உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? பசுமை தீர்ப்பாயம் கேள்வி

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகளை அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு விசாரணையின் போது தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியதாவது:* விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? * பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி தவறிவிட்டது.* கட்டணங்கள் வசூலித்தால் அந்த நிதியைக்கொண்டு, சிலை கரைப்புக்கு பிறகு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளலாம்.* ஆபத்து இல்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Karthik
செப் 03, 2025 20:29

ஒட்டகத்தை, ஆட்டை நடு வீதியில் வெட்டுகிறார்கள் - அது மட்டும் மாசு, சுகாதாரக்குறைவு ஏற்படுத்தாதா? மாநாடு என்ற பெயரில் அரசியல் தலைவர்கள் லக்ஷக்கணக்கானவர்கள் திரண்டு வண்டியில் செல்கிறார்கள் - அது மாசு, சுகாதாரக்குறைவு ஏற்படுத்தாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை