உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கியாரன்டி தருவீர்களா? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

கியாரன்டி தருவீர்களா? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும் உள்ளிட்ட கேரண்டிகளைத் தருவீர்களா என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:* பருவ காலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில், தமிழகத்தில் வட்டமடிக்கும் பிரதமரே... குஜராத் மாடல், சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கியாரன்டி கார்டுடன் லோக்சபா தேர்தலுக்கு வந்திருக்கும் பிரதமரே, இதோ இந்த கியாரன்டிகளை தருவீர்களா?* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்* எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படும்* தமிழகத்திற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு விலக்கு* ஒருபோதும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது* மாநில பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக் கடன்கள் ரத்து* ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் 400 ரூபாய்* வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்* தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை குறைப்பேன்; செஸ், சர் சார்ஜ் என்ற வரிக்கொள்ளை அறவே நீக்கம்* அமலாக்கத் துறை, -வருமான வரித்துறை, சி.பி.ஐ., ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும்* மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப்பகிர்வு தருவேன்* வணிகர்களையும் சிறு, குறு தொழில்களையும் வதைக்கும் ஜி.எஸ்.டி., வரியில் சீர்திருத்தம்* கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்* வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை, பா.ஜ.,வின் ஊழல்கள் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்* கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்* சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்* தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன்* 'அக்னிபாத்' திட்டத்தை ரத்து செய்வேன்* வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு* சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக் கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு* தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நுாலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன்* குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன்* சிறுபான்மை மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன்* இதற்கெல்லாம் நீங்கள் கியாரன்டி அளிக்கத் தயாரா?இல்லையென்றால், உங்கள் உத்தரவாதம் என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும், 'மேட் இன் பா.ஜ., வாஷிங் மெஷினுக்கு' மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

R Kay
ஏப் 13, 2024 01:04

விடியலு கொடுத்த காரண்டீகளையெல்லாம் அப்படியே நிறைவேத்திட்டாரு இந்த அவலட்சணத்தில் கேள்வி கேக்குறதை பாரு


கீரன் கோவை
ஏப் 12, 2024 10:31

நீங்கள் அறநிலையத்துறை ஹிந்து கோவில்களிலிருந்து வெளியேறும் என்று கியாரன்டி தருவீர்களா?


Naga Subramanian
ஏப் 12, 2024 07:07

சதா சர்வ காலமும், இந்துக்களை அவமானப்படுத்துவதும், அவர்களது பண்டிகைகளுக்கு, முதல்வர் என்ற முறையில் வாழ்த்து கூட சொல்லாமல் செல்வதும் யாவரும் அறிந்ததே இவை யாவும் தனது பதவியை தக்கவைக்க, சிறுபான்மையினரின் ஓட்டை கவருவதற்காக என்பதை அனைவரும் அறிவர் மொத்தத்தில் திமுகவிற்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டது


Nagarajan S
ஏப் 11, 2024 18:17

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முக்கால் வாசிபேர்களில் சமஸ்க்ரித மொழிதான் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் தந்தை "கருணா நிதியின் பெயரில் கருணாநிதி , மனைவி பெயரில் துர்கா, மகன் உதய நிதியின் பெயரில் உதயநிதி , மருமகன் தயாநிதியின் பெயரில் தயாநிதி , கலாநிதி யின் பெயரில் கலாநிதி, இன்ப நிதி பெயர் ஏன் உங்கள் கட்சி சின்னமான உதய சூரியன் பெயரில் உதய , மற்றும் மருமகன் சபரீசன் பெயர் மற்றும் கட்சியின் பெயரில் திராவிட என்ற அனைத்தும் சமஸ்க்ரித மொழியின் தாக்கம்தானே ?


P G Sundarrajan
ஏப் 11, 2024 01:01

முதல்வர் அவர்களே, நீங்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுப்பீர்கள் காரணம் நீங்க ஜெயிக்க முடியாது ஜெயித்தாலும் உங்களுக்கு பிரதமர் ஆகும் தகுதி இல்லை எங்கள் பிரதமர் அப்படியா? அவர் தன்னால் நிறைவேற்ற, தன அதிகாரத்திற்கு உட்பட்டு, பொறுப்பாக, நல்ல மனா நிலையுடன் வாக்குறுதிகளை தருவார் தந்தாள் நிச்சயம் செய்வார் உஙகளைப்போல் அவர் இல்லை


HoneyBee
ஏப் 10, 2024 20:45

நல்லா உருட்டற உருட்டு காசா பணமா பொய் தானே உங்களுக்கு முக்கியம் நாட்டின் நலன் இல்லை எவ்வளவு கொள்ளை அடிக்க வேண்டும் என்று இல்லை கிடைத்ததை சுருட்டி ஆட்டய போட வேண்டும்


Bala
ஏப் 10, 2024 20:39

தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா? முதல்வர் ஸ்டாலின் அவர்களே டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்படும் ஏனென்றால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாகி விட்டனர் தமிழகத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா வியாபாரம் செய்யும் பேர்வழிகளை திமுகவில் சேர்க்கமாட்டோம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்போம் திமுகவில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை மந்திரி சபையில் இருந்து நீக்குவோம் மேலும் ஊழலே செய்யமாட்டோம் தமிழகத்தில் மைனாரிட்டி மத அரசியல் செய்யமாட்டோம் இந்து மதத்திற்கு எதிராக வெறுப்பை கொட்ட மாட்டோம் கோவில்களை பாதுகாப்போம் ஒரு கோவிலைக்கூட இடிக்க விடமாட்டோம் கட்சியில் குடும்ப அரசியல் செய்யமாட்டோம் குடும்ப அரசியலை வேரறுப்போம் தீவிரவாதத்தை எக்காலமும் ஆதரிக்க மாட்டோம் அச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் எல்லா மொழிகளையும் வரவேற்போம், வடக்கு தெற்கு வடக்கர்கள் என்றெல்லாம் பிரிவினை பேச மாட்டோம் மாநில நலன்மட்டுமே கருத்தில்கொண்டு மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம் வேங்கைவயல் அநீதிக்கு நீதிகிடைக்க எங்கள் ஆட்சி முடிவதற்குகுள்ளாவது வழிவகை செய்வோம் சொத்துவரி மின்சார கட்டண உயர்வு இவற்றை குறைத்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் துயர் துடைப்போம் இவ்வாறெல்லாம் தமிழக முதல்வர் தமிழக மக்கள் நலனுக்காக வாக்குறுதி அளிப்பாரா?


Balasubramanian
ஏப் 10, 2024 20:26

இது நல்ல யுக்தி! இவர்களது வாக்குறுதிகளை மத்திய அரசுக்கு திருப்ப முயற்சி! நடந்தால் இவர்களது ஸ்டிக்கர்! நடக்காவிட்டால் மத்திய அரசு செய்யவில்லை/ தரவில்லை!


Barakat Ali
ஏப் 10, 2024 14:37

பாஜகவுக்கு வாக்குகள் போயிடப்போவுதுன்னு பதைபதைப்பா இருக்கு


Barakat Ali
ஏப் 10, 2024 14:29

மக்கள் திராவிடக் கட்சிகளிடம் ஏமாறுவதில் பெருமை கொள்ள வேண்டும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி