உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுதலை சிறுத்தைகளுக்கு மூன்று சீட் தருமா தி.மு.க.?

விடுதலை சிறுத்தைகளுக்கு மூன்று சீட் தருமா தி.மு.க.?

லோக்சபா தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது. அந்த தகவலை தி.மு.க.,விடமும் தெரிவித்து காத்திருக்கிறது.இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:திருச்சியில் வரும் 26ம் தேதி, 'வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது அவர், 28ம் தேதி வெளிநாடுகள் செல்ல திட்டமிட்டிருப்பதால், திருச்சி மாநாட்டுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அவருக்கு பதிலாக அமைச்சர் உதயநிதி பங்கேற்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன், தொகுதிகள் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும் என, திருமாவளவன் தரப்பில் கேட்கப்பட்டது. சென்னை திரும்பிய பின் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தலாம் என, தி.மு.க., தரப்பில் பதிலளிக்கப்பட்டு உள்ளது. மூன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.இவ்வாறு வி.சி., வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை