உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி

ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாட்ஷா பட வெற்றி விழாவில் என்ன நடந்தது? அதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசி உள்ளார்.எம்.ஜி.ஆர்., கழகம் என்ற கட்சியின் நிறுவனரும், அ.தி.மு.க., மாஜி அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் நினைவு நாள் இன்று. இதையடுத்து ஆர் எம்.வீ. தி கிங் மேக்கர் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=od23t737&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் ஆர்.எம். வீரப்பன் பற்றிய கடந்த கால நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார்.அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறி இருப்பதாவது:அனைவருக்கும் வணக்கம். ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசுவது ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு ரொம்ப நெருக்கமாக, எனக்கு மரியாதை கொடுத்து, என் மீது அன்பாக இருந்தவர்கள் 3,4 பேர். இவர்கள் எல்லாம் இல்லை என்று சொல்லும் போது, அவர்களை ரொம்ப மிஸ் செய்கிறேன்.பாட்ஷா பட வெற்றி விழாவில், அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசினேன். அமைச்சரை மேடையில் வைத்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது. அந்த அளவிற்கு அப்போது எனக்கு தெளிவு இல்லை. நான் அது பற்றி பேசிவிட்டேன். நான் பேசியது தெரிந்த பிறகு, ஜெயலலிதா வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார். அந்த தகவல் தெரிந்த பிறகு ஆடிபோனேன். என்னால் தான் இப்படி ஆகிவிட்டது என இரவு முழுவதும் தூக்கம் இல்லை. இரவு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. ஆனால் ஆர்.எம்.வீரப்பன் அதனை விடுங்க, அதனை மனதில் வைத்து கொள்ள வேண்டாம் என்றார். எனக்கு வந்து அந்த தழும்பு எப்போதும் போகலை. ஏன் என்றால் நான் தான் கடைசியாக பேசியது. நான் பேசிய பின்னாடி அவர் எப்படி மைக் பிடிச்சு பேசமுடியும். மதிப்புக்குரிய சி.எம். ஜெயலலிதாவை எதிர்க்கிறதுக்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட, இந்த காரணம் ரொம்ப முக்கியமானது.அதற்கு அப்புறம் நான் அவர்கிட்ட போனில் சொல்லி இருந்தேன். நான் வேணா அவர்கிட்ட(ஜெயலலிதாவிடம்) பேசட்டா. இதைப் பத்தி சொல்லும் போது...அய்யய்யோ, வேணாம். வேணாம். அந்த அம்மா ஒரு முடிவு எடுத்த மாற்ற மாட்டாங்க. நீங்க பேசி உங்க மரியாதையை நீங்க இழக்க வேண்டாம். அப்படி நீங்க சொல்லி நான் அங்கே போய் சேர வேண்டிய அவசியம் இல்லை. நீங்க விட்டுடுங்க. அந்த மாதிரி ஒரு பெரிய இனிய மனிதர், கிங் மேக்கர், ரியல் கிங்மேக்கர். இவ்வாறு ரஜினி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Varuvel Devadas
ஏப் 10, 2025 12:24

Still, people trust him.


Matt P
ஏப் 09, 2025 22:13

ஆர் எம் வீ ரப்பன் என்கிறபோது என்னவோ திருச்செந்தூர் வைர வேலும் சுப்பிரமணி என்ற அதிகாரியும் நீதி கேட்டு மதுரைக்கு அவரது தொண்டர்களோடு நடந்த கருணாநிதியும் தான் நினைவுக்கு வருகிறார்.


Nagarajan D
ஏப் 09, 2025 21:45

கருணாநிதியின் குடும்பம் படம் எடுப்பதால் நான் ரொம்ப சாதுவா இருக்கேன். இதுவே அவங்க என்னை வைத்து படமெடுப்பதை நிறுத்தட்டும், நான் ரொம்ப உக்கிரமா ஆயிடுவேன் ஜாக்கிரதை...


Nagarajan D
ஏப் 09, 2025 21:43

இவர் ஒரு கோழை....


K V Ramadoss
ஏப் 09, 2025 21:28

ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி, எல்லோரையும் நம்ப வைத்து , பல கூட்டங்கள் நடத்தி, , உடல் நலத்தை காரணம் காட்டி, கடைசியில் எல்லோரையும் ஏமாற்றி விட்டு அரசியலை விட்டே விலகி விட்டதன் உண்மைக் காரணத்தை, இன்னும் 30 வருடம் கழித்து சொல்வார் என்று எதிர் பார்க்கலாம்.


Karthik
ஏப் 09, 2025 20:57

30 வருஷத்துக்கு முன்னாடி இப்படி சொல்லியிருந்தால் இந்த மாணிக் பாட்ஷா - ஆண்டனி ஆயி.. ஆண்டனி - ஆண்டி ஆயி.. ஆண்டி - போண்டி ஆயி.. போண்டி - புல்லு பூண்டாகியிருப்பாரு நம்ம தொடை நடுங்கி வீர வசன கர்த்தா..


M Ramachandran
ஏப் 09, 2025 20:33

தோட்டத்தில் பின்னி எதுத்தாங்களே வாஙகினது ஞ்யாபகம் வருதே. அது தான் காரணம் மஞ்ச துண்டுவை ஆதரித்தது


தமிழன்
ஏப் 09, 2025 20:26

இந்த கொசு தொல்லை தாங்கல


Muthukumar Ganesan
ஏப் 09, 2025 19:43

இப்படி சொல்வது வெட்கப்படவேண்டியது... சுயநலவாதி ... இவர் மட்டும் சரியாக பேசி இருந்தால் திமுக ஆட்சி வந்திருக்காது.


K.Ramakrishnan
ஏப் 09, 2025 19:29

ஆர்.எம்.வீ. ஒரு லட்சிய புருஷர். அவரால் பயன் அடைந்தோர் பட்டியலில் உள்ள பலரும் இப்போது திமுகவில் உச்சாணியில் இருக்கின்றனர். அந்த கால கட்டத்தில் ஆர்.எம்.வீ. இருந்த மேடையில் ரஜினி பேசியது ஒன்றும் தவறல்ல. நாட்டின் நடப்பையே அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்ற அவரது முழக்கம் தான்.. ஆட்சி மாற்றத்துக்கே வழி கோலியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை