உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாருக்கு தேவை ரூ.45 ஆயிரம் கோடி சொத்து; துறவு வாழ்க்கையில் நிம்மதி காண்கிறார் அஜான்!

யாருக்கு தேவை ரூ.45 ஆயிரம் கோடி சொத்து; துறவு வாழ்க்கையில் நிம்மதி காண்கிறார் அஜான்!

கோலாலம்பூர்: 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருந்தாலும், துறவி வாழ்க்கையை விரும்பி வாழ்கிறார் மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணனின் மகன்.மலேசியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த கிருஷ்ணன், கடந்த வாரத்தில் காலமானார். அவர் தொடங்கிய நிறுவனங்கள், தொலைத் தொடர்பு, செயற்கைக்கோள், எண்ணெய், ரியல் எஸ்டேட் என பல துறைகளில் செயல்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழரான ஆனந்த கிருஷ்ணன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் படித்தவர். இளம் வயதிலேயே தொழில்துறையில் கால் பதித்தவர். அவரது மனைவி, தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஆவார். அவரது பெயர் மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன். இந்த தம்பதிக்கு அஜான் சிரிபன்யோ என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். ரூ.45,000 கோடி சொத்து இருக்கும் நிலையில், அஜான் சிரிபன்யோவின் முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் வளர்ந்த இவர், பிரிட்டனில் கல்வியை முடித்தார். 8 மொழிகளை சரளமாக பேசும் திறன் கொண்டவர்.அஜான் சிரிபன்யோ தனது 18வது வயதில் கோடீஸ்வர வாழ்க்கையை துறந்து, புத்த துறவியாக முடிவு செய்தார். முழுக்க முழுக்க அவரது இந்த சொந்த முடிவுக்கு, குடும்பத்தினரும் மதிப்பு கொடுத்தனர். காரணம், அவரது தந்தையும் புத்த மதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் தாய்லாந்தில் ஆன்மீகத்தின் மீது தற்காலிக நாட்டம் கொண்டிருந்த அஜானுக்கு, நாளடைவில் அதுவே வாழ்க்கையாக மாறிப்போனது. ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்த இவர், தாய்லாந்து - மியான்மர் எல்லை அருகே உள்ள டோ டம் வனப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக தங்கி இருந்து சேவைகளை செய்து வருகிறார். எளிமையான வாழ்க்கை உள்ளிட்ட புத்த துறவிகளின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார். மக்களிடம் தர்மம் பெற்று தன் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்.சிரிபன்யோ துறவு வாழ்க்கை வாழ்ந்தாலும், அவ்வப்போது குடும்பத்தினருக்காகவும் நேரத்தை ஒதுக்குவது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Pandi Pan
டிச 07, 2024 19:02

நைஸ்... நைஸ்... வெரி... வெரி...நைஸ்...


Sampath Kumar
டிச 05, 2024 16:39

மனிதனின் உண்மை இன்ப நிலை இது தான் மற்றவை அனைத்தும் போலி ள்ள வேலை அவர் புத்தமதை ஏற்றார் இல்லாவிட்டால் ங்கிகளின் பிரைன் வாஷின்ல் தடுமாற்றம் அடைந்து இருப்பர் வாழ்த்துக்கள் அய்யா


Anantharaman Srinivasan
டிச 05, 2024 12:49

ஆட்சியிலிருக்கும் நம்ப ஆளு பழி பாவத்துக்கு அஞ்சமாட்டான். சிவன் கோவில் சொத்தையே திருடுவான்.


Anantharaman Srinivasan
டிச 05, 2024 12:46

இங்க ஆட்சியிருக்கிற ஒரு குடும்பத்தை விட்டால் 45000 கோடி சொத்தையும் களீபரம் செய்து விடுவார்கள்.


Sidharth
டிச 05, 2024 12:42

ஒரு பெண்ணை கட்டி வாழவும் இல்லாமல் மணமுறிவும் கொடுக்காமலே டிமிக்கி கொடுத்து கொண்டு பதவி வெறி பிடித்து அலையாமலும், மனைவி கட்டி, பெண்ணை பிள்ளையாய் பெற்று ,கல்யாணம் பண்ணி வைத்து சுக போக வாழ்க்கையில் திளைக்க வைத்து விட்டு ஊரான் பிளளைகளை மொட்டை அடித்து வாழ்க்கையை நாசமாக்காமல்,எளிமையாக வாழும் உண்மையான துறவிக்கு வணக்கம்


Madras Madra
டிச 05, 2024 12:23

இவர் மனிதரில் புனிதர்


Barakat Ali
டிச 05, 2024 11:20

நீயி சாமியாராப் போய்க்கோ ..... ஆனா துட்டை எங்களுக்கு கொடுத்துட்டுப் போயிருக்கக் கூடாதா ???? குடும்பக்காட்சி காரசார கேள்வி ......


Duruvesan
டிச 05, 2024 10:47

பாஸ், ஒரு வீடு, மூணு வேலைக்கு சோரு இருந்தா, அதுக்கு மேல காசு சேக்க மனசு வரல. வேலை உட்டுட்டேன், கோயில் குளம்னு போக தான் மனசு விரும்புது, இவருக்கு இள வயதில் அந்த பக்குவம் வந்தது பெரிய விஷயம்


angbu ganesh
டிச 05, 2024 10:47

என்னயா பெரிய 4000 கோடி சொத்து அது எல்லாம் எங்க மழை நீர் வடிகால் செலவுக்கே பத்தாது


seshadri
டிச 05, 2024 10:35

எதுக்கு அந்த சொத்தையும் ஆட்டையை போடவா