செந்தில் பாலாஜியை ஏமாற்றிய மகளிர் காங்கிரஸ் நிர்வாகி
காங்கிரஸ் நிர்வாகி கவிதா, தி.மு.க.,வில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அது தொடர்பான போட்டோவையும், தகவலையும் தன் சமூக வலைதள பக்கத்திலிருந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கினார். கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவி கவிதா, தி.மு.க.,வில் இணைந்தார். அந்த புகைப்படத்தை, செந்தில் பாலாஜி தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தி.மு.க.,வில் கவிதாவை சேர்த்ததற்கு, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையது கடிதம் எழுதியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=grazvpop&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், 'தமிழக காங்கிரசில் கவிதா, எந்த பதவியிலும் இல்லை. அவர் மகளிர் காங்கிரஸ் பொறுப்பில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டது தவறு. அதை நீக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, தன் சமூக வலைதள பக்கத்திலிருந்த புகைப்படத்தை, செந்தில் பாலாஜி உடனடியாக நீக்கி விட்டார். அவரது நடவடிக்கைக்கு, ஹசீனா சையத் நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். - நமது நிருபர் -