உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினுடன் திருமா சந்திப்பு ஏன்?

முதல்வர் ஸ்டாலினுடன் திருமா சந்திப்பு ஏன்?

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துவக்கியுள்ள, 'மக்கள் யாத்ரா' வெற்றி பெற, வி.சி., தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை உருவாக்கிய நிலையில், அவர், முதல்வர் ஸ்டாலினை திடீரென நேற்று சந்தித்து பேசினார்.தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழகம் முழுதும், 'மக்கள் யாத்ரா' பயணத்தை மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் துவக்கினார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பழனிசாமியின், 'மக்கள் யாத்ரா' பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.'தி.மு.க., கூட்டணியில் வி.சி., அங்கம்வகிக்கும் நிலையில், அ.தி.மு.க., வெற்றிக்கு அவர் எப்படி வாழ்த்து தெரிவிக்கலாம்; தேர்தலில் தி.மு.க., தோல்வி பெற வேண்டும் என, திருமாவளவன் கருதுகிறாரா?' என, தி.மு.க.,வினர் தலைமையிடம் கேள்வி எழுப்பினர். இது கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியது. இதற்கிடையில், 'தி.மு.க., கூட்டணியில், ராமதாஸ் அணியின் பா.ம.க., இடம்பெற வாய்ப்புள்ளது; பா.ம.க., இரண்டு அணிகளாக பிரிந்தது, தி.மு.க.,விற்கு சாதகம்' என, மூத்த அமைச்சர்கள் தங்களுக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.,க்களிடம் பேசி உள்ளனர்.இது உண்மையா என அறிய, திருமாவளவன் விரும்பினார். இதற்காக தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். தமிழகத்தில் உள்ள பள்ளி - கல்லுாரி, மாணவ - மாணவியர் விடுதிகள், 'சமூக நீதி விடுதிகள்' என இனி அழைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசி உள்ளார்.அப்போது தி.மு.க., கூட்டணியில், கூடுதலாக சில கட்சிகள் இடம் பெற்றாலும், இட ஒதுக்கீட்டில், வி.சி.,க்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படும் என, முதல்வர் உறுதி அளித்து உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விஜய் மீது மறைமுக சாடல்

சென்னை அறிவாலயத்தில், திருமாவளவன் அளித்த பேட்டி:பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான அனைத்து விடுதிகளையும், ஒரே பெயரில் அழைக்கும் வகையில் அரசாணை பிறப்பித்ததற்காக, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். இதை, தி.மு.க., அரசின் பாராட்டத்தக்க சாதனையில் ஒன்றாக பார்க்கிறோம். தி.மு.க., ஆட்சியில், ஈ.வெ.ராமசாமி வழியில் படிப்படியாக, ஜாதி, மத அடையாளங்களை அழித்து எறியும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் உறுதியாக நின்று செயல்படுத்தி வருகிறார்.தமிழகத்தை பொறுத்தவரை, எப்போதும் இருமுனை போட்டி தான். எப்போதும், தி.மு.க., கூட்டணிக்கும், அ.தி.மு.க., கூட்டணிக்கும் தான் போட்டி. மூன்றாவது அணி யார் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். ஆனால், அவ்வணியினர் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

theruvasagan
ஜூலை 09, 2025 11:53

அவர்.நாடகமெல்லாம் கண்டேன் கண்ணே உந்தன் ஆடும் விழியிலே. உந்தன் பாடும் மொழியிலே. அதற்கு இவரு. தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே. கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே. இவரு யாருன்னு அவருக்கு தெரியும். அவரு யாருன்னு இவருக்கு தெரியும். இவங்க ரெண்டுபேரும் யாருன்னு எங்களுக்குத் தெரியும். நீங்க போடற டிராமா யாரையெல்லாம் ஏமாத்த என்பதும் தெரியும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 09, 2025 11:22

வர இருக்கும் 2026 தேர்தலில் குறைந்த பட்சம் 250 தொகுதிகளை வென்றெடுக்க ஆலோசனைகள் கூறினாராம். அத்துடன் அடுத்த மாதம் தயிர்வடையார் நினைவு நாளில் ஒருமணிநேரம் உண்ணா நோன்பு இருந்து இஸ்ரேல் பாலஸ்தீன சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாராம். தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியில், தான் சொல்லும் நாஸ்திகளுக்கு மட்டும் சீட் கொடுத்தால் போதும் மற்ற உட்கட்சி குழுக்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினாராம். அதைக்கேட்ட முதல்வர் சிலிர்த்துப்போய் பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு புவிசார் குறியீடு வழங்க ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மோடிக்கு கடிதம் எழுதுகிறேன் என்றாராம்.


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 09:11

சாதி ஒழிப்பை விட போலி திராவிட இன பெயரை அழிப்பது முக்கியம். இளிச்சவாயத் தமிழர்களை தவிர வேறு யாரும் தன்னை திராவிட இனம் எனக் கூறிக் கொள்வதில்லை. திராவிட என்பது வேண்டாத அவமானச் சின்னம்.


hari
ஜூலை 09, 2025 09:04

பேரு வெச்சாரே சோறு வெச்சாரா. விடுதி நிலமய போய் பாருங்க. Just public stunt


vee srikanth
ஜூலை 09, 2025 14:38

ரொம்ம குறும்புண்ணே


சங்கி
ஜூலை 09, 2025 08:59

முதலில் சாதி இடஒதுக்கீடை ஒழிங்கடான்னா இவனுக பேர் மாத்தி விளையாடுறாங்க. பிராடு


S.V.Srinivasan
ஜூலை 09, 2025 07:59

இவரெல்லாம் ஒரு கட்சியின் தலைவர். கொள்கையும் இல்லை, .....புண்ணாக்கும் இல்லை. பச்சோந்தி தனமான அரசியல். தமிழகத்தின் தலையெழுத்து.


சந்திரன்
ஜூலை 09, 2025 07:24

என்னதான் குளிப்பாட்டி பிளாஸ்டிக் சேர்ல உக்கார வைத்தாலும்....


ஜூலை 09, 2025 11:01

சந்திரன் சார் ..சொல்லவந்ததை முழுசாக சொல்லுங்கள்


kannan sundaresan
ஜூலை 09, 2025 06:43

விடுதிகள் பெயர் மாற்றத்திற்கு நேரில் சென்று நன்றி? ஏங்க பாஸ்டிக் சேர் போட்டவங்களோட இன்னும் கூட்டனியா?


ஜூலை 09, 2025 07:54

.. பிளாஸ்டிக் சேரே வேண்டாம்.... அது ஆதிக்க மனப்பான்மையின் அடையாளம் ..அதனால் தரையில் அடங்கமறுத்து... அத்துமீறி உட்காருவோம் ...தேர்தலில் சீட் கொடுத்தால் போதும் ..சரக்கு மிடுக்குடன் வாங்கிக்கொண்டு செல்வோம் ...


ஜூலை 09, 2025 06:28

திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை திடீரென நேற்று சந்தித்து உக்ரேன் ரஷிய போரை முடிவுக்கு கொண்டுவர திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .. கண்டபடி வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியை பதவி நீக்கவேண்டு என கோரி சென்னையில் மாபெரும் கண்டன பேரணிக்கு அழைப்பு விடுக்க கேட்டுக்கொண்டார் ... அதற்கு ஸ்டாலின் ஆவன செய்வதாக தெரிவித்தார் ..இதை கேட்டவுடன் விளாதிமீர் புடின் அதிர்ச்சியில் இருக்கிறார் ,,,உடல்நிலை சரியில்லாமல் போனதாக சொல்கிறார்கள்..விரைவில் போர் நிறுத்தம் வரலாம் ..இப்போதாவது திராவிட மாடலின் சக்தியை புரிந்து கொள்ளுங்கள் ..


பேசும் தமிழன்
ஜூலை 09, 2025 07:25

ஆனாலும் குசும்பு உங்களுக்கு.... இரண்டு கட்சியையும் இப்படி போட்டு கலாய்த்து இருக்கிறீர்களே ???


Eswaran
ஜூலை 09, 2025 07:29

என்னா லொள்ளு.. ஹாஹாஹா...


mohana sundaram
ஜூலை 09, 2025 06:22

பயந்தான் கொல்லி உடைந்த பிளாஸ்டிக் சேர்.


A viswanathan
ஜூலை 10, 2025 02:18

இவரை கூட்டணியில் இருந்து விலக்கி வைத்தால் இவருடைய சுயரூபம் தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை