மகளிர் நில உடமை திட்டம்
'தாட்கோ' எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், 'முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம், பி.எம் அஜய் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்' ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் பயன்பெற, 'இ - சேவை' மையம் வழியே விண்ணப்பிக்கலாம் என, 'தாட்கோ' மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.