உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசு அகன்றால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு: பழனிசாமி

தி.மு.க., அரசு அகன்றால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு: பழனிசாமி

சென்னை:'தி.மு.க., அரசு அகன்றால்தான், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்துார் மாவட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் மகேந்திரன், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.துாத்துக்குடியில் பள்ளி மாணவி, சமையல் பணியாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். தர்மபுரி அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு, கணித ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்துள்ளார் என. வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.தி.மு.க., ஆட்சியில், பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்திற்கும் கண்டத்திற்கும் உரியது. வேலியே பயிரை மேய்ந்தாற்போல், மாணவியர் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும், பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய காவல் துறையிலேயே ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரியால், பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது.இதற்காக, முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு முடிவுக்கு வந்தால்தான், தமிழகம் மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலாக மாறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை