உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதற்காக தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள்? கனிமொழிக்கு சீமான் கேள்வி

எதற்காக தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள்? கனிமொழிக்கு சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: தமிழகத்தில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.ஈரோட்டில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஈ.வெ.ரா.,வை திமுக தலைவர்கள் அண்ணா, கருணாநிதியை விட யாரும் அதிகம் விமர்சித்தது இல்லை. தமிழகத்தில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்? ஜாதியை ஒழிக்கவா? அங்கு ஏமாந்த மக்கள் இருக்கிறார்கள் அது தானே காரணம். தி.மு.க., கட்சி பெண்களுக்கு கொடுத்த முன்னுரிமை என்ன? அண்ணா பல்கலை வளாகத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. சாலைகளில் தி.மு.க., கொடி கட்டிய காரில் சென்று பெண்களை தொந்தரவு பண்ணுகிறார்கள். வண்டி இடித்ததால் துரத்தி போனதாக, பொய் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினீர்கள். நீதியை இன்றும் ஏன் நிலைநாட்டவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் எடுத்த நடவடிக்கை என்ன? கொடநாடு கொலையில் எடுத்த நடவடிக்கை என்ன? 5 பேர் உயிரிழந்ததுக்கு காரணம் என்ன? கொலை செய்தது யார்? இவ்வாறு சீமான் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Mediagoons
ஜன 30, 2025 23:07

தேடிபிடித்த ரவுடி சீமான்


Mediagoons
ஜன 30, 2025 23:06

எங்குமே போட்டியிடாத அவர் எங்கு போட்டியிட்டால் என்ன?


தாமரை மலர்கிறது
ஜன 30, 2025 20:58

திமுகவை ஒழிக்க வேண்டும் என்று சீமான் உண்மையில் விரும்பினால், பிஜேபி தலைமையில் கீழ் சீமான் வரவேண்டும். அல்லது பிஜேபியை கடுமையாக பேச வேண்டும். வெறுமனே திமுகவை திட்டிக்கொண்டு, திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை அள்ளிக்கொள்ளலாம் என்று சீமான் திட்டமிட கூடாது. தமிழக அரசியல் பிஜேபியை சுற்றி நடக்க வேண்டும். சீமான் ஸ்டாலினை சுற்றி நடத்துகிறார். இது தவறான போக்கு. பிஜேபி தொண்டர்கள் சீமானை ஆதரிக்க கூடாது. திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிஜேபி உடையது. சீமான் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை சிதறடிக்கிறார்.


Sivagiri
ஜன 30, 2025 20:45

குருநாதா , இப்டி அசிங்கப்படுத்தீடாய்ங்களே , குருநாதா , சாணியோட வேறு எதை எல்லாமோ கலந்து அடிச்சிட்டாய்ங்களே , குருநாதா ,


T.sthivinayagam
ஜன 30, 2025 20:03

ஆமாம் நீங்கள் ஏன் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை


guna
ஜன 30, 2025 20:21

அங்கு உம்மை போல கொத்தடிமை இருக்கும்ல


vadivelu
ஜன 30, 2025 21:47

நம்ம உலக தலைவர்களே போட்டி யிடுவதில்லையே, அறிவோடு கருத்து சொல்லணும். நான் தமிழன் இல்லை என்று முரசு கொட்டி இருக்கிறீர்கள். தமிழ் நாட்டை விட்டு வேறெங்கும் போட்டி இட முடியாத நீங்க வாயை திறந்து பேச கூடாது.


K.J.P
ஜன 30, 2025 21:54

என்னத்த சொல்ல.இளம் விதவைகள் இங்கு அதிகம் ஆகிவிட்டதால் என்னமும் செய்ய முடியலை.


Karthik
ஜன 30, 2025 19:39

இதற்கு பேர் தான் அரசியல் சீமான். நீங்க செய்கிற அவியலிலிருந்து அரசியலுக்கு அப்டேட்டாகி ஜோதியில ஐக்கியமாயிடுங்க.. பிறகு உங்களுக்கு கேள்வியே எழாது.


sridhar
ஜன 30, 2025 19:12

தன் ஜாதிக்காரர்கள் இருக்கும் இடத்தில தேர்தலில் நிற்கவேண்டியது , ஜாதி ஒழிப்பு முழக்கம் இடுவது ..


vadivelu
ஜன 30, 2025 21:48

அதுதானே திராவிட கொள்கை.


Svs Yaadum oore
ஜன 30, 2025 17:48

கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம் ....அதை விட்டு கட்சியை உடைப்பேன் ஆட்களை இழுப்பேன் என்றால் இப்படித்தான் பதில் வரும் ....இனி முட்டுக் கொடுக்க விடியல் கூட்டணி கட்சிக்காரர்கள் எவனும் வரமாட்டார்கள் .... ஏற்கனவே உட்கட்சி பூசல் அதோடு கூட்டணியும் கலகலத்து போயிருக்குது ...


Svs Yaadum oore
ஜன 30, 2025 17:44

அண்ணாமலை சொன்ன விடியல் அறிவாலய வெங்காய தோல் ஒவ்வொன்றாக உரிக்க பட்டு இனிமேல் நேரடி தாக்குதல் ....


Madras Madra
ஜன 30, 2025 17:24

இந்த வீடியோவில் சீமான் பேச்சு அற்புதம்


சமீபத்திய செய்தி