உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு தற்கொலை எப்போது நிற்கும்?

நீட் தேர்வு தற்கொலை எப்போது நிற்கும்?

தமிழகத்தில் 'நீட்' தேர்வை எதிர்கொள்ள பயந்து கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபோல, இரு மாதத்தில் மட்டும் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால், மாணவ - மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது. நீட் தேர்வு தற்கொலைகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., நீட் தேர்வை வாபஸ் பெற வலியுறுத்தும் மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி, அதோடு தன் கடமையை முடித்துக் கொண்டு விட்டது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என, மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், 'சட்ட போராட்டம் நடத்துவோம்' என, வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை. நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது, மத்திய அரசு.மாணவ - மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு, மாணவ குலத்திற்கு எதிரானது. உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போதுதான் ஒழியும்?- அன்புமணி, பா.ம.க.., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜான் குணசேகரன்
மே 05, 2025 02:01

எல்லா தேர்வுகளிலும் தோல்வி பயத்தில் தவறான முடிவு எடுப்பவர்கள் இருக்கிறார்கள். அவற்றில் அரசியல்வாதிகள் லாபம் குறைவு. ஆனால் மருத்துவ கல்லூரி சீட்டுகளில் கொள்ளை லாபம். மேங்கோ, திராவிட வாரிசுகள் மாதிரி மருத்துவ கல்லூரிகளிலும் வாரிசு அடிப்படையில் சீட்டு கொடுத்து விட்டு போகலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை