மேலும் செய்திகள்
'கலெக்டர், எஸ்.பி.,யை 'சஸ்பெண்ட்' செய்யணும்'
29-Sep-2025
மதுரை: மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: கரூர் தமிழக வெற்றிக்கழக பிரசாரத்தில் 41 பேர் பலியானதற்கு பின் உண்மை நிலையை மக்களிடத்தில் விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் இருந்து தமிழக அரசு விலகிச் செல்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒரு நபர் விசாரணைக்குழு அமைத்துள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேநேரம் அதிகாரிகள் அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னாள் அமைச்சரான 'பத்து ரூபாய்' செந்தில்பாலாஜி பதட்டமாக கருத்து தெரிவிக்கிறார். இவர்கள் கருத்துப்படியே விசாரணை கமிஷனையும் அரசுக்கு சாதகமாக வழிநடத்துகிறார்களோ என்ற சந்தேகம் வந்துள்ளது. விசாரணை நடக்கும்போது இதுபோன்ற அறிக்கை, அதிகாரிகளின் விளக்கங்கள் கமிஷனின் நடுநிலையை கேள்விக்குறியாக்குகிறது. தமிழக அரசின் தோல்வியை மறைக்க அரசு பொறுப்பில் உள்ளவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்களா என கேள்வி எழுகிறது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியும் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (அக்., 3) ராமநாதபுரம் வரும் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
29-Sep-2025