மேலும் செய்திகள்
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின்
8 minutes ago
சென்னை: இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு, 'சக்தி' எனும் உதவித்தொகை திட்டத்தை, தேசிய மகளிர் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இளம்பெண்களின் ஆராய்ச்சி கனவை நனவாக்கவும், உயர் கல்வி கற்க பெண்களை ஊக்குவிக்கவும், தேசிய மகளிர் ஆணையம், புதிய உதவித்தொகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 'சக்தி ஆராய்ச்சி உதவித்தொகை' என்ற பெயரில் உள்ள இந்த திட்டத்தில் பயனடைய, 21 - 30 வயதுக்குள் உடைய, பட்டதாரி பெண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், வன்முறை சார்ந்த பிரச்னைகள், சட்ட உரிமைகள், நீதிக்கான அணுகுமுறை, சைபர் பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, பெண்களின் தலைமை, அரசியல், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார அதிகாரமளித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சி செய்யும் பெண்களுக்கு, ஆறு மாத காலத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு, தேசிய மகளிர் ஆணையத்துக்கு, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
8 minutes ago