உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறந்த ஓய்வூதிய திட்டம் எது? தமிழக அரசு குழு அமைப்பு

சிறந்த ஓய்வூதிய திட்டம் எது? தமிழக அரசு குழு அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மாநில அரசு ஊழியர்களுக்கு சிறந்த ஓய்வூதிய திட்டம் எது என்பது குறித்து ஆராய, தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003 ஏப்ரலில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஜனவரியில் தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இருப்பினும், மாநில அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. மாநில அரசு ஊழியர்கள் 2003 ஏப்ரலுக்கு முன் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்டங்கள் நடத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த ஜனவரியில் மத்திய அமைச்சரவை ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இது வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. இந்த மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட, குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் சண்முகம், நிதி துறை உறுப்பினர் செயலர் பிரத்திக் தாயள் ஆகியோர் அடங்கிய குழுவை அரசு அமைத்துள்ளது.இந்த குழு, மாநில அரசின் நிதிநிலை மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் வைத்து, நடைமுறைப்படுத்தக் கூடிய ஓய்வூதிய முறையை பரிந்துரை செய்யும். இந்த குழுவின் பரிந்துரைகளை, ஒன்பது மாதத்திற்குள் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
பிப் 05, 2025 16:56

தேர்தல் முடியும் நேரத்ல கமிட்டி அறிக்கையை வெளியிட்டு வாக்குறுதி கொடுப்பது. பிறகு நீட், மதுவிலக்கு மாதிரி மறக்கடிக்கப்படும்.


ஆரூர் ரங்
பிப் 05, 2025 11:08

ஒரு விஷயத்தை ஊற்றி மூட இரண்டு வழிகள். ஒன்று கமிட்டி போடுவது. இன்னொரு வழி அதன் மீது கல்லைத் தூக்கிப் போடுவது. திருட்டு திமுகவின் தேர்தல் முறைகேடுகளுக்கு துணைபோன அரசு ஊழியர்களுக்கு சரியான பாடம்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 05, 2025 10:06

ஐடியா அய்யாசாமிகள் நிறைந்தது மாடல் கட்சி. நான்கு வருடங்களில் ... இப்போது குழு அமைத்து இருக்கிறார்கள். இதையும் நம்பி அழகு தமிழில் ஜாக்கடோ ஜயோ எனப் பெயர் வைத்திருக்கும் சங்கத்தினர் ஐம்புலன்களையும் மூடிக்கொண்டு கழகத் தேர்தல் பணியாற்றி 2026 ல் இளைய தளபதிக்கு அரியணை அமைத்துக் கொடுப்பார்கள். இவர்கள் அமைத்துள்ள குழு பணியை மார்ச் மாதம் துவங்கும். ஒன்பது மாதம் என்பது இந்த ஆண்டு முடிந்துவிடும். அடுத்த ஆண்டு இடைநிலை பட்ஜெட் சமர்ப்பிக்கும் போது ஓய்வூதியம் பற்றி ஓரிரு வரிகள் உண்டு இல்லை சாதகம் பாதகம் எதுவுமில்லாமல் இருக்கும். அப்புறம்? அப்புறம் என்ன, தேர்தல் வோட்டுப்பிச்சை ஓட்டு க் கொள்ளை இத்யாதிகள்


Ganesan
பிப் 05, 2025 12:14

மிக சரியாக கூறியுள்ள நண்பர், மீண்டும் அடுத்த தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறுகின்ற கோரிக்கை.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 05, 2025 09:57

சிலரது கருத்துக்களில் கூறி இருப்பது போல இது ஈரோட்டு இடைத்தேர்தலுக்காக அல்ல. ஈரோட்டு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது நிச்சயம். கடைசி இரண்டு நாட்களில் ஒரே ஒரு சட்ட மன்ற தொகுதிக்கு மட்டுமே சுமார் 80 கோடிகளுக்கும் மேல் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இதிலிருந்து 2026 ல் 234 தொகுதிகளுக்கு சுமார் 20000 கோடிகள் செலவிடப்படும் என்பது நன்றாகவே தெரிகிறது


தமிழ் மைந்தன்
பிப் 05, 2025 08:18

இந்த குழு, மாநில அரசின் நிதிநிலை மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் வைத்து, இந்தகுழுவில் உள்ள சண்முகம் என்பவருக்கு அரசின் நிதி மற்றும் ஊழியர்கள் கோரிக்கைகள் பற்றி புரிந்துகொள்ள அறிவு இருக்குமா? இது தேர்தலில் மீண்டும் ஏமாற்ற போடும் திட்டம் ஏற்கனவே 99 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவற்ற பட்டுள்ளதாக சொன்னது பொய்யா ?


Rajagiri Apparswamy
பிப் 05, 2025 06:18

எம் பி மற்றும் எம் எல் எ களுக்கு தரும் ஓய்வூதிய முறை பின்பற்றி ஓய்வூதியம் வழங்கவேண்டும் .


raja
பிப் 05, 2025 06:11

திருட்டு திராவிடன் ஐடியாவா பாரு தமிழா... நாலுவருடமா செய்யாம இப்போ குழு வாம்.. இனி ஒருத்தனும் பழைய ஓய்வு ஊதிய திட்டமுண்ணு பேசுவான்...


Prabakaran J
பிப் 05, 2025 05:31

20 varasum panna mudiyathata 9 months la kuzhu panna mudiyuma - DMK model treats govt staffs similar to SC and ST - samuganithi


S Nagarajan
பிப் 05, 2025 05:23

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காகவா?


J.V. Iyer
பிப் 05, 2025 05:17

அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏ. இவர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்தாலே சிறந்த திட்டமாக வரவேற்கப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை