உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பா.ஜ., தலைவர் யார்: வெளியானது அறிவிப்பு

தமிழக பா.ஜ., தலைவர் யார்: வெளியானது அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், நாளை(எப்.,11) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பா.ஜ., உட்கட்சி தேர்தல், கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது. தேசிய தலைவர் தேர்தலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநில தலைவர் தேர்தலும் நடக்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l2niapds&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த சில நாட்களாக, பா.ஜ., மாநில தலைவர் தேர்தல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். இதன் பிறகு, புதிய தலைவர் என பல பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இச்சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார். இதனால் புதிய மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுதும் உள்ள பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.இந்நிலையில், பா.ஜ., மாநில துணைத்தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது:கட்சியின் அமைப்பு தேர்தல் திருவிழாவின் இறுதிக்கட்டத்தை நாம் அடைந்து உள்ளோம். கிளை துவங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்போது இறுதியாக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. மனுக்களை கட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.நாளை (ஏப்.,11) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள், விருப்ப மனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் 'F' பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்வு செய்யப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் பரிந்துரைக்க வேண்டும்.தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் 'E' பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி உடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில், ஆடிட்டர் குருமூர்த்தியை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வர உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

Natchimuthu Chithiraisamy
ஏப் 11, 2025 11:53

எடப்பாடியாரும் விட்டு கொடுக்க வேண்டும் அண்ணாமலையும் அனுசரித்து போக வேண்டும். திரண்டு வரும் போது பானை உடைப்படக்கூடாது.


Venkataraman
ஏப் 11, 2025 07:32

இங்கே பாஜகவை பற்றி கருத்து கூறுபவர்கள் எல்லாம் கருணாநிதியின் குடும்ப கட்சியை பற்றி பேசுவதில்லை.அந்த கட்சியில் தலைவர் பதவிக்கு தேர்தலே நடப்பதில்லை. சுடாலினை எதிர்த்து யாரும் தேர்தலில் நிற்க கூட முடியாது. கொத்தடிமைகளின் கூட்டம் அது.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 11, 2025 01:02

மதக்கலவரத்தை ஏற்படுத்தி அராஜகம் செய்ய ஒருவர் தேவை. அதானே?


நாஞ்சில் நாடோடி
ஏப் 11, 2025 11:31

அண்ணாமலை காலத்தில் எத்தனை மதக்கலவரம் நடந்தது?


karthik
ஏப் 11, 2025 11:52

உண்மையில் அதை செய்வது போலி த்ரவிட கும்பல்கள் தான்.. உன்னை போல


Saravanan
ஏப் 11, 2025 00:29

அப்பாவின்னு வச்சிக்கிறது அதையே கூகுளை translate செய்து அதுல ஒரு அக்கௌன்ட் இப்படி ஏமாத்தறதையே வழக்கமா வச்சிகிறதெல்லாம் ஒரு பொழப்பு அது என்ன ஹைன் உனக்கு தெரிஞ்சதெல்லாம் கோகைன் மெத்தடைந் இதான்


Haja Kuthubdeen
ஏப் 11, 2025 11:36

எத்தனை பிஜெபி காரர்கள் பேரரசு பாரத நாடு தேசபக்தன் ட்ரூ இன்டியன் என்று போலி பெயர்களில் கருத்து போடுகிறார்களே???


வரதராஜன்
ஏப் 10, 2025 23:15

இவர்களுக்கு சுய அறிவு சுய சிந்தனை சுய செயல்பாடு தன்மானம் இவையெல்லாம் இருந்தால் அன்றாட நிலையை பார்த்து ஒவ்வொருவரும் முடிவு எடுக்கலாம் இது இல்லாத ஒருவர் மிக்க அறிவுள்ள ஆற்றல்மிக்க பேராண்மை மிக்க குருமூர்த்தி பார்க்க போய்தான் ஆக வேண்டும் குருமூர்த்தியை பார்க்க செல்வதற்கு எல்லாம் இது பொருந்தும்


நாஞ்சில் நாடோடி
ஏப் 11, 2025 11:34

சுயசிந்தனை கொண்ட தி மு க கடந்த ஐந்து வருடமாக பிரசாந்த் கிஷோர் என்ற பீகார் ஆரியரின் கட்டளைக்கு கட்டுண்டு கிடந்தது...


வரதராஜன்
ஏப் 10, 2025 23:14

பிஜேபியோட கணக்கு வழக்கு எல்லாம் ஆடிட்டர் குருமூர்த்தி தான் பார்க்கிறார் அவர்களுக்கு அண்ணாமலை அவரை பார்க்க போயிருக்காரு சோ ராமசாமி என்பவர் வேறு


ராஜாராம்,நத்தம்
ஏப் 11, 2025 15:55

வரதா கடைசி வரை நீ ஒரு அறிவாலய அடிமை உன் கருத்தை எவன் கேட்டான்னு நீ மாய்ந்து மாய்ந்து கருத்தை போடுற


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 10, 2025 22:26

படிவம் F எந்த மொழியில் அச்சிடப்பட்டுள்ளது?


ஆரூர் ரங்
ஏப் 10, 2025 22:02

தேர்தலில் நிற்க யாரும் முன்வரமாட்டார்கள். பழைய ஆளே ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்வார்.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 11, 2025 00:49

அடுத்த ஆடு யார்? ம்மே ம்மே ..


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 11, 2025 01:02

பொய் வதந்திகளை பரப்பி பிரிவினையை தூண்டிமக்களை பிளவு படுத்தி மதக்கலவரத்தை ஏற்படுத்தி அராஜகம் செய்ய ஒருவர் தேவை. அதானே?


நிக்கோல்தாம்சன்
ஏப் 11, 2025 07:00

ஜைஹிந்டுப்புறத்தார்க்கு என்ன ஒரு ஆசை, இந்தி தமிழகத்தில் ஒரு மதத்தினர் மாத்திரம் குத்தகை எடுத்துள்ளது போல பிரிவினையை ஏற்படுத்தும் மதத்தினர் இன்று பிரிவினையை பேசுவது நகைப்புக்குரியது


மதிவதனன்
ஏப் 10, 2025 21:52

இவங்களை எண்ணி சிரிப்பா இருக்கு என்னவோ 40 % வோட்டு இருப்பது போல , 4 % நோட்ட வோட்டு வெச்சிகொண்டு இந்த ஆட்டம் , அமித்ஷா மோடி இருவரும் தலைவர் ஆனா கூட இங்கு நோட்டா வை வெல்ல முடியாது , கள நிலவரம் அப்படி


vijai hindu
ஏப் 11, 2025 00:06

நீ கீழ்ப்பாக்கம் அப்படித்தான் சிரிப்ப சிரிச்சுக்கிட்டே இரு


angbu ganesh
ஏப் 11, 2025 11:16

கசாப்பு கடைக்காரனைத்தானே உன்னை போல ஆடு நம்புது ஆனா இனி நாங்க நம்ப மாட்டோம்


நாஞ்சில் நாடோடி
ஏப் 11, 2025 11:30

எதற்கும் செந்தில் பாலாஜியிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளவும் ...


KR india
ஏப் 10, 2025 21:38

அண்ணாமலை,மாநில தலைவராக இருக்கும் போது, கட்சி நன்றாக வளர்ந்துள்ளது. இளைஞர்கள், அதிக அளவில், தமிழக பா.ஜ.க கட்சியில் சேர்ந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில், ஒட்டு சதவீதமும், அதிகார பூர்வ புள்ளி விபரப்படி 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில்,அண்ணாமலையின் பணியும், உழைப்பும் பாராட்டத்தக்கது. அதற்குண்டான, வெகுமதி மத்தியில் ராஜ்ய சபா எம்.பி அல்லது ஜூனியர் இணை அமைச்சர் பதவிக்கு அவர் தகுதியானவர் தான். இங்கு பாரதீய ஜனதா கட்சியும், அதன் கொள்கைகளும் தான் மெயின் ஹீரோ.மோடி அவர்களோ அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்றோர் கூட கட்சிக்கு, அடுத்த இரண்டாம் கதாநாயகர்கள் தான். வாழ்க பாரதம் வாழ்க தமிழ்


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 11, 2025 00:59

அதிகார பூர்வ புள்ளி விபரப்படி 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. - சங்கிகுரூப் வாட்ஸப் புள்ளிவிவரமா? தக்காளி ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு துப்பில்லை. 18% ஆம். இப்படியே கனாக்கண்டுகிட்டு இரு. மந்திரத்தில் மாங்காய் வருமுன்னு சொல்லிக்கிட்டு குடுகுப்பைக்காரன் சாட்டையால் அடிச்சிக்கிட்டு ஏமாத்திகிட்டு இருப்பான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை