உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிட்னி விற்பனை மோசடியில் யாருக்கு பொறுப்பு? மருத்துவமனை நழுவ முடியாது என்கிறது ஐகோர்ட்

கிட்னி விற்பனை மோசடியில் யாருக்கு பொறுப்பு? மருத்துவமனை நழுவ முடியாது என்கிறது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'சிறுநீரகம் விற்பனை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிய வேண்டும். பின் விசாரணையை துவக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிறுநீரக விற்பனை முறைகேடு தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ., நடத்த உத்தரவிட வேண்டும் என, கோரி இருந்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜரானார்.தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பள்ளிப்பாளையம் பகுதியில் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தொடர்பாக சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான குழு விசாரித்தது.சிறுநீரகத்தை தானமாக வழங்க ஒருவருக்கு, புரோக்கர் பணம் கொடுத்தது தெரியவந்தது. தானமாக கொடுத்தவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டது ஸ்கேன் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க, திருச்சி, பெரம்பலுாரிலுள்ள இரு மருத்துவமனைகளுக்கு குழு சென்றது.முதற்கட்ட விசாரணை அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு வழங்கிய உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருச்செங்கோடு பகுதியில் சிறுநீரக தானம் செய்பவர்கள் தொடர்பான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மனித உறுப்பு மாற்று சட்டப்படி தானம் செய்பவரும், அதை பெறுபவரும் குடும்ப நண்பர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டான்லி மோகன் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கும் மாவட்ட அங்கீகார குழுக்களை மறுசீரமைத்தல் மற்றும் மாநில அங்கீகார குழுவை புதிதாக உருவாக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.நீதிபதிகள், 'மருத்துவமனையை நம்பி தான் மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மனித உறுப்புகளை திருடுவது குற்றம்' என்றனர். தனியார் மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர், 'குற்றச்சாட்டிற்கும், மருத்துவமனைக்கும் தொடர்பில்லை. உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் வழங்கும் குழு அனுமதி வழங்கினால் மட்டுமே அதற்கான சிகிச்சை நடைபெறுகிறது. அரசியல் உள்நோக்கில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, வாதிடப்பட்டது. நீதிபதிகள், 'மருத்துவமனைக்கு தொடர்பு இல்லை என்பது ஏற்புடையதல்ல. அங்குள்ள டாக்டர்கள் தான் சிகிச்சை அளிக்கின்றனர். குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிய வேண்டும். 'பின், விசாரணையை துவக்க வேண்டும். இவ்வழக்கு ஆக., 25க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mecca Shivan
ஆக 22, 2025 19:48

நடுரோட்டில் நின்று தலையை சொரிந்தாலே கைதுசெயும் அரசு இந்த மிக கொடுரமான மிக பெரிய கிரிமினல் செயலுக்கு வெறும் தடை .. கைது கிடையாது .. சீல் வைக்கவில்லை .. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மருத்துவர்களின் லைசென்ஸ் பறிக்கப்பட்டிருக்கவேண்டும் .. அதையும் செய்யவில்லை . அப்பாவி மக்கள் குவார்ட்டர் பிரியாணி 200 ஒவைக்கு ஆசைப்பட்டு கிட்டினியே சட்டினியாக போயிட்டது


தமிழன்
ஆக 22, 2025 14:08

முகாந்திரம் இருந்தால் தானே.. தமிழகத்தில் திமுக ஆட்சி அல்லவா நடக்கிறது


Padmasridharan
ஆக 22, 2025 10:53

பணத்தேவை இருப்பவர்கள் உறுப்பை தானம் செய்துள்ளனர், இது திருட்டா. குடும்ப நபர்கள் அல்லாது வேறு நபர்கள் கொடுத்ததனால் திருட்டு என்ற சொல் பயன்படுத்துகிறார்களா.. தானம் கொடுக்கப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் பணம் வாங்குவார்களா.


Yaro Oruvan
ஆக 22, 2025 13:28

அட உப்பி.. அந்த மாதிரி செய்யக்கூடாதுங்கிறதுதான் சட்டம்..


Natarajan Ramanathan
ஆக 22, 2025 10:43

அடுத்தமுறை தீயமுக ஆட்சிக்கு வந்தால் திராவிட ஆனந்தன் சுகாதார மந்திரியாவது உறுதி.


தமிழ் மைந்தன்
ஆக 22, 2025 09:39

திராவிட மாடலில் இதெல்லம் சாதனை


தமிழ் நிலன்
ஆக 22, 2025 09:22

அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளில் போலி பேராசிரியர் 2009 பேர் பணிபுரிகின்றனர். ஒரேயொருவர் 11 கல்லூரிகளில் பணி செய்தார் என்று அறப்போர் இயக்கம் சொல்லிய குற்றச்சாட்டு கரைந்து போனது. அந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதே போல் கிட்னி திருட்டு விவகாரம் விரைவில் மறைந்து போகும். திராவிடத்துக்கு இடர்பாடுகள் ஏற்படலாம். ஆனால் மறைந்து போகாது. டாஸ்மாக் காப்பாற்றும்.


தமிழ் மைந்தன்
ஆக 22, 2025 11:24

மாணவர்களே இல்லாமல் 4879 பள்ளிகள் இயங்கிவருகிறதாம். இதில் பணியாற்றும் ஊழல் கட்சி ஆதாரவாளர்கள் 10000 க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றுவதாகவும் தகவல்


கல்யாணராமன் சு.
ஆக 22, 2025 08:46

அது என்ன அடைமொழியா இல்லே பேரேவா? ஏன் அதை விட்டுட்டாங்க ? அதை திராவிடத்தை போட்டா பாஜக உள்ளே வந்துடும்னா ?


Kasimani Baskaran
ஆக 22, 2025 08:38

இது போன்ற உறுப்பு திருடுவதும் கொலை செய்ய முயல்வதும் ஒன்றுதான். ஆகவே கொலையாக கருதி தண்டனை கொடுக்க வேண்டும்.


Svs Yaadum oore
ஆக 22, 2025 08:10

விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ஊரில் உள்ள அடுத்தவன் நிலம் அரசு நிலம் அனைத்தும் திருடி வித்தானுங்க ...இப்பொது நிலம் எதுவும் இல்லை என்பதால் கிட்னி திருடுவது லிவர் திருடி விற்பது என்று இந்த வேலையில் இறங்கியுள்ளார்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை