| ADDED : அக் 20, 2025 11:15 PM
கீழடி: சிவகங்கை மாவட்டம், கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கீழடியில் கடந்த 2015ல் மத்திய தொல்லியல் துறை பண்டைய கால மக்களின் வாழ்வியல் குறித்த அகழாய்வை தொடங்கியது. இதில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நகர நாகரிகம் வெளிப்பட்டது. மூன்று கட்ட அகழாய்விற்கு பின் தமிழக தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d09ix3xv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=010ம் கட்ட அகழாய்வு 2024 ஜூன் 18ம் தேதி ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரது ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு பாசிகள், கண்ணாடி மணிகள், வண்ண பானைகள் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் மட்டுமே கண்டறியப்பட்டன. அறிக்கை அளிக்க வேண்டும் 9ம் கட்ட அகழாய்வு வீரணன் நிலத்தில் மார்ச்சில் தொடங்கி செப்டம்பருடன் நிறைவடைந்தது. இதில் தங்க கம்பி, 10 செம்பு வளையல், ஏழு கார்லியன் மணிகள், 452 கண்ணாடி மணிகள் உட்பட 804 பொருட்கள் கண்டறியப்பட்டன. பத்தாம் கட்ட அகழாய்வு இந்தாண்டு மார்ச் வரை நடந்ததாக அறிவிக்கப்பட்டது. 11ம் கட்ட அகழாய்வு ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை தொடங்கப்படவே இல்லை. முதல்வர் வரும் ஜனவரியில் திறந்த வெளி அருங்காட்சியகம் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் 11ம் கட்ட அகழாய்வு 2026 பிப்ரவரியில் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெற வாய்ப்புள்ளது. 11ம் கட்ட அகழாய்வு தொடங்குவது குறித்து தொல்லியல் துறை சார்பில் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. மத்திய தொல்லியல் துறையின் 'காபா' அமைப்பிடம் அகழாய்வு பணிகள் தொடங்க தமிழக தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும். எந்த இடத்தில் எத்தனை ஏக்கரில் பணிகள் நடைபெறும், 10ம் கட்ட அகழாய்வில் என்னென்ன பொருட்கள் கண்டறியப்பட்டன என்பது குறித்து அறிக்கை அனுப்பிய பின் தான் அடுத்த கட்ட அகழாய்விற்கு அனுமதி கிடைக்கும். இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டால் எந்த வித பதிலும் அளிக்க மறுத்துவிட்டனர். அலைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை.