| ADDED : ஜன 03, 2024 04:43 PM
சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு இம்மாதமே தொகை வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, செப்டம்பர் 15ம் தேதி முதல்வா் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.ஏற்கனவே ரூ.1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உரிமைத் தொகை பெற்று வரும் நிலையில், மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் போ் மேல்முறையீடு செய்திருந்தனர். அவற்றை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை பெற 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு இம்மாதமே தொகை வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கும், 2ம் கட்டமாக நவம்பரில் 7.35 லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து 3ம் கட்டமாக இந்த மாதம் தகுதியுள்ளவர்களுக்கு உரிமை தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.