உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்

கோவை: உலக அளவில் முருக பக்தர்களை ஈர்க்கும் வகையில், மருதமலை கோவில் அடிவாரத்தில், 184 அடி உயரத்துக்கு, வேறெங்கும் இல்லாத சிறப்புகளுடன் மிகப்பெரிய முருகன் சிலை நிறுவும் பணி விரைவில் துவங்க இருக்கிறது.முருகனின் ஏழாம் படை வீடாகக் கருதப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், கோவையின் வடமேற்கு திசையில் 15 கி.மீ., தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கடல் மட்டத்தில் இருந்து 741 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில், பக்தர்கள் கூட்டம் இங்கு அலைமோதுகிறது. நாளுக்கு நாள், பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

உயரமான சிலை

அடுத்தகட்டமாக, உலகத்திலேயே உயரமான, 184 அடி உயர முருகன் சிலை அடிவாரத்தில் நிறுவப்படுகிறது. இதற்கான பீடம் மட்டுமே, 38 அடி உயரத்துக்கு அமைகிறது. இச்சிலை, 110 கோடி ரூபாய் மதிப்பில், தனியார் சிலரது நன்கொடையில் உருவாக்கப்படுகிறது.நட்சத்திர அமைப்பின் மையத்தில் இச்சிலை அமையும். நட்சத்திர குறியீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் முருகனின் அறுபடை வீடுகளின் ஒவ்வொரு அமைப்பும் உருவாக்கப்படும்.முருகனின் அறுபடை வீடுகள் என சொல்லப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகிய தலங்களில் அருள்பாலிக்கும் முருக பெருமானை, மருதமலையிலும் தரிசிக்கும் வகையில், சிறிய அளவில் சன்னிதி உருவாக்கப்படுகிறது.

குறவன் குறத்தி குடில்

அடிவாரத்துக்குள் நுழைந்ததும் குறவன், குறத்தி வரவேற்கும் வகையில் தனிக்கூடம் அமைக்கப்படுகிறது. அதை கடந்து சென்றால், யானை கூட்டங்களும், மயில்களும், சேவல்களும் பக்தர்களை வரவேற்கும். அவற்றை கடந்தால் காளை மாடுகளும், காளை பூட்டிய மாட்டு வண்டியும் இருக்கும். சிலைக்கு முன் மெகா சைஸ் வேல் நிறுவப்படுகிறது. முருகனின் வாகனமான மயில், வேல் அருகே நிற்கும் வகையில் சிலை வடிவமைக்கப்படுகிறது. சுற்றிலும் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் மயில் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.

இளைப்பாற மண்டபம்

முருகனை தரிசிக்க படிக்கட்டுகள் வழியாக நடந்தும், கோவில் பஸ்கள் வாயிலாகவும் மலைக்கு செல்லலாம். இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் ஏசி பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மலை படிக்கட்டுகளில் நடந்து செல்லும்போது, இளைப்பாறுவதற்கு ஆங்காங்கே மண்டபங்கள், கழிப்பறை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

8 ஏக்கர் நிலம்

பாரதியார் பல்கலை அருகே புதிதாக பஸ் ஸ்டாண்ட் உருவாக்க, 8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அரசு பஸ்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படும். தனியார் டூரிஸ்ட் வாகனங்கள் மற்றும் கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும். யாத்ரீகர்கள் தங்குவதற்கு பிரத்யேக வளாகம் கட்டப்படுகிறது.பல்கலை அருகே நுழைவாயில் அமைக்கப்பட்டு, பக்தர்கள் நடந்து சென்று, அடிவாரத்தில் நிறுவப்படும் முருகன் சிலையை தரிசித்து விட்டு, மலைக்கு செல்ல முடியும். 184 அடி உயர சிலை நிறுவப்படும் பீடத்துக்குள், முருகனின் அறுபடை வீடுகளின் தல வரலாறு கண்காட்சி அமைக்கப்படும். அதை சுற்றிப்பார்த்தால், ஒவ்வொரு தலத்தின் வரலாறு, சிறப்புகளை அறியலாம். இனி, மருதமலை முருகனின் அவதாரம் உலக பக்தர்களால் போற்றப்படும் என்பது உறுதி!

'கொங்கு மக்களின் கனவு'

மருதமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது:உலகின் உயரமான முருகன் சிலை அமைந்திருக்கும் இடம் என்ற பெருமை, மருதமலைக்கு கிடைக்கப் போகிறது. தனியார் சிலரது நன்கொடை மூலமாக சிலை நிறுவப்படும். இதர பணிகள், கோவில் நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலமாக செய்யப்படும். பக்தர்களின் வசதிக்காக, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டி கட்டப்படுகிறது. மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார அலுவலகம், மாநகராட்சி வார்டு அலுவலகம் அமைக்கப்படும். ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில், மலை அடிவாரத்தில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க குளம் உருவாக்க இருக்கிறோம்.சுற்றுலா வளர்ச்சி அடையும்; கோவில் வருவாய் பெருகும். முருகனின் அருள் எட்டுத்திசைக்கும் பரவும். கொங்கு மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகப் போகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

B Ramesh Chandra Jain
ஏப் 21, 2025 21:57

ஓம் murugan


B Ramesh Chandra Jain
ஏப் 21, 2025 21:56

ஓம் muurgan


சண்முகம்
ஏப் 20, 2025 21:26

வானுயர கோபுரங்களை கோயிலில் கட்டியது அக்கால தமிழர்கள் செய்த தவறா?


தமிழ்வேள்
ஏப் 20, 2025 21:00

அதென்ன சிலையை சுற்றி உள்ள அனைத்து மாடங்களும் இஸ்லாமிய ஸ்டைலில் மொட்டை மொட்டை யாக உள்ளன? நாளை மருதமலையையும் வக்பு போர்டு ஆட்டையை போட வழிபார்த்து கொடுக்கிறாரா ஷோக்..கர்..பாபு.


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
ஏப் 20, 2025 17:06

எம்பெருமான் முருகன் சிலை திறப்பு நாளே திருட்டு திராவிடம் வீழ்ந்து விடும் நன்னாள் ஆகும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.


பிரேம்ஜி
ஏப் 20, 2025 15:22

பேனாவுக்கும் சிலை! அடுத்து பென்சிலுக்கும் சிலை!


Ramesh Sargam
ஏப் 20, 2025 12:47

கடவுள் கேட்டாரா ரூ. 110 கோடியில் தனக்கு சிலைவைக்கவேண்டும் என்று. அந்த பணத்தில் பல ஏழைகளுக்கு வீடு வசதி, பல ஏழை மாணவர்களுக்கு படிப்பு வசதி, பல ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி இப்படி பல நல்ல விஷயங்களை செய்யலாம். அதையே கடவுள் ஏற்றுக்கொண்டு எல்லோருக்கும் அருள் புரிவார்.


ramesh
ஏப் 20, 2025 13:51

வல்லபாய் பட்டேல் கேட்டாரா எனக்கு கடலுக்குள் சிலை வைக்க சொல்லி


ramesh
ஏப் 20, 2025 13:57

கடவுள் கேட்கவில்லை என்று சொல்லுகிறீர்கள் பிறகு எதற்கு ராமர் கோவில் கட்டவேணும் என்று கொடி பிடித்தீர்கள். அந்தப்பணத்தில் தாங்கள் சொல்வதுபோல ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து இருக்கலாமே . கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் . அவரை வைத்து அரசியல் செய்வது தான் தவறு


Rajah
ஏப் 20, 2025 11:53

இந்துக்களின் வாக்குகளை குறிவைத்து கட்டப்படும் சிலை என்பது எம்பெருமான் முருகனுக்கே தெரியும். கடவுள் மறுப்பை கடைபிடிக்கும் உங்கள் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களா? 55 கோடி அவர்களின் தேர்தல் செலவுக்கு வருவதால் எப்படி எதிர்ப்பு தெரிவிப்பார்கள். உங்கள் நோக்கம் தவறாக இருந்தாலும் முருகன் சிலை மருதமலையில் கட்டப்படுவதை ஆதரிக்கின்றேன். பழக்க தோஷத்தில் 55 கோடி ஆட்டைய போடுவீர்கள் என்று அறிந்தும் கடவுள் மறுப்பு கொண்டவர்களால் தனது சிலையை உருவாக்கும் முருகனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.


ramesh
ஏப் 20, 2025 10:31

இதை ஆடு அல்லது ராஜாவோ கூறி இருந்தால் இந்துமத காவலன் நான்தான் என்று இப்போது எதிர்க்கும் ஒன்று அரை சதவீத கூட்டம் புகழ் பாடும். இந்துக்களை பற்றி பேச இந்த போலி இந்து அரசியல் வாதிகளுக்கு எந்த தகுதியும் இல்லை


ramesh
ஏப் 20, 2025 10:28

இங்கேயே முருகன் சிலை அமைப்புக்கு எதிராக கருத்து போடுவதை பார்த்தால் இந்து பெயரின் போர்வையில் புகுந்த வேற்றுமதத்து காரர்கள் என்பது நன்றாக தெரிகிறது. அப்பன் முருகன் இவர்களின் போலித்தனத்திற்கு தக்க பாடம் கற்பிப்பார்


Balasubramanyan
ஏப் 20, 2025 12:23

Ramesh Sir. Nobody is against ou Lord. Murugan. I am a Hindu. Ardent devotee o Lord Muruga. 100croes fo what. Lord Muruga will not get pleased by these gimmicks. Real devotion and no hatred towards Hinduism are required. Daily these persons are hurting Hindu feelings. Are you not realising it. For this 100 crore you an rebuild the dilapidated temples and temples which require three kala Pooja and money to by oil for lamps,and ingredients for daily neivadhiyam to lord. It includes lot of Murugan temples. Have you visited village temples and the pitiable condition of the priests. Hundreds o f govt schools require proper buildings and other facilities. Have you ever seen the unhygenic condition in villages . No proper roads. No proper burning ghats. It is the same in cities especially Chennai. Do you know recently the sewage water mixed with me to wate in many parts o T Naga in Chennai. The govt tells jet spent crores of rupees. Have they eve checked whether the wok has been done properly.ultimate sufferers are people. Build good libraries in all places. We donot want central libraries. I have seen in many countries libraries fully equipped many numbers in a county. I have seen the libraries are full by chidren and elders. Are we such facilities. Lod Muruga will be much pleased if these are taken care of. Do you think your HcE spends 100crores. No through donation from devotees but they will take credit. No money for the Retd transport persons. They are waiting to get their Retd benefits for numbrof years. Think..


ramesh
ஏப் 20, 2025 13:50

பாலசுப்ரமணியன் சார் தாங்கள் சொல்லுவது அனைத்துக் கட்சியினருக்கும் மாநிலங்களுக்கும் பொருந்தும். இப்போது பணம் வீணாக செலவு ஆகிறது என்று சொல்லும் நீங்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அரசு வில் அமைக்க பட்ட இரட்டை இலை மற்றும் குதிரை கண்ணில் படவில்லையா .அல்லது குஜராத் கடலில் அமைக்கப்பட்ட வல்லபாய் பட்டேல் சிலை நினைவுக்கு வரவில்லையா . இங்கே கருணாநிதிக்கு சிலை வைக்கவில்லை . தமிழ் கடவுள் முருகனுக்குத்தான் அமைக் படுகிறது . மேலும் எந்த dmk காரனாவது கோவிலுக்குள் போகக்கூடாது என்று தடுத்தானா அல்லது பிடித்து இழுத்தானா. உண்மையை ஞை தொட்டு சொல்லுங்கள். ஒட்டுக்காக dmk இந்து மத விரோதி என்று உண்மையை மறைத்து பேசாதீர்கள். dmk வில் இருப்பது 90 சதவீதத்துக்கு மேலானவர்கள் இந்துக்கள்தான். mgr திமுக வில் இருந்தவர் தானே. பெரியாருடன் சேர்ந்து இருந்தவர் தானே . பிறகு எங்கே mgr இந்து விரோதியாக இருந்தாரா. அதேபோலத்தான் மற்றவர்களும் . பிஜேபியை வளர்க்க வழி தெரியாமல் dmk இந்து மதம்க்கு எதிரானது என்று பொய் பிறச்சாரம் செய்கிறீர்கள் என்பதே உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை