உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்தி பகல் வேஷம் போடுவது யார்? ஸ்டாலினுக்கு ஹிந்து முன்னணி கேள்வி

பக்தி பகல் வேஷம் போடுவது யார்? ஸ்டாலினுக்கு ஹிந்து முன்னணி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : 'பக்தி பகல் வேஷம் யார் போடுவது' என, தமிழக முதல்வருக்கு ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.இதுகுறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில் பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.கோவில் உண்டியல் பணத்தை எடுத்துத்தான், இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளனர். ஆனால், விளம்பரம் மட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு. இது என்ன வேஷம்?கோவிலில் நடக்கும் எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சிகளிலும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று கொள்வதில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே காணொலி காட்சி வாயிலாக மட்டுமே கலந்து கொள்வது எந்த விதமான பக்தி என்பதை ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். கோவிலுக்கு சென்று திருநீறு கொடுத்தால், அதை நெற்றியில் பூசாதது; பூசினாலும் அது வெளியில் தெரியாமல் இருக்க அழிப்பது பகல் வேஷ அரசியலா, அல்லது பசப்பு அரசியலா?முருகனின் கந்தசஷ்டி கவசத்தையும், வேல் வழிபாட்டையும் இழிவுபடுத்தி பேசியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆனால், பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது யாரை ஏமாற்ற?தமிழகத்தில், 2,000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக ஸ்டாலின் தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொள்கிறார். அதற்காக, செய்த செலவு எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா?கோவில் நிலத்தில் பஸ் ஸ்டாண்ட், கோர்ட், கலெக்டர் அலுவலகம் கட்டுகின்றனரே, அதை ஏன் ஸ்டாலின் தடுக்கவில்லை? ஹிந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவது சந்தர்ப்பவாத பகல் வேஷ அரசியல் என்பதையாவது புரிந்து கொள்வாரா ஸ்டாலின்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

S.Murali
அக் 25, 2024 09:15

பணத்துக்காக பிணம் தின்னுவர்


V RAMASWAMY
அக் 24, 2024 10:32

இந்து அறநிலையத்துறை என்று ஒன்றும் அதன் மந்திரியாக தற்போது உள்ளவர் இருக்கும் வரையிலும், இந்த துறை அறமில்லாத் துறையாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கும். ஆன்மீகவாதிகளும், இந்து அமைப்புகளும் கோயில் உண்டியலில் காணிக்கைகள், பணம் எதுவும் போடவேண்டாம் என்று பக்தர்களுக்கு அறிவியுங்கள்.


venugopal s
அக் 23, 2024 18:09

ஹிந்து மதத்தை காண்பித்து தமிழக மக்களை பயமுறுத்தி திராவிடக் கட்சிகளுக்கு எதிராக திருப்ப நினைக்கும் பாஜகவின் முயற்சியை தமிழக மக்கள் நாள்தோறும் தோற்கடித்து கொண்டே இருக்கின்றனர்!


hari
அக் 23, 2024 16:55

ஆல் in ஆல் வைகுண்டம், சிதறு தேங்காய் எங்கு உடைத்தாலும் வந்து விடுவார்....


krishna
அக் 23, 2024 17:42

ANGU AVAR VARUVAAR.AANAL SIDHARU THENGAYAI ODI ODI PORUKKI NEE THINBADHAI PAARKKA VARUVAAR


hari
அக் 23, 2024 16:48

திராவிடம் பேசும் காலி தகர டப்பாகளின் ஓசை அதிகமாக இருக்கிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 18:50

ஹிந்து பெயரில் ஒளிந்திருக்கும் லுங்கிபாய்ஸ் அதிகமாயிட்டாங்க ........


kantharvan
அக் 24, 2024 13:56

அதை பெருங்காயம் பட்ட இந்த பெருங்காய ஹரி டப்பா புலம்புகிறது.


முருகன்
அக் 23, 2024 16:36

ஒருவர் போடும் வேஷத்தை இன்னொருவர் செய்தல் கோபம் வருவது இயல்பு தானே


தஞ்சை மன்னர்
அக் 23, 2024 14:08

அரசாங்கத்தின் ஒரு அங்கம் தான் அற நிலையதுறை அப்படி இருக்கும் போது தவறு இல்லை, அப்படி பார்த்தால் நரேந்திர தாமோதிரதாஸ் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் பதில் சொல்லவேண்டி வரும் மூடிட்டு இரும்போய் பக்கம் பக்கமாய் விளம்பரம் தேடி கொள்ளுவது யார் என்று இந்திய மக்களுக்கு தெரியும்


ஆரூர் ரங்
அக் 23, 2024 16:17

அறநிலையத்துறைக்கு அரசு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்குவதில்லை. ஆலயங்களின் வருமானத்தில் 14 சதவீதம் வரை பிடுங்கி அதில்தான் இந்த அரசுத்துறை இயங்குகிறது. இதே மாதிரி மற்ற மதத்தினரது நிறுவனங்களில் வசூலிப்பதில்லை. தலையிடுவதுமில்லை. ஹிந்து எதிர்க்க மாட்டாங்க, தாக்க வர மாட்டான் என்ற தைரியம்.


வைகுண்டேஸ்வரன்
அக் 23, 2024 14:06

பக்தி பகல் வேஷம் போடுவது யார்? ஹிந்து முன்னணிக்கு தெரியாதோ? இந்துக்களின் முன்னணி என்று சொல்லிக்கொண்டு, சொந்த இந்துக்கள் பற்றி, ஓசி கோட்டர், திராவிஷம் என்றெல்லாம் கேவலமா பேசறது எல்லாம் இந்துக்கள் தான்.


kantharvan
அக் 23, 2024 15:44

ரொம்ப நாளைக்கு அப்புறம் கருத்து பகுதி செம்ம .. வச்சு செய்ஞ்சுட்டாங்க நம்ம வாசக கண்மணிகள் .. திருந்துமா


தஞ்சை மன்னர்
அக் 23, 2024 14:05

""தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும்"" நாம உண்மை சொல்லும்போது இவருக்கு ஏன் கோபம் வருது என்று தெரியவில்லை அதை கொண்டு ஆதாயம் அடையும் கூட்டமே இப்படி உண்மையை உரக்க சொல்லுபோது நெறி கட்டுது உண்மை ரொம்ப நாளுக்கு உறங்கி விடாது பொய்யும் ரொம்ப நாளுக்கு உலா வர முடியாது, உண்மை வெடித்து பொய் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் நாள் வரும் பொய் வேஷம் போட்டு கொண்டு தெரியும் கும்பல் ஓடி ஒளியும் நாளும் வரும்


Smba
அக் 23, 2024 14:04

சும்மா அறிக்க எல்லாம் பத்தாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை