உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்கே செல்லும் பழனிசாமியின் பாதை: எழுச்சி பயணத்திற்கு கூடும் கூட்டம் ஓட்டுகளாகுமா

எங்கே செல்லும் பழனிசாமியின் பாதை: எழுச்சி பயணத்திற்கு கூடும் கூட்டம் ஓட்டுகளாகுமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:சட்டசபை தேர்தலை கணக்கிட்டு தமிழகத்தில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் பேச்சை கேட்க கூடும் கூட்டம் ஓட்டுகளாக மாறும்; ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என கட்சியினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பழனிசாமி எழுச்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நான்காம் கட்ட பயணத்தில் செப்.,1 முதல்மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கட்சியில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். தென்மாவட்டங்களுக்கு அ.தி.மு.க., முகமாக இருந்தவர் என்பதால், அதை ஈடுகட்ட கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மதுரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினார். புரட்சி தலைவர், புரட்சி தலைவி வரிசையில் பழனிசாமிக்கு 'புரட்சித் தமிழர்' பட்டம் சூட்டப்பட்டது.அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றதன்மூலம் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தன்பக்கமே உள்ளனர் என மாநாடு வாயிலாக தொண்டர்களுக்கு பழனிசாமி உணர்த்தினார். அதேசமயம் உட்கட்சி பூசல் காரணமாக நீதிமன்றத்தில் இரட்டை இலை முடக்கம், பொதுச்செயலாளர் பதவியை பறிக்க வழக்கு தொடரப்பட்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயலலிதா பாணியில் சட்டசபை தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பே பிரசாரத்தை 'எழுச்சி பயணமாக' தொடங்கி, தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.கட்சியின் அடையாளம் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியால் உற்சாகமடைந்த இரு கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் பழனிசாமிக்கு அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர். அந்தந்த தொகுதிக்கு என்னென்ன தேவையே அதை தேர்தல் வாக்குறுதியாக இப்போதே பழனிசாமி சொல்லி வருவது கட்சியினரிடையே நம்பிக்கையை அளித்துள்ளது. அதேசமயம் பழனிசாமியின் பேச்சை கேட்க அனைத்து இடங்களிலும் எதிர்பாராத அளவில் பெரும் கூட்டம் கூடுகிறது. இது அழைத்துவரப்பட்ட கூட்டம் என தி.மு.க., கூட்டணி கட்சியினர் கூறி வருகின்றனர். இதை பொருட்படுத்தாத அ.தி.மு.க.,வினர், 'பொதுமக்களும் வருகின்றனர். எல்லா கட்சிகளும்தான் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல. வந்தவர்கள் பெரும்பாலனோர் தொழிலாளர்கள். அவர்கள் ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளம் கிடைக்காது. அதைதான் நாங்கள் கொடுத்து போக்குவரத்து செலவை குறைக்க அழைத்து வருகிறோம்' என்கின்றனர்.செங்கோட்டையன் நேற்றுமுன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த போது,'தென் மாவட்டங்களில் கட்சியின் நிலை உங்களுக்கு தெரியும்' என்று ஒ.பன்னீர்செல்வம் கட்சியில் இல்லாததை நினைத்து வருத்தத்துடன் கூறினார். ஆனால் அந்த அளவிற்கு தென்மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இதனை பழனிசாமியின் சுற்றுப்பயணமும் நிரூபித்து வருகிறது.கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியின் அடையாளமாக பழனிசாமி பார்க்கப்படுகிறார். ஜாதி ஓட்டுகள், பெண்கள் ஓட்டுகளை தாண்டி, இளைஞர்களையும் அவரது பேச்சு ஈர்த்து வருகிறது என்பது உண்மை. அவருக்கு கூடும் கூட்டம் நிச்சயம் ஓட்டுகளாக மாறும். அவரது பயணம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Thravisham
செப் 07, 2025 22:28

உண்மையான கூட்டம் கூடுவது அண்ணாமலைக்கு மட்டுமே


ராஜா
செப் 07, 2025 19:36

பல ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்டல நண்பர் சொன்ன கருத்து “அவா காரியம் எல்லாம் விளக்கெண்ணெய் போன்று வழவழ என்றார், சரியாகத்தான் இருக்கிறது.


Oviya Vijay
செப் 07, 2025 16:07

இதில் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால் இவர்களது பொதுக்கூட்டத்திற்கு சேரும் கூட்டம் தானாக சேரும் கூட்டம் அல்ல... பணம் கொடுத்து அந்தந்த ஏரியா நிர்வாகிகளால் அழைத்து வரப்படும் கூட்டம் என்பது பலரும் அறிந்ததே... கூட்டத்தைக் காண்பிக்காவிட்டால் மேலிடத்தின் நடவடிக்கை பாயும் என பயந்து கூட்டத்தை சேர்த்த ஏரியா நிர்வாகிகள் அதற்காகப் பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர்... எப்படியாவது ஜெயித்து விட்டால் திரும்பவும் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணம்... ஆனால் 2026 தேர்தலில் மக்கள் நாமம் போடுவார்களேயானால் இப்போது நிர்வாகிகள் வட்டிக்கு வாங்கி தண்ணியாகச் செலவு செய்யும் பணம் எல்லாம் கானல் நீராய்ப் போய்விடும்... கோடிக்கணக்கில் பதுக்கிய தலைமையோ சுக வாழ்வு வாழ நிர்வாகிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம்... 2026 தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி மட்டுமே கண்களுக்கு எளிதாகப் புலப்படுகிறது... அடுத்த தேர்தலில் தவெகவை விட குறைந்த ஓட்டுக்களைப் பெறப்போகிற அதிமுகவிற்கு தலைக்கனம் மட்டும் குறைந்தபாடில்லை... ஏதோ தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர்கள் போல ஓவராக சீன் போட்டுக் கொண்டுள்ளனர்... ஏற்கனவே 10 தேர்தல்களில் தொடர் தோல்வி... அவற்றோடு 2026 ல் மேலும் ஒன்று... அதிமுக நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... எப்படியும் தேர்தலில் ஜெயித்து அதிமுக ஆட்சி அமைத்து விட்டால் அரசியலில் எளிதாக சம்பாதித்து விடலாம் என்று எண்ணி தற்போது பணத்தை வாரி வாரி செலவிட வேண்டாம்... ஏனெனில் தேர்தல் முடிந்ததும் கடனாளியாகிப் போவீர்கள்... ஜாக்கிரதை... இதயங்கள் பத்திரம்...


pakalavan
செப் 07, 2025 15:55

வார்டுகளில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தனும், 5 ஆட்டோவில் 15 டு 20வது ஆட்களை கூட்டிட்டு வரனும், தலைக்கு 200 ரூபாய், இது தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்குது, எடப்பாடியை யாரும் நம்பமாட்டாங்க,


Senthil Senthil
செப் 07, 2025 15:06

ஓட்டு களாக மாறாது 200 ரூ இந்த கூட்டம் எந்த கட்சி கூட்டம் கூட்டினாலும் வரும் காசு கொடுத்தா கூடும்


GUNA SEKARAN
செப் 07, 2025 14:21

எடப்பாடி பழனிசாமி சுயநலக்காரர். தன்னை நம்பிய அனைவருக்கும் துரோகம் செய்தவர். அதிமுக முக்கியமல்ல. தன்னுடைய பதவி சட்டத்திற்குப் புறம்பாக சேர்த்த சொத்துக்கள் போபற்றவையே முக்கியம்,


K.SANTHANAM
செப் 07, 2025 12:53

200 ரூபாய், டிபன் கொடுத்து ஆட்களை சேர்க்கிறார்கள்.


திகழ்ஓவியன்
செப் 07, 2025 13:27

ஏன் எலெக்டரால் பாண்ட் என்று அடித்த பணம் இருக்கே நீங்களும் கொடுத்து கூட்டம் கூடுங்கள்


pakalavan
செப் 07, 2025 11:55

காசு குடுத்து கூட்டும் கூட்டம் என்பதே உண்மை, இவனுக்கு வெற்றி கிடையாது


S.L.Narasimman
செப் 07, 2025 11:54

அதிமுக ஏழை எளியவர்களுக்காக தோன்றிய கட்சி. அதன் கொள்கைகளும் திட்டங்களும் எளியோரின் பொருளாதார நலம் சார்ந்தவைகளாக இருந்து கொண்டிருப்பதால் தீய சக்தி கட்சி போல் பணம் குவாட்டர் பிரியாணி கொடுத்து அழைத்து வர வேண்டி அவசியம் இருக்காது.. தானாக கூடும் கூட்டம். காசுக்காக பல்லிளித்து பொய் கயமை செய்திகளை போடும் இன்றைய செய்தி தொலைகாட்சி சமூக வலைதளங்களை நம்பாத கூட்டம்.


Thravisham
செப் 07, 2025 22:26

கொங்கு மண்டலத்தில் ஓருவர் எடப்ஸிடம் எம்பி சீட் வாங்கினார். ஆனால் 3ம் இடத்தில வந்தார். 2ம் இடத்தில பாஜக வந்தது.


Oviya Vijay
செப் 07, 2025 11:37

கோடிக்கணக்கில் பதுக்கிய தலைமையோ சுக வாழ்வு வாழ நிர்வாகிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை