உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையை இம்முறையாவது கைப்பற்றுமா தி.மு.க.,

கோவையை இம்முறையாவது கைப்பற்றுமா தி.மு.க.,

''வேளாண் கருவிகள் விலையை ஏத்தி விற்குறாங்க பா...'' என, ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''தமிழக வேளாண்மை துறை மூலமா விவசாயிகளுக்கு கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, இரண்டு கதிர் அரிவாள்னு ஆறு உபகரணங்கள் அடங்கிய, 'வேளாண் கருவிகள் தொகுப்பு' வழங்குறாங்க பா...''மொத்தம், 3,000 ரூபாய் மதிப்புள்ள இந்த தொகுப்பை, 50 சதவீத மானியத்துல, அதாவது, 1,500 ரூபாய்க்கு அரசு தருது... ரேஷன் கார்டு அடிப்படையில, ஒரு குடும்பத்துக்கு ஒரு தொகுப்பு தான் தரணும் பா...''அதுலயும், சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், விதவைகள், திருநங்கையர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை தரணும்... சிட்டா, பி.எம்., கிஸான் எண், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் விண்ணப்பிக்கணும் பா...''ஆனா, பெரம்பலுார் மாவட்டம் மற்றும் யூனியன்ல இருக்கிற வேளாண் துறையினர் இந்த விதிமுறைகள் எதையும் கண்டுக்கிறது இல்ல... வேளாண் கருவி தொகுப்பை, 2,500 ரூபாய் வரைக்கும் விற்கிறதோட, பயனாளிகளை சேர்க்கவும் கணிசமா லஞ்சம் வாங்குறாங்க பா...''இன்னும் சிலர், கருவிகளை தங்களது சொந்த உபயோகத்துக்கு எடுத்துட்டும் போயிடுறாங்க... பி.எம்., உதவித்தொகை திட்டத்துல விவசாயிகளை சேர்க்கவும், 2,000 துவங்கி, 5,000 ரூபாய் வரைக்கும் வசூலிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அதிகாரி இல்லாததால, அலுவலர்களும் சரியா வர்றது இல்லைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி கமிஷனரா சேம் கிங்ஸ்டன் என்ற அதிகாரி இருக்காரு... இவர், இடங்கணசாலை கமிஷனர் பொறுப்பையும் சேர்த்து பார்க்கிறதால, அடிக்கடி அங்க போயிடுறாருங்க...''பெரும்பாலும், தாரமங்கலத்துல அவர் இல்லாததால, நகராட்சி அலுவலர்கள் சிலரை தவிர மற்ற யாரும் சரியான நேரத்துக்கு ஆபீஸ் வர்றதே இல்லைங்க... அப்படியே வந்தாலும், மொபைல் போனையே நோண்டிட்டு இருக்காங்க...''அதுவும் இல்லாம, 'ஈகோ' பிரச்னையால அதிகாரிகளிடம் ஒற்று மையும் இல்ல... இதனால, சொத்து வரி பெயர் மாற்றம், புது குடிநீர் இணைப்புன்னு பொதுமக்கள் மனுக்கள் குடுத்து ஒரு வருஷம் ஆகியும், பெண்டிங்குல கிடக்குது...கேப்டன் இல்லாத கப்பலா, தாரமங்கலம் நகராட்சி தத்தளிக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''கோஷ்டிப்பூசலை தீர்க்கலன்னா, கோவையை இந்த முறையும் கோட்டை விட்டுடுவோம்னு சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''தி.மு.க., தகவலா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி''ஆமாம்... கோவையில, 'மாஜி' அமைச்சரின் தம்பி மருமகனான டாக்டருக்கு தான், தி.மு.க.,வுல சீட் தரப்போறதா தகவல்கள் பரவறது... ஆனா, 'மாஜி' தரப்புக்கும், டாக்டர் தரப்புக்கும் பேச்சுவார்த்தை கூட கிடையாது ஓய்...''இதனால அவரை நிறுத்தினா, 'மாஜி' தரப்பே, 'பொங்கி' எழுந்து, அவரை தோற்கடிச்சுடும்னு தொண்டர்கள் புலம்பறா... இதுக்கு நடுவுல, மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான, 'சின்னவர்' ஒரு முறை மட்டும் எட்டி பார்த்துட்டு போனவர் தான், அப்பறமா வரவே இல்ல ஓய்...''கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கறதால, 'தேர்தலுக்கு முன்னாடி அவாளை எல்லாம் ஒருங்கிணைக்கணும்... இல்லாம போனா, சட்டசபை தேர்தல் மாதிரி, லோக்சபா தேர்தல்லயும் கோவை கைநழுவிடும்'னு உடன்பிறப்புகள் எச்சரிக்கை பண்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal s
மார் 20, 2024 16:49

சட்டமன்ற தேர்தலில் பாஜக கோவையில் பெற்ற வெற்றி அதிமுக என்பதை இவர்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது!


Oviya Vijay
மார் 20, 2024 09:38

நீங்கள் கனவு காண வேண்டாமென்று சொல்லவில்லை... ஆனால் தேர்தல் முடிவு வரும் போது அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள்... உங்கள் இதயங்கள் பத்திரம்...


Oviya Vijay
மார் 20, 2024 08:07

இப்போது மட்டும் அல்ல... இனி எப்போதும் கோவையை பிஜேபி அல்லாத ஒரு கட்சி தான் கைப்பற்றுமேயன்றி மதவாத பிஜேபிக்கு இனி எந்நாளும் கோவையில் வெல்ல வாய்ப்பு இல்லை... சென்ற முறை அதிமுக கருணையில் ஒரு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று விட்டு ஏதோ மொத்த கோவையிலும் பிஜேபி ஆதரவு என கதை விடுவது உங்களுக்கே காமெடியாக தெரியவில்லையா? சும்மா சொல்லி தான் பார்ப்போமே என்பது போல் உள்ளது... நீங்கள் கனவு காண வேண்டாமென்று சொல்லவில்லை... ஆனால் தேர்தல் முடிவு வரும் போது அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள்... இதயம் பத்திரம்...


Ramanujadasan
மார் 20, 2024 09:45

ஏனிந்த பதட்டம் ? உண்மையை மறைக்க முடியாது ஓவிய விஜய். இந்த முறை கோவை மட்டுமல்ல, தென் தமிழகம், மேற்கு தமிழகம் இரண்டும் பிஜேபி யை தான் ஏக மனதாக ஆதரிக்க போகிறது, பிஜேபி யை வெற்றி பெற வைக்க போகிறது. உங்களுக்கு நீங்களே சொல்லி கொள்ளுங்கள் " தேர்தல் முடிவு வரும் போது அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள்... இதயம் பத்திரம்." என்று .....


ramesh
மார் 20, 2024 10:04

பிஜேபி கோவையில் தோல்வி அடைய போவது உறுதி .தேர்தல் முடிவு வந்தவுடன் இதயத்தை பாதுகாக்க இப்போதே பயிற்சி எடுத்து கொள்ளுங்கள் ராமானுஜதாசன்


Ramanujadasan
மார் 20, 2024 10:40

அதை பார்த்து விடுவோம், கோவை மக்கள் குசும்பு காரர்கள் என சின்னது உமக்கு நினைவில்லை போல. தீய முகவை ஒழிக்க , பிஜேபி மட்டுமே சக்தி வாய்ந்தது என தெரிந்தவர்கள் அவர்கள் , அதிமுகவிற்கு போட படும் வோட்டு , தண்டம் எனவும் அறிவார்கள் அவர்கள் .


vijai seshan
மார் 20, 2024 11:17

விடியல் அரசு ஜெயிக்கனும்னு சொல்றியா கேவலமா இருக்கு


KumaR
மார் 20, 2024 12:43

பிஜேபி கூட்டணிலய தான் போன தர ஜெயிச்சுதுனு சொல்லுறீங்க.. அதேமாரி உங்க திமுக வ கூட்டணி இல்லாம தமிழ்நாட்டுல நின்னு ஜெயிக்க சொல்லுங்க அப்புறம் அடுத்த கூட்டணியை பத்தி நீங்க வாய் கிழிய பேசலாம்..


Nalla
மார் 20, 2024 08:08

கோவையில் தி மு க வெற்றி உறுதியாகிவிட்டது


Ramanujadasan
மார் 20, 2024 09:46

வடிவேலு சந்தானத்தை மிஞ்சிய காமெடி கும்பலில் மற்றும் ஒருவர் இவர்


N SASIKUMAR YADHAV
மார் 20, 2024 11:36

கோவை பயங்கரவாதிகளை விடுவித்து விட்டதால் கோவை இசுலாமிய பெருமக்கள் பெருவாரியாக தீயமுக கூட்டணிக்கு வாக்களித்து விடுவார்களா


Ramesh Sargam
மார் 20, 2024 07:56

தமிழகத்தை விட்டே திமுக ஒழியவேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நீங்கள் என்னடாவென்றால் கோவையை இம்முறையாவது கைப்பற்றுமா தி.மு.க. என்று கேட்கிறீர்கள்? திமுக என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?


sankaranarayanan
மார் 20, 2024 07:52

சென்ற மாநில தேர்தல் முன்பு இருவர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் அடைக்கலம் ஆனார்கள் ஒருவர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார் அவரால் கொங்கு மண்டலத்தில் எந்த பயனும் இனி இல்லை மற்றொருவர் தேனி தங்கத்தமிழ்செல்வன் இவர் திமுகவில் சேர்ந்தார் என்றுதான் தெரியும் ஆனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் இதுதான் நடப்பு


J.V. Iyer
மார் 20, 2024 07:11

மக்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். பணம் கொடுத்தால் ஈரோடு ராமசாமி மீது சத்தியம் செய்து வாங்கிக்கொள்வார்கள். ஆனால் பாஜகவிற்கு ஓட்டு போடுவார்கள். இனிமேல் இந்த தீய திராவிஷக்கட்சிகள் மக்களை ஏமாற்ற முடியாது.


Ramanujadasan
மார் 20, 2024 09:48

உண்மை தான். இந்த குறைந்த பக்ஷ விழிப்புனர்வு கூட இல்லையேல் , தமிழகத்தை, சாராய மற்றும் போதை கும்பல்களிடம் இருந்து காப்பற்ற அந்த ஆண்டவனால் கூட முடியாது


Bye Pass
மார் 20, 2024 04:30

பாலாஜி அனுகிரஹமும் இந்த தடவை இருக்காது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை