உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைத்தேர்தல் புறக்கணிப்பு: யாருக்கு லாபம்? சிறப்பு விவாதம்

இடைத்தேர்தல் புறக்கணிப்பு: யாருக்கு லாபம்? சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=298nd8q0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க., ஒதுங்கிக் கொண்டதால், அதிக ஓட்டுகளை அள்ளிவிடலாம் என, பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க., குஷி அடைந்துள்ளது. தே.மு.தி.க.,வும் நழுவியதால், ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுகள் தங்களுக்கு ஆதரவாக ஒருங்கிணையும் என்ற நம்பிக்கையில் பா.ம.க., உள்ளது. இதனால், ஆளுங்கட்சி வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது.இந்நிலையில், இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது குறித்து தப்பு கணக்கு போடுவது யார்? என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

வீடியோவை காணுங்கள்!

இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=_ylMlJFORco


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

MADHAVAN
ஜூன் 18, 2024 17:36

திமுகவின் வெற்றி உறுதி, நோட்டா கட்சிக்கு இன்னும் மக்கள் ஓட்டுபோடமாட்டார்கள்


Sudhakar NJ
ஜூன் 18, 2024 14:56

அதிமுக போட்டியிடாததால் அக்கட்சியை சார்ந்த பெரும்பாலானோர் வாக்களிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தொகுதி மக்களின் நலன் கருதி அவர்களும் திமுகவிற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.


Priyan Vadanad
ஜூன் 18, 2024 14:53

இப்படித்தான் தேர்தல் சமயத்திலும் அலசல் நடந்தது.


Bala
ஜூன் 18, 2024 12:20

புரட்சி தலைவி அம்மா அவர்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஆதரித்தவர். அம்மா அவர்கள் இன்று இருந்திருந்தால் ஒன்று அதிமுக போட்டியிட்டிருக்கும் அல்லது தீய சக்தியின் எதிர்க்கட்சியான பாமகவை ஆதரித்திருப்பார்


Bala
ஜூன் 18, 2024 12:18

எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் பாஜகவின் கூட்டணியான பாமகவின் மாம்பழம் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள். ஏனென்றால் புரட்சி தலைவர் அவர்களும் அம்மா அவர்களும் வாழ்நாள் முழுவதும் தீய சக்தியான திமுகவை எதிர்த்து போராடியவர்கள். நாம் தமிழர் சீமானையும் இலங்கை தமிழர் பிரச்சனையில் சிறையில் தள்ளி புறக்கணித்தவர் அம்மா அவர்கள்.


Srinivasan Krishnamoorthi
ஜூன் 18, 2024 11:58

அதிமுக தேதிமுக அமமுக கட்சிகள் இப்போது திமுகவா அல்லது பாஜகவா யார் மக்களின் மனதில் இப்போது இருக்கிறார்கள் என்று கருத்தை அறிய விரும்புகிறார்கள். நாதக நிலையு ம் தெளிவாகும் இப்போது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை