உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3ம் மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது ஏன்: கனிமொழிக்கு அண்ணாமலை கேள்வி

3ம் மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது ஏன்: கனிமொழிக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? என தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, தி.மு.க.,எம்.பி கனிமொழி சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தாவது: பா.ஜ., எவ்வாறு தரவுகளை கையாளுகிறது என்பதை உலகம் அறியும் டாக்டர் பர்கலா பிரபாகர் அதை The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis என்ற புத்தகத்தில் அம்பலப்படுத்தினார். கல்விக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் குறித்து எங்கள் சொந்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=chrclc78&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உங்கள் 2025ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை கூட, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக தமிழகத்தை பாராட்டியது. நீங்கள் தமிழகத்தின் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாகக் கூறுகிறீர்கள். பிறகு உங்கள் அரசாங்கம் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதியில் தமிழகத்திற்கு சரியாகக் கொடுக்க வேண்டிய ரூ.2,152 கோடியை ஏன் நிறுத்தி வைத்துள்ளது? நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், எங்களுக்குப் பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக இந்த நிதியை விடுவிக்க உங்கள் மத்திய அரசிடம் சொல்லுங்கள். நீங்கள் உண்மையிலேயே மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றால், எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழைக் கற்பிக்கின்றன என்பது பற்றிய தரவை எங்களுக்குத் தர முடியுமா? தமிழகத்தில் உள்ள பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழகம் ஒருபோதும் பா.ஜ., வின் தவறான தகவல், நிதி நெருக்கடி மற்றும் ஹிந்தி திணிப்பு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலை பதிலடி

இதற்கு பதில் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: தரவு பாராட்டுக் குரியதாக இருந்தால், அதை முரசொலியில் முதல் பக்கத்தில் வெளியிடுவீர்கள். ஆனால் மத்திய அரசு வெளியிடும் தரவுகள் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் இருந்தால் அதனை ஒரு சார்புடையது என்கிறீர்கள். கல்வியின் தரத்தைப் புரிந்து கொள்ள அரசு ஒரு கணக்கெடுப்பை நடத்தினாலும், தி.மு.க.,வின் போலி முகம் வெளிப்படும். இன்று தமிழகத்தில் கல்வித் தரம் மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்ட நாங்கள் விரும்புகிறோம். உங்கள் சகோதரனும், மருமகனும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார்கள். நீங்களாவது பதிலளிப்பீர்களா? தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பல்லவி
மார் 06, 2025 02:28

பக்கத்து மாநிலத்தில் மலையாளம் கன்னட மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ளனர் அங்கு இந்த மொழி பற்றி பிரசங்கம் செய்யச் சொல்லுங்கள்


பேசும் தமிழன்
மார் 04, 2025 19:44

கனிமொழி அவர்கள் எப்படி பதில் சொல்வார்கள்.... டாஸ்மாக் சாராய கடைகளை மூடும் விஷயத்தில்..... எப்படி எல்லாம் பல்டி அடித்தார் என்பது தெரியும் தானே 200???


கொங்கு தமிழன் பிரஷாந்த்
மார் 04, 2025 17:53

தாய்மொழியும், ஆங்கிலம் மட்டும் போதும். ஹிந்தி கற்று என்ன பிரயோஜனம். மோடியும், அமித் ஷா தமிழ் கற்று கொண்டு பிரச்சாரம் செய்யலாம். கவர்னர் RN ரவி இன்னும் தமிழ் கற்று கொள்ளவில்லை, பல வருடங்கள் தமிழ் நாட்டில் இருந்து, அவருக்கு எந்த மொழி உதவி செய்கிறது? ஆங்கிலம் மட்டுமே.


S. Venugopal
மார் 04, 2025 17:12

என் ஈ பி 2020 இல் அகாடெமிக் பேங்க் கிரெடிட் என்ற ஒரு நல்ல அம்சம் உள்ளது. இந்த ஷரத்தின் மூலம் ஒரு மாணவன் மற்ற பள்ளிகளில் தனக்கு புடித்த படத்தினை படித்து தேர்வு எழுதி அந்த மதிப்பெண்னை மற்ற மதிப்பெண்களோடு சேர்த்துக்கொள்ளலாம். தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய ஹிந்தி டைரக்டரேட் மற்றும் ஹிந்தி பிரச்சாரசபா தமிழகத்தில் ஹிந்தி கற்க வாய்ப்பு இல்லாத இடங்களில் மாணவர்களுக்கு மலை நேரத்தில் ஹிந்தினை ஒரு படமாக கற்றுக்கொடுக்க முயற்சி செய்யலாம்.


Velan Iyengaar
மார் 04, 2025 16:35

வடகன்ஸ் அவனுங்க ஊரில் ஹிந்தி பாடத்தில் க்ளாஸ் வாரியா மானவரியா லட்சக்கணக்கில் தோல்வி அடையுறாங்க ....அத முதலில் சரிசெய்துவிட்டு இங்க வந்து முட்ட சொல்லுங்க ...


S.Martin Manoj
மார் 04, 2025 16:25

மும்மொழி கொள்கை கடைபிடிக்கும் வட மாநிலங்களில் மூன்றாவது மொழி என்பதே இல்லை, அங்கே இந்தியும் சமசுகிருதம் மட்டுமே பயிற்றுவிக்க படுகிறது,உங்க மும்மொழி கொள்கை படித்து mla ஆகி உ பி சட்டசபை முழுவதும் பான்பராக் போட்டு துப்பி வச்சிருக்கணுங்க வடக்கணுக, சபாநாயகர் துடைச்சுக்கிட்டு இருக்கார்.


pmsamy
மார் 04, 2025 16:13

விருப்பம் இருந்தா பத்து மொழி கூட கத்துக்குவாங்க அதை என்னடா நீ சொல்றது


Shivam
மார் 04, 2025 23:03

அவர் அப்படித்தான் சொல்லுவார்


Sivaraj Kumar
மார் 04, 2025 16:09

North states in India all accepted tamil in our State tamil 3rd language my state accepted hindhi


பாரத புதல்வன்
மார் 04, 2025 15:50

ஒரே நாடு ஒரே மொழி ஒரே ரேஷன் ஒரே புருஷன் இதெல்லாம் நாங்க எதிர்ப்போம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 04, 2025 14:39

மூன்றாவது மொழியாக தமிழகம் ஏன் ஹிந்தி தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்றாவது மொழியாக அரசு பள்ளிகளில் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஒரியா மொழிகள் மட்டுமே தேர்ந்தெடுத்து கற்பிக்கலாம். ஹிந்தி மூன்றாவது மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதை தமிழக அரசும் அரசு அதிகாரிகள் திமுக கட்சி கடை கோடி தொண்டர் வரை அதிமுக மதிமுக போன்ற திராவிட கட்சிகள் அந்த அந்த திராவிட கட்சிகள் கிளை கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளன: 1. கர்நாடகா: மூன்றாவது மொழி தெலுங்கு, கொங்கனி, தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி. 2. கேரளா: மூன்றாவது மொழி தமிழ், கன்னடம், கொங்கணி, இந்தி, சமஸ்கிருதம் 3.தெலுங்கானா: மூன்றாவது மொழி மராத்தி, இந்தி, கன்னடம், சமஸ்கிருதம் 4.ஆந்திரா: மூன்றாவது மொழி ஒடியா, இந்தி, தமிழ், கன்னடம், சமஸ்கிருதம் 5. பீகார்: மூன்றாவது மொழி பெங்காலி, உருது, ஒடியா, சமஸ்கிருதம். 6. உத்தரப்பிரதேசம்: மூன்றாவது மொழி பெங்காலி, பஞ்சாபி, பஹாடி, சமஸ்கிருதம் 7.ஹரியானா: மூன்றாவது மொழி பஞ்சாபி, சமஸ்கிருதம், பஹாடி 8. ஹிமாச்சல்: மூன்றாவது மொழி பஞ்சாபி சமஸ்கிருதம் 9. மத்தியப்பிரதேசம்: மூன்றாவது மொழி சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி 10. சத்தீஸ்கர்: மூன்றாவது மொழி சமஸ்கிருதம், ஒடியா, தெலுங்கு 11.ஜார்கண்ட்: மூன்றாவது மொழி பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம் இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களும் மும்மொழி முறையை அமல்படுத்தியுள்ளன. 12. மகாராஷ்டிரா: மூன்றாவது மொழி இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், கொங்கனி 13. கோவா: மூன்றாவது மொழி மராத்தி, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் அனைத்து மாநிலங்களும் கற்பிக்க வேண்டிய பட்டியலில் 1 தாய்மொழி 2 ஆங்கிலம் 3 அண்டை மாநில மொழி அல்லது ஹிந்தி, சமஸ்கிருதம் விருப்ப மொழியாக இருக்கலாம். மூன்றாவது மொழி இந்தியாகத்தான் இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை. இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் அறியாததற்காக எந்த மாநிலமும், இனமும் அல்லது நபரும் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது. மக்கள் தங்கள் விருப்பப்படி அதிக மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். இதுவே மும்மொழி கல்விக்கொள்கை.


Ray
மார் 04, 2025 21:53

இத்தனை வியாக்யானம் செய்கிறவர் ஒரு கேள்விக்கு பதில் சொல்லவில்லை. எந்த வட மாநிலத்திலாவது மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறதா? இந்த கேள்வியை PTR உலக பிரசித்தமான பத்திரிகையாளர் கரண் தாப்பரை கேட்ட போது அவரால் பதில் சொல்ல முடியவில்லையே. எல்லாம் ஏட்டளவில்தான். பல்வேறு பள்ளிகளில் பல்வேறு மூன்றாவது மொழிகள் உருது தெலுங்கு என்று தேர்வு செய்யப் படுமானால் அதை போதிக்க தகுதியான ஆசிரியர்களை அரச பணியாளர்களாக நிரந்தரமாக நியமிக்க வேண்டியிருக்குமே. அந்த செலவை ஒன்றிய அரசு ஏற்குமா? அவர்களோ இலவசத்துல தாலாட்டப் பார்க்கிறார்களே அதை நியாப்படுத்துவீரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை