உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துப்பட்டாவை வாங்கி வைத்தது ஏன்? போலீசார் விளக்கம்

துப்பட்டாவை வாங்கி வைத்தது ஏன்? போலீசார் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் கருப்பு நிற துப்பட்டாவை வாங்கி வைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த , வைத்திருந்த கருப்பு நிற பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் அதை பாதுகாப்பு பிரிவு போலீசார் வாங்கி வைத்துக் கொண்டு அனுமதித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னரே கருப்பு நிற பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது தெரிய வருகிறது. விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்த போலீசார் கருப்பு துப்பட்டா அணிந்து வந்தோரிடம் துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.இனி அவ்வாறு நடக்காமல் இருக்க பாதுகாப்பு சென்னை போலீஸ் பிரிவுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 06, 2025 15:25

நேர்மையான காவல் துறை என்றால் அரசியல்வாதி மாதிரி சொல்வதென்றால், ஆண்மையுள்ள காவல் துறை என்றால் வரும் பிப்ரவரி மூன்றாம் நாள் கருப்பு சட்டை அணிந்து சமாதிக்கு செல்வோரின் சட்டைகளை கழற்றச் சொல்லவேண்டும். செய்யுமா? செய்யாதே. காரணம் அரசு காவல் துறை என்பது மாறி கழக காவல் துறை ஆயிற்றே.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 06, 2025 15:21

சீமான் கட்சியைப்பற்றி பேசிய திருச்சி கமிஷனருக்கு கிடைத்தது போல விரைவில் சென்னை கமிஷனருக்கும் பதவி உயர்வு வர இருக்கிறது


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 06, 2025 15:17

இந்த விழாவுக்கு காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தில் இருந்தோ காவலர்கள் குடும்பத்தில் இருந்தோ பெண்கள் யாருமே வரவில்லையா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 06, 2025 15:16

நல்லவேளை துப்பட்டாவை மட்டும் கழற்ற சொன்னார்கள்.


Deepak Swamy
ஜன 06, 2025 13:37

கருப்புச் சட்டை போடுரவங்களுக்கு கருப்ப பார்த்தால் இவ்வளவு பயமா


Elango
ஜன 06, 2025 12:35

Shame on TN Government


Elango
ஜன 06, 2025 12:32

விடியா அரசு. மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கையாலாகாத அரசாக உள்ளது வெட்கம், வேதனை


Thambiraja
ஜன 06, 2025 11:33

இது காவல் துறை இல்ல தி மு க வின் கைக்கூலி


sankaranarayanan
ஜன 06, 2025 11:21

பாதுகாப்பு பிரிவு போலீசார் கருப்பு நிற துப்பட்டா, பைகளை வாங்கி வைத்துக் கொண்டு அனுமதித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னரே கருப்பு நிற பொருட்களை ஒப்படைக்கப்பட்டன என்பதை கேட்டால் வெட்கமாகவே உள்ளது கருப்புநிற துப்பட்டாவிற்கு பதில் கருப்பொருநிற தோட்டாவை எடுத்து வந்தால் அனுமதிப்பார்களா? ஏன் கருப்பு நிற சட்டை அணிந்து கொண்டு வரும் வீரமணியை எப்படி மேடை மீதே உட்கார அனுமதிக்கின்றனர் தலை மயிர் கருப்பாக இருப்பதால் அனைவரையும் வெளியே தள்ளிவிடுவார்களா தலைமயிர் வெண்மையாகவோ செம்பட்டை நிறமாக உள்ளவர்களை மட்டும்தான் உள்ளே அனுமதிப்பார்களா உலகிலேயே இதுபோன்ற விசித்திரமான பாதுகாப்பு ஆணை வேறு எந்த மாநிலத்திலும் எந்த நாட்டிலும் கிடையாது


Madras Madra
ஜன 06, 2025 11:00

பெண்கள் என்ன துப்பட்டா போட வேண்டும் என்று முதல்வர் முடிவு செய்வாரா? நான் என்ன சாப்பிட வேண்டும் என்று நான்தான் முடிவு செய்வேன் என்று முன்பு எதற்க்கோ யாரோ குதித்து குதித்து போராடினார்கள் காது சவ்வு கிழியும் வரை கத்தினார்கள் எங்கே அவர்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை