உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள் விற்பனைக்கு ஏன் அனுமதிக்க கூடாது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

கள் விற்பனைக்கு ஏன் அனுமதிக்க கூடாது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் மதுபானங்களை விற்க அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது?' என தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார். இவை தொடர்பாக ஜூலை 29ல் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ram
ஜூலை 22, 2024 20:16

இது என்ன நியாயம்... பல கோடிகளை கொட்டி சாராய தொழிட்சாலை வச்சிருக்கும்.. அதைவைத்தே கல்லா கட்டும் ஆளும் கட்சி கூட்டம் எங்கே போறதாம்..


கோபால கிருஷ்ணன்
ஜூலை 22, 2024 19:41

இது என்ன சின்னபிள்ளைதனமா இருக்கு.....திமுகவின் சாராய ஆலை அதிபர்கள் வாழ்க்கை என்னாவது....இப்படி கிருக்குத்தனமாக அறிவுரை கூறுவதை உயர்நீதி மன்றம் நிறுத்தி கொல்லவேண்டும்...!!!


தாமரை மலர்கிறது
ஜூலை 22, 2024 19:11

கள் விற்றால், டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கப்படும். அதனால் அரசியல்வாதிகளின் மது விற்பனை வருமானம் குறையும் என்பதால் யுவர் ஹானர்.


என்றும் இந்தியன்
ஜூலை 22, 2024 17:44

டாஸ்மாக் விற்பனை உடனே ரூ 52,000 கோடியிலிருந்து வெறும் ரூ 5,200 கோடி ஆனாலும் ஆச்சரியமில்லை கள் விற்பனைக்கு அனுமதி தந்தால் என்று திருட்டு திராவிட மடியல் அரசுக்கு உளவுத்துறை மூலமாக தெரிந்திருக்கும். ஆகவே தான் கள் விற்பனைக்கு அனுமதியில்லை


Rajarajan
ஜூலை 22, 2024 16:08

ஆஹா, போட்டாங்கய்யா நங்கூரத்தை நச்சுன்னு.


Lion Drsekar
ஜூலை 22, 2024 15:51

திரு ராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விற்பனை வரி 2% என்று அறிமுகப்படுத்தி மாநிலத்தின் வருவாய்க்கு பயன்படுத்தினார்


Vijay D Ratnam
ஜூலை 22, 2024 15:19

நம்மூரில் விற்பது இருக்கட்டும். கள் விற்பனையை ஏன் சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல கூடாது. உலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு நிறுவனம் PERNOD RICARD மது தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. MALIBU 21% vol என்ற பிராண்டில் வொயிட் ரம் என்று உலகளவில் கள் விற்பனை செய்கிறார்கள். 50 சதவிகித கள் மற்றும் வாழை, அன்னாசி, மாம்பழம், ஸ்ட்ராபறி, செரிப்பழங்களுடன் தயாராகும் Malibu மதுவிற்கு யூரோப், அமேரிக்கா, ரஷ்யா நாடுகளில் பெரியளவில் டிமாண்ட் உள்ளது. இரண்டு தென்னைமரங்கள் படத்துடன் வெள்ளை நிற பாட்டிலில் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனையாகும் 700 மிலி கள்ளு பாட்டில் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 1350 ரூபாய். தென்னை பனை விவசாயிகள் அமைப்பு, விவசாய சங்கங்கள் இதுகுறித்து விசாரிக்கவேண்டும். பல நாடுகளில் உள்ள விவசாய அமைப்புகளுடன் அந்த நிறுவனம் இணைந்து அப்படித்தான் செயல்படுகிறது. இத்தனைக்கும் பிரான்ஸ் நாட்டில் தென்னைமரம், பனைமரம் என்பதே கிடையாது.


RaajaRaja Cholan
ஜூலை 22, 2024 14:45

கள் ஒரு அருமையான சோம ரசம், போதை கெடுதி, எந்த ஊசி நல்ல ஊசி என்று பார்த்து கண்ணை குத்துவது போல


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 13:36

கள்ளில் பூச்சி, தேள் போன்ற உயிரினங்கள் செத்து மிதிக்கும். அவற்றை வடிகட்டிய பிறகு விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள் என ஒரு கேரள அன்பர் கூறினார். உண்மையா?


RaajaRaja Cholan
ஜூலை 22, 2024 14:43

உண்மை தான் ஆனால் அதன் கொடூரம் ரசாயன உற்பத்தி சாராயத்தை விட மிகவும் குறைவு, அதனை வடிகட்டும் முன்பு பாரத்தால் பெரும்பாலோர் குடிக்க மாட்டார், இது ஒரு பத்து விழுக்காடு அளவே அணைத்து கல் பானையிலும் இருக்காது, மாலை பதநீர் என்னும் கல்லுக்கு முந்தைய பக்குவம் மிகவும் அரசாக்கியம் என்று நம்பப்படுகிறது , மறுநாள் வரை வைத்து pulithaal மட்டுமே போதை


S. Narayanan
ஜூலை 22, 2024 13:27

கள் விற்பனை. அனுமதித்தால் திமுக மந்திரிகள் கொள்ளை அடிக்க முடியாது


மேலும் செய்திகள்