உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா காலமானார்

எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா காலமானார்

ஏராளமான சிறுகதைகள் நாவல்கள் எழுதியுள்ள பிரபல தமிழ் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா, 89, இன்று காலமானார்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு என்ற ஊரில் 1935 ஆம் ஆண்டில் பிறந்தார். தபால், தந்தி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.'நம் நாடு' எனும் சிறுவர் புதினம் உக்ரைனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.V.K.SRIRAM
ஏப் 18, 2024 23:43

திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் மிகச் சிறப்பான ஒரு எழுத்தாளர் மற்றும் கதாசிரியர் எளிமையான நடையில் எழுதும் வல்லமை படைத்த சிலரில் அவரும் ஒருவர் அன்னார் எழுதிய மணிக்கொடி சுதந்திரப் போராட்டத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு சிறப்பான விருது பெற்ற புதினம் அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடு செய்ய இயலாத ஒரு பேரிழப்பு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்


K.V.K.SRIRAM
ஏப் 18, 2024 23:39

திருமதி ஜோதிட லதா கிரிஜா அவர்கள் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் கதாசிரியர் எளிமையான நடையில் கதைகள் எழுதுவதில் அவர் தனித்திறமை வாய்ந்தவர் அவர் எழுதிய மணிக்கொடி சுதந்திரப் போராட்டத்தை பின்னனியாக கொண்டு எழுதப்பட்ட மிகச் சிறப்பான புதினம் அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஒரு பேரிழப்பு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ