உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டண உயர்வால் மின்சார வாரியம் இழப்பில் இருந்து மீளுமா?: சிறப்பு விவாதம்

கட்டண உயர்வால் மின்சார வாரியம் இழப்பில் இருந்து மீளுமா?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ofpx1pvs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த உயர்வு, இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.மின் கட்டணம் உயர்வால் பாதிக்கப்படுவது யார்? கட்டண உயர்வால் மின்சார வாரியம் இழப்பில் இருந்து மீளுமா? என்பது குறித்து விவாதம் நடந்தது.இது தொடர்பான விவாதத்தை பார்க்க,கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=CfieBMF_1GA


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Muthu Kumaran
ஜூலை 18, 2024 10:31

நோ ரெகவரி , ஒன்லி collection தான், கொள்ளையடிக்கும் முயற்சி


Esan
ஜூலை 18, 2024 07:50

அரசின் ஆட்சியாளர்கள் மின்கட்டணம் அவர்களே கட்டுகிறார்களா அல்லது மக்கள் பணமா? மின்கட்டண உயர்வால் அவர்கள் பாதிக்கப் படுகிறார்களா? ஆண்டவனுக்கே வெளிச்சம்


r ganesan
ஜூலை 17, 2024 12:57

நன்றாக சிந்தித்து பாருங்கள், தொலைபேசி கட்டணம் அன்று போல் BSLNL இடமே இருந்திருந்தால் இன்று ஒரு முறை பேச குறைந்த பட்சம் 100 ரூபாயாக உயர்ந்து இருக்கும், நல்ல வேலை தனியார் வசம் வந்ததால் நாம் பிழைத்தோம். ஆனால் TNEB க்கு விடிவு காலம் பிறக்கவில்லை. லஞ்சம் லஞ்சம் அடிமட்ட வுழியரிலிருந்து மந்திரி வரை லஞ்ச பிசாசுகள்.


N Sasikumar Yadhav
ஜூலை 17, 2024 11:48

மீள வாய்ப்பில்லை 100 சதவீதம் விஞ்ஞானியான ஊழல் அழிந்தால்தான் தமிழக மின்சார வாரியம் மீளும்


Venkataraman
ஜூலை 17, 2024 11:44

மின்கட்டண உயர்வுக்கு அவசியமே இல்லை. இலவச மின்சாரம், ஊழல், கொள்ளை, நிர்வாக சீர்கேடு ஆகியவைதான் கட்டண உயர்வுக்கு காரணம். நிலக்கரி வாங்கியதில் ஊழல், திருட்டு, தனியாரிடமிருந்து அதிக கட்டணம் கொடுத்து வாங்கிய மின்சாரத்தில் ஊழல், டிரான்ஸ்பார்மர்கள், கேபிள் வாங்கியதில் ஊழல், வீடுகளில் பொருத்தப்படும் மீட்டர்கள் வாங்கியதில் ஊழல் இப்படி ஏராளமான ஊழல்களாலும், திருட்டு கொள்ளைகளாலும் மின்சார துறையே சீரழிந்து போய்விட்டது. இப்போது நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்ட கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். அதுவும் மத்திய அரசு அறிவுறுத்தியதால், இல்லை யென்றால் மத்திய அரசின் உதவித்தொகை மாநில அரசுக்கு கிடைக்காது. இந்த விடியாத அரசில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல். எல்லாமே நாசமாகிக்கொண்டு வருகிறது. இதற்கு முன்பு அதிமுக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்த போது அதை எதிர்த்து சுடாலினும் அவருடைய ஆதரவாளர்களும் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இப்போது மின் உயர்வை அறிவித்துவிட்டு யாருக்குமே பாதிப்பு ஏற்படாது என்பது போல நாடகமாடுகிறார்கள்.


S.V.Srinivasan
ஜூலை 17, 2024 10:50

கேள்வியே அபத்தமா இருக்கே. யார் பாதிக்க படுவார்கள் . கண்டிப்பா பொது மக்கள்தான் .


Ramesh Sargam
ஜூலை 17, 2024 10:46

தமிழக மக்களுக்கு இலவசம், ௹. 200 கிடைத்தால், சரக்கு தங்குதடையின்றி கிடைத்தல், அது போதும். மின்கட்டண உயர்வு, மற்ற பொருட்களின் விலை உயர்வு பற்றி don't care attitude தான்.


Svs Yaadum oore
ஜூலை 17, 2024 10:33

தமிழ் நாடு விடியல் திராவிடர்கள் ஆளும் மாநிலம். விடியல் திராவிடர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த மிக கடுமையாக உழைத்து, பல தியாகங்கள் செய்து, அவர்கள் சொந்த காசில் செலவு செய்து தமிழ் நாட்டை நன்கு படித்து முன்னேறிய அதிக வரி செலுத்தும் மாநிலமாக மாற்றியுள்ளார்கள். மின் கட்டண விஷயத்தில் இந்த மாநிலத்தை படிக்காத பின்தங்கிய வடக்கன் மாநிலங்களான குசராத்து உத்தர பிரதேசம் மேற்கு வங்கம் மாநிலங்களுடன் ஒப்பிடுவதே தவறு. விடியல் சொல்வது போல தமிழ் நாட்டை முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுவதுதான் முறையாக இருக்கும் ...


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி