த.வெ.க., இன்று போராட்டம் விஜய் பங்கேற்பு?
சென்னை:சென்னையில் இன்று நடக்கும் தமிழக வெற்றி கழகம் போராட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதில், கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்ததற்கு நீதி கேட்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் போலீஸ் விசாரணையில், 24 பேர் உயிரிழந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், த.வெ.க., சார்பில், சென்னை சிவானந்தா சாலையில் இன்று காலை, 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.