு.க., அரசு முயன்றது.ஆட்சியாளர்களின் திறமையின்மை, தொலைநோக்குப் பார்வையின்மை, வெள்ளத் தடுப்புப் பணிகளில் கூட ஊழல் போன்றவற்றால், வடகிழக்குப் பருவ மழை என்றாலே அஞ்சி நடுங்கும் நிலைக்கு, சென்னை மாநகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த அவல நிலைக்கு முடிவு கட்ட, வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ