உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்கவுன்டர் எல்லாம் எதுக்கு; அரசை கேட்கிறார் எல்.முருகன்

என்கவுன்டர் எல்லாம் எதுக்கு; அரசை கேட்கிறார் எல்.முருகன்

சென்னை: 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது' என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். யாரோ ஒருவரை என்கவுன்டர் செய்தால் சட்டம் ஒழுங்கு சரியாகிவிடும் என்ற தோற்றத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. துப்பாக்கியை வைத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது. சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்க முடியும்.

அரசியல் நாடகம்

போலீசார் அதனை செய்ய முடியாது. செந்தில் பாலாஜி ஜாமினில் தான் வந்துள்ளார். விடுதலை ஆகவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் அது ஒழிப்பு மாநாடு ஒரு அரசியல் நாடகம். குஜராத், பீஹாரில் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது? மது உற்பத்தி ஆலைகளை திமுகவினர் நடத்துவதால் தமிழகத்தில் மது ஒழிப்பு சாத்தியமில்லை. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Saleem
செப் 29, 2024 07:08

முதலில் உபி அரசை கேள்வி கேளுங்கள்


சூரஜ்சிங்
செப் 29, 2024 03:00

என்கவுண்ட்டர் வாணாம். வூட்டுக்கு புல்டோசர் உடலாமா?


R Elayaperumal
செப் 28, 2024 23:08

உத்திர பிரதேசத்தில் என்கவுண்டர் நடத்தினால் சரி. இங்கு நடத்தினால் தப்பா?


Ramesh Sargam
செப் 28, 2024 20:36

முருகன் கருத்தை இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இதுபோன்ற ஒரு சில குற்றங்களுக்கு என்கவுண்டர்தான் சரி. வழக்கு பதிவு செய்தல், வழக்கு பல ஆண்டுகள் நடத்தல், முடிவில் சாட்சியம் போதவில்லை என்று குற்றவாளிகளை விடுவித்தல்..... இதெல்லாம் சரியில்லை. என்கவுண்டர் தான் சரியான தீர்ப்பு.


sankar
செப் 28, 2024 18:32

பல விஷயங்களையும் திசை திருப்ப - வேறு எதற்கு ?


Indian
செப் 28, 2024 17:08

எந்த நல்ல காரியம் செய்தாலும் , குறை சொல்றதே வாடிக்கையா போச்சு ..


கோவிந்தராசு
செப் 28, 2024 15:03

மால மரியாத செய்யணும்ங்க றயா நீ எல்லாம் அமைச்சன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை