உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட் வளாகத்தில் கொலையை தடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

கோர்ட் வளாகத்தில் கொலையை தடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நெல்லை மாவட்ட கோர்ட் அருகே நடந்த கொலையை தடுக்காதது ஏன் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.கொலை வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக நெல்லை நீதிமன்றத்திற்கு, கீழ்நத்தம் கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் மாயாண்டி(38) வந்தார். அப்போது, நீதிமன்றம் அருகே அவரை காரில் வந்த நான்கு பேர் கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.இது தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது, நீதிபதி, '' நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கொலை நடந்துள்ளது. இக்கொலையை ஏன் போலீசார் தடுக்கவில்லை. மாவட்ட நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டும் இன்னும் வழங்காதது ஏன்?'' எனக்கேள்வி எழுப்பினார்.தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீ., தொலைவில் கொலை நடந்தது. முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளது. சம்பவ இடத்தில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார், '' என விளக்கம் அளித்தார்.இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை குறித்தும், நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Gopalan
டிச 20, 2024 23:48

இந்த தமிழகத்தில் இது ஒன்றும் புதிய தில்லை. இந்த உயர்நீதிமன்றம் எல்லாம் அறிந்தும் இந்த மாதிரி சப்பு கட்டுவார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று தெரிந்தும் இவ்வாறு பேசுவது வேடிக்கை ஆக உள்ளது. மக்கள் நீதி மன்றம் வளாகத்தில் நடப்பதால் நீதி மன்றத்தை நாடுவதற்கு யோசிக்க வேண்டும் இனி வரும் காலங்களில்.


Rangarajan Cv
டிச 20, 2024 21:46

Sc expressed dissatisfaction on state govt for not responding on Senthil balaji case, HC questioned about the safety in courts, governor questioned why no UGC nominee in VC search committee. Recent 3,incidents stated above, make you to feel , state is not interested in listening, nor inclined to follow the regulatory guidelines?


visu
டிச 20, 2024 20:33

அரசு மருத்துவருக்கு அரசு மருத்துவமனையில் வெட்டு அரசு பள்ளி ஆசிரியைக்கு அரசு பள்ளியில் வெட்டு வக்கீலுக்கு நீதிமன்றம் முன் வெட்டு வங்கி ஊழியருக்கு வங்கிக்குள் வெட்டு என்ன நடக்குது


Svs Yaadum oore
டிச 20, 2024 20:21

நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவாம் .....அப்ப பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் செத்தால் அதை நீதி மன்றம் வேடிக்கை பார்க்குமா ??....எதுக்கு நீதி மன்றம் உள்ளது ??....


Svs Yaadum oore
டிச 20, 2024 20:19

மாவட்ட நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டும் இன்னும் வழங்காதது ஏன்? ...நீதி மன்றங்களுக்கு பாதுகாப்பு வழங்கத்தான் போலீஸ் துறை உள்ளதா ??.....அப்ப பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு வழங்குவர் ??.....


நிக்கோல்தாம்சன்
டிச 20, 2024 20:06

இது புது மாடல் அரசு அய்யா இப்படித்தான் சட்டம் ஒழுங்கு இருக்கும் என்று காட்டுவதற்காக


Palanisamy Sekar
டிச 20, 2024 19:48

கொலை மாநிலம் தமிழகம் என்கிற பெயரை எடுத்துவிட்டது. கஞ்சாவும் போதையும் திமுகவினரின் சொத்து. டாஸ்மாக் தமிழக அரசின் பொற்களஞ்சியம். அப்படி இருக்கையில் போதையில் வந்து இப்படி கொலை செய்ய துணிபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது ரொம்ப கஷ்டம்தான். இதைத்தான் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று பெருமை பேசுறாரு ஸ்டாலின் . ஆட்சியே இல்லை இது.. இந்தியாவிலேயே மிக மிக மோசமான கொடூரமான ஊழல் நிறைந்த ஆட்சி. ஆளுநர் இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தால் கூட நல்லதுதான்


Anantharaman Srinivasan
டிச 20, 2024 19:39

விடியா திராவிட மாடல் அரசால் பொதுமக்களுக்கு அவ்வளவு தான் பாதுகாப்பு தர முடியும்.இதற்கு மேல் தற்பாதுகாப்பு தேவைபடுபவர்கள் சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.


V RAMASWAMY
டிச 20, 2024 19:31

திராவிட மாடலில் இம்மாதிரி கேள்விகள் எடுபடுமா?


P.M.E.Raj
டிச 20, 2024 19:21

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே நாள்தோறும் கொலைகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது . தமிழகம் கோமாளிகள் கையில் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகிக்கொண்டுள்ளது. ஆட்சி செய்ய கொஞ்சம்கூட தகுதியே இல்லாத முதல்வரை தமிழகத்தில்தான் பார்க்கிறோம்.