உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது? அரசு மவுனம்: பஸ் ஊழியர்கள் அதிருப்தி

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது? அரசு மவுனம்: பஸ் ஊழியர்கள் அதிருப்தி

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பில் மறுதேதி அறிவிக்கப்படாமல் இருப்பது, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.23 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. முதற்கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம்பேட்டையில், கடந்த ஜூலை 27ல் நடந்தது. இரண்டாம் கட்ட பேச்சு, கடந்த 27, 28ம் தேதிகளில் நடக்க இருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 26ம் தேதி இறந்ததால், அரசு சார்பில் ஒரு வாரம் துக்கம் அறிவிக்கப்பட்டது. எனவே, முத்தரப்பு பேச்சு மறுதேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. ஆனால், ஊதிய ஒப்பந்த பேச்சு மட்டும் நடத்தாமல் இழுத்தடிப்பது, போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதில், அரசு தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜனவரி இறுதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். பிப்ரவரி மாத சம்பளத்தில் புதிய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தொழிற்சங்கங்கள் கூடி அடுத்தக்கட்ட போராட்டங்களை துவக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தனி
ஜன 01, 2025 01:28

குருமா, பாலகிருக்கன், முத்துஆண்டி பெய்டர் வைகோ இவன்கலெல்லாம் என்ன செய்யுராங்கள் வாயில் வாழைபழமா??


S.L.Narasimman
டிச 31, 2024 13:04

அதிமுக ஆட்சியின் போது இடைவிடாது போராட்டங்களை நடத்தி அரசுக்கும் பொதுமக்களுக்கும் கடும் இடையூறு செய்தவர்கள் இப்ப விடியல் காலில் விழுந்து கதறும் பரிதாபம்


duruvasar
டிச 31, 2024 09:51

நாயீனர் நைனா, உங்க தோழர்களும் புதிய ஒப்பந்ததிருக்குத்தான் காத்து கொண்டு இருகிறார்கள். முதலில் அது முடியட்டும். தொழிலார்கள் எங்க போயிட போறாங்க. பொறவு பார்த்துக்கலாம்.


srinivasan
டிச 31, 2024 09:42

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத விடியா ஆட்சி


கௌதம்
டிச 31, 2024 08:45

வாங்கண்ணே வாங்க... லிஸ்ட் ல நீங்களும் இருக்கீங்க


raja
டிச 31, 2024 08:20

ஒங்கப்பாவுக்கும் பெப்பெ... உன் பாட்டனுக்கும் பெப்பே....கொய்யால யாருகிட்ட...திருட்டு திராவிட மாடல் ஆட்சிடா...


chennai sivakumar
டிச 31, 2024 08:00

யேகப்பட்ட நஷ்டத்தில் இருக்கும் போக்கு வரத்து கழகம் இப்போது உள்ள சம்பளம் ஒழுங்காக வருகிறதா என்று பாருங்கள். ஓய்வூதிய பலன் இல்லாமல் உங்களுடன் பணிபுரிந்தவர் படும் கஷ்டத்தை சிந்தியுங்கள். தெளிவு பெறுங்கள். ஓட்டை காசுக்கு விற்றால் இதுதான் முடிவு


Kasimani Baskaran
டிச 31, 2024 07:36

ஓட்டுப்போட இருக்கும் காலத்தில் உதவி வரும். மற்ற நேரங்களில் நொ சான்ஸ்.


ராமகிருஷ்ணன்
டிச 31, 2024 07:06

உங்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதால் திமுகவிற்கு ஓட்டுகள் வராது. அந்தப் பணத்தை இலவசமாக மக்களுக்கு கொடுப்பதாக விளம்பரம் மட்டுமே செய்தால் கூட ஓட்டு வருமே. போயி வேற வேலை வெட்டிய பாருங்க


Bye Pass
டிச 31, 2024 06:33

தினம் ஒரு போராட்டம் நடந்தாலும் திறமையாக ஆள்வதாக நினைப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை