உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி சிலை மீது பெயின்ட் ஊற்றியது யார்?

கருணாநிதி சிலை மீது பெயின்ட் ஊற்றியது யார்?

சேலம் : சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், அண்ணா பூங்கா அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை உள்ளது. அச்சிலையை வலது புறம் முழுதும் கருப்பு பெயின்ட் படிந்திருந்தது.கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்ட பீடம் முழுதும், பெயின்ட் நிரம்பி வடிந்திருந்தது. நேற்று காலை அந்த வழியே சென்ற, தி.மு.க.,வினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் திரண்டனர். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் அஸ்வினி பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள், அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மர்ம நபர்கள், கருப்பு பெயின்ட் ஊற்றி, குச்சி மூலம் பெயின்ட்டை சிலை மீது தடவியது தெரிய வந்துள்ளது. சிலை அருகே, 2 லிட்டர் தகர பெயின்ட் டப்பாவை கைப்பற்றியுள்ளோம். அங்கு சிசிடிவி கேமரா இல்லாததால், பிரதான சாலையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்கிறோம்' என்றனர்.இதனிடையே மாநகராட்சி ஊழியர்கள், சிலை மீது ஊற்றப்பட்ட கருப்பு பெயின்ட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஏற்புடையது அல்ல!

கருணாநிதியின் வெண்கல சிலை மீது, சமூக விரோத சக்திகள், கருப்பு பெயின்ட் வீசி அவமதித்துள்ளனர். எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவித்துண்டு போர்த்துவது, ஈ.வெ.ரா., அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது, திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது போன்ற செயல்கள் தொடர்கின்றன. கடந்த காலத்தில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் பலரும், சங் பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை பார்க்க முடிந்தது. இது நாகரிக சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல. -சண்முகம்மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 16, 2025 18:18

எனக்கென்னவோ பிரச்சினையை திசை திருப்ப உடன்பிறப்புகளே செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். உற்சாக பான கடைகள் சரிவர இயங்குகின்றனவா மக்களுக்காக 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பானம் கிடைக்கின்றனவா என்ற பரிசோதனைக்குப்பின்னர் சிலை எது கலை எது என்று தெரியாமல் கல்லிடைக்குறிச்சி போல நினைத்து கருப்பு வண்ணம் பூசி விட்டார்கள் . தொடர்ந்து சிவப்பு வண்ணம் பூசுவதற்கு முன்னர் உதய சூரியன் உதித்து விட்டான் .


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 16, 2025 07:32

ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து ..உயிர் போகவிருந்த தமிழை ஐசியூவில் உடனடியாக சேர்த்து காப்பாற்றியவரை, அரசியலில் நேர்மையாகவும், பொதுவாழ்வில் தூய்மையாகவும் , வாழ்வில் தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாகவும், திருவள்ளுவருக்கே ஆச்சரியப்படும் அளவிற்கு திருக்குறளுக்கு உரை எழுதிய, இளங்கோவடிகளுக்கே சிலப்பதிகாரத்தை உரையுடன் சொல்லிக்கொடுத்த முத்தமிழ் தமிழ் அறிஞர் , சங்க புலவர்களுக்கே சவால் விடும் தமிழுக்கு சொந்தக்காரர் , ஊழலுக்கு நெருப்பாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றியது மிகவும் கேவலமான , கோழைத்தனமான செயல்.. கருப்பு பெயிண்ட் மீது ஏற்பட்ட களங்கத்தை யார் துடைப்பார் ,,


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 16, 2025 12:04

அதுதான் மாநகராட்சி ஊழியர்கள் துடைத்து கொண்டிருக்கிறார்களே.. இனி கருப்பு பெயின்டிற்கு ஏற்பட்ட கலங்கம் நீங்கிவிடும்.. எனக்கென்னமோ திமுகவினர் மீது தான் சந்தேகம்... சமீபத்தில் இந்தி எழுத்துக்கள் மீது கருப்பு பெயிண்ட் அடித்தார்கள் அதிலும் இந்தி, ஆங்கிலம்,தமிழ் எது என்றே தெரியாமல் சகட்டுமேனிக்கு பெயின்டை பூசினார்கள்.. அவர்கள் தான் சரக்கடித்த மப்பில் யாரோட சிலை என்று தெரியாமல் பூசி விட்டார்களோ என்னவோ....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை