உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛‛நீ வேற நாடு, நான் வேற நாடு இல்லைடா, எல்லோரும் ஒரே நாடு இந்தியா: சொன்னதை செய்வீங்களா விஜய்?

‛‛நீ வேற நாடு, நான் வேற நாடு இல்லைடா, எல்லோரும் ஒரே நாடு இந்தியா: சொன்னதை செய்வீங்களா விஜய்?

‛‛நீ வேற நாடு, நான் வேற நாடு இல்லைடா. எல்லோரும் ஒரே நாடு இந்தியா'' - இந்த ‛‛பஞ்ச்'' வசனம், தலைவா படத்தில் நடிகர் விஜய் பேசியது. அரசியலில் நுழையும் அச்சாரத்துடன் அவர் பேசிய வசனம் இது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eu3our7z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வசனமெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், அரசியலில் ‛‛தொபுக்கடீர்'' என குதித்த பிறகு, இந்த வசனத்தில் சொன்னபடி நடந்து கொள்கிறாரா என்பது தான் பலரது கேள்வி.தமிழக அரசியலில் ஏதாவது மாற்று அரசியலை அல்லது வித்தியாசமான அணுகுமுறையை முன் வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் கட்சியான 'த.வெ.க'-வின் (தமிழக வெற்றிக் கழகம்) கொள்கைகள், திமுக.,வின் கொள்கைகளின் ஈயடிச்சான் காப்பியாக இருப்பது தான் இந்த கேள்விக்கு காரணம்.தமிழகத்தில் பங்காளி கட்சிகளான திமுக.,வும், அதிமுக.,வும் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்றன. பழம்பெரும் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைந்துவிட்டார் விஜய். இவரது வருகையை எதிர்பார்த்த நடுநிலை வாக்காளர்கள், இவராவது ஏதாவது மாற்றத்தை தருவாரா என்று எதிர்பார்த்தனர். இன்னும் எதிர்பார்க்கின்றனர்.கட்சி ஆரம்பிக்கும்போதே ஈவெரா, அம்பேத்கர் கொள்கைகளை பின்பற்றுவோம் என அறிவித்தார். அப்போதே ஈவெரா, அம்பேத்கர் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் பல கட்சிகள் ஏற்கனவே இருக்கும்போது, புதிதாக இவர் எதற்கு என்று நடுநிலையாளர்கள் யோசித்தனர்.அதோடு விட்டாரா... நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, பள்ளிக் கல்வியில் இருமொழிக்கொள்கை, கல்வியை மாநில பட்டியலுக்குள் மாற்றுதல், கவர்னர் பதவி தேவையற்றது, தை திருநாளுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொன்னது.... என்று திமுக பாடி வரும் அதே பழைய பாட்டை தான் இவரும் பாடினார். டியூன் கூட மாறவில்லை. இதுவும் நடுநிலையாளர்களை முணுமுணுக்க வைத்தது.சரி, ஏதோ அரசியலுக்கு வந்த அவசரத்தில் சில கொள்கைகளை அவர் வெளியிட்டு இருக்கலாம். இனிமேலாவது அவர் தனது பிரகடனங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நடுநிலையாளர்கள் நினைக்கின்றனர்.

காலம் மாறி விட்டது

திராவிட கட்சிகள் தோன்றியபோது தமிழகத்தில் இருந்த சூழ்நிலை வேறு. அந்த நேரத்தில் திராவிடம், தமிழ் தேசியம், சமூக நீதி போன்ற கொள்கைகள் காலத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது உலகமயமாக்கல், தாராள பொருளாதாரம் போன்ற நவீன கொள்கைகள் வந்துவிட்டன. ஒரே மாநிலத்தில் படித்து அதே மாநிலத்திலேயே வேலை பார்க்கும் காலம் மலை ஏறிவிட்டது.லேட்டஸ்ட் புள்ளி விபரத்தின்படி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி தீவுகள், மொரீசியஸ், இந்தோனேசியா, மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்ரிக்கா, செசல்ஸ், கயானா, மியான்மர், தாய்லாந்து, டுபாகோ தீவு, பிரெஞ்ச் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்பட மேலும் பல நாடுகளில் தமிழர்கள் பரவலாக வாழ்கின்றனர்.இப்படி உலகலாவிய ஒரு இனமாக தமிழர்கள் மாறிய பிறகு, இன்னமும் இரு மொழி கொள்கை, திராவிடம் என்று பழமைவாதம் பேசிக்கொண்டு இருந்தால் அது இந்த தலைமுறை தமிழர்களை கவராது என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.இது இன்டர்நெட் யுகம். மொழி என்பதே அறிவியல் தொழில்நுடபத்தின் ஆளுகைக்குள் சென்று விட்டது. அப்படி இருக்கையில் விஜயும் அதற்கேற்ப தனது கொள்கைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அவரது ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அதாவது 40 வயதுக்கு உட்பட்டவர்கள். நவீன காலத்தில் வளர்பவர்கள். திராவிட கொள்கைகள் பற்றிய அறிதலும் இவர்களுக்கு இல்லை. அக்கறையும் இல்லை. ஏனென்றால் அது தேவை இல்லாதவர்கள் இவர்கள்.அப்படிப்பட்டவர்களிடம் போய் துருப்பிடித்து காலாவதியான கொள்கைகளை பேசுவது நல்லதல்ல. மாற்றத்திற்காக காத்திருப்போரிடம் மாற்று அரசியலைத் தான் விஜய் பேச வேண்டும்.‛‛ஐயோ! அப்படி பேசினால், தன்னை தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் எதிரானவர் என்று முத்திரை குத்தி விடுவார்களோ'' என்று அவர் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், அப்படி முத்திரை குத்துவது யார் என யோசிக்க வேண்டும். அவர்கள் எல்லோருக்குமே 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்களின் எண்ணிக்கையும் இப்போது குறைவு. முத்திரை குத்தக் கூடிய பெரிய தலைவர்களும் யாரும் இல்லை.இப்படிப்பட்டவர்கள் எல்லோருமே சமூகவலை தளங்களில் மட்டுமே இயங்கி, வீடுகளில் முடங்கிக் கொண்டு அரசியல் செய்பவர்கள். களப்பணியாளர்களும் அல்ல. எனவே, இவர்கள் குத்தும் முத்திரைக்கு எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை.எனவே, அது பற்றியெல்லாம் கவலைப்பாடாமல், சிலர் விரிக்கும் போலி வலைகளில் சிக்காமல், அறுந்துபோன கொள்கைகளைப் பிடித்து தொங்கிக்கொண்டிராமல் பரந்து விரிந்த சிந்தனையுடன், உலகளாவிய பார்வையுடன், தேசிய கொள்கையுடன் அரசியல் செய்தால் நிச்சயம் விஜய்க்கு பலன் உண்டு.அதைத் தான் அவர் செய்ய வேண்டும். செய்வார் என நம்புவோம்!!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

Rajinikanth
ஜன 16, 2025 15:34

உலகளாவிய இனமாக தமிழ் மாறிய பிறகு, ஆங்கிலம் தானே தேவை, தமிழுடன் சேர்த்து படிக்க? ஹிந்தி எதற்கு?


Sivak
ஜன 16, 2025 15:04

வைகுண்டேஸ்வரன் என்கிற ஒரு கொத்தடிமை குடுத்த 200 ஓவாக்கு மேல கூவிட்டு இருக்கு ..


பாலா
ஜன 16, 2025 14:39

கிழிஞ்சது போ துண்டுசீட்டுII?


A su
ஜன 16, 2025 14:32

dont worry


Svs Yaadum oore
ஜன 16, 2025 13:05

திமுக வின் 27% வாக்குகளை யாராலும் பிரிக்க இயலாதுதான் .....சிறுபான்மை வோட்டு சிந்தாமல் சிதறாமல் அப்படியே தி மு க வுக்கு விழும் ....ஜெபம் செய்து செய்து ஆட்சிக்கு வந்த கட்சி தி மு க ......அ தி மு க காரன் தனி அணியாக போட்டியிட்டு ஜெயிக்கும் நிலைமை இப்பொது இல்லை.. தி மு க விடம் கமிஷன் வாங்கி அ தி மு க வோட்டை தி மு க வுக்கு மடை மாற்றும் கமிஷன் ஏஜென்ட் அ தி மு க ....இங்குள்ள ப ஜா க வில் அண்ணாமலை தவிர்த்து தி மு க ஆதரவு தலைவர்கள்தான் ப ஜா க வில் .....அதனால்தான் ஈரோட்டில் ப ஜா க போட்டியில் இல்லை ....இதுதான் நிலைமை .....இங்குள்ள மக்கள் அடிபட்டு திராவிட மாயையிலிருந்து விடுபட்டால்தான் உண்டு ....


Mr Krish Tamilnadu
ஜன 16, 2025 12:52

உலகம் சுருங்கி விட்டது, மறுக்க முடியாத உண்மை. அந்த உலகலாவிய கண்ணோட்டத்தில் தமிழர்களின் முன் நிற்பது நான்கு பிரச்சினைகளே. 1 காவிரி நீர். 2 கடலோர மீனவர் பிரச்சினை 3 உலக சந்தையில் நம் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை நிலையங்கள், வெளி மாநிலத்திலும், வெளி நாட்டிலும். அரசே விற்பனை நிலையங்களே தொடங்க வேண்டும். அவர்கள் பொருட்கள் இங்கு விற்பனையாவது போல், நமது பொருட்கள் அங்கு விற்க பட வேண்டும். அதுவே சமநிலையை உருவாக்கும். நமது சரிவை தடுக்கும். 4 வெளி மாநில, வெளி நாட்டு வாழ் தமிழர் பாதுகாப்பு. அவர்களின் சரியான விவரங்கள் நிர்வாகித்தல். அவர்களுக்கான அவசர அழைப்பு உதவி எண்கள் என தமிழர்களின் உலகலாவிய பயணத்திற்கான தடைகளை உடைக்க வேண்டும். வெளி மாநிலங்களில் வேலை செய்யவோ, மருத்துவம் படிக்கவோ ஆசை படுபவார்களுக்கு அம்மாநில மொழி, நீட் தேர்வு பயிற்சி அளிக்கலாம். பண்பாடு, கலாச்சாரம் வழியில் வந்த நல்லவைகள் அழியாமலும் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் எப்போது தமிழ் முன் நிறுத்த பட வேண்டும். கலாச்சார விழாக்கள் அழியாமல், பண்டிகை நாள்களில் உணவகங்களில் அந்த உணவுகள், சிறப்பு உணவாக இடம் பிடிக்க வேண்டும். பழசும் புதுசும் இரண்டற கலந்து பயணிக்க வேண்டும்.


Svs Yaadum oore
ஜன 16, 2025 13:16

பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் எப்போது தமிழ் முன் நிறுத்த பட வேண்டும். பண்டிகை நாள்களில் உணவகங்களில் அந்த உணவுகள், சிறப்பு உணவாக இடம் பிடிக்க வேண்டும்?? அப்படியா? பொங்கல் பண்டிகை இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை இரு நாட்களில், 453 கோடி ரூபாய்.. இப்படித்தான் விடியல் திராவிடனுங்க ஆட்சியில் தமிழன் பண்டிகை கொண்டாட்டம் ....இப்படித்தான் தமிழ் நாட்டில் தமிழ் முன் நிறுத்த படுகிறது ....


Rengaraj
ஜன 16, 2025 12:24

தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதாரம், வருடா வருடம் ஏறும் தமிழ்நாட்டின் கடன் சுமை, வரி வருமானம் ,இதெல்லாம் தெரியாமல் திராவிடம் , ஜாதி, பிரிவினை , பெரியார் என்றெல்லாம் பேசுபவர்கள் , வோட்டுக்கேட்டு செல்லும்போது அந்த அந்த பகுதியில் வாழும் தமிழக மக்களுக்கு இலவசங்களை தவிர்த்து அடுத்த பத்து ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக அந்த மக்களை முன்னேற்ற என்னெவெல்லாம் செய்யப்போகிறோம் என்று ஏன் சொல்லகூடாது ? அவன் யோக்கியனா , அவன் ஊழல் செய்யவில்லையா , அந்த மாநிலத்தில் இதெல்லாம் நடக்கவில்லையா என்றெல்லாம் பேசி மக்களை குழப்பக்கூடாது. நான் அப்படி செய்வேன் , இப்படி செய்வேன் என்று மந்திரவாதி மாதிரியெல்லாம் பேசக்கூடாது. நிஜத்தில் நடக்கக்கூடியவற்றை மட்டுமே பேசணும் . விஜயின் கட்சியில் இருந்து ஒரு வேட்பாளர் இந்த மாதிரி தீர்க்கமாக பேசமுடியுமா ? மத்தவங்க யாரும் இந்தமாதிரி பேசலை, இவர் கட்சியில் பேசலாம் இல்லையா ?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 16, 2025 13:10

பணம் படைத்தவர்களே, இலவசங்களை எதிர்க்காதீர்கள். ஏழைகளும் இறைவனின் படைப்புகள் தான். அவர்களும் வாழ வேண்டாமா?? ரேஷன் கடைகளைக் கூட எதிர்த்து சிலர் எழுதுகிறார்கள். பணக்காரர்களே, பால்கணியில் இருந்து வீதிகளில் இறங்கி சமூகத்தின் மற்ற முகங்களையும் பாருங்கள். சமீபத்தில், "திருப்பதியில் இலவச தரிசனம் கூப்பன்"களுக்கு அலை மோதி, 6 பேர் இறந்த செய்தி தெரியுமல்லவா? இது தான் இந்தியா வின் இன்னொரு முகம். பொங்கல் தொகுப்புக்கு 2 மணிநேரம் கூட வரிசையில் நிற்கிறார்கள். இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள், இவர்களையும் எதிர்க்கிறீர்கள். இது தவறு. இலவசங்களும், இட ஒதுக்கீடும் இந்தியர்களுக்கு என்றென்றும் அவசியம் தான். ஏன், பணக்கார நாடுகளில் கூட இலவசம் உண்டு. ஜப்பானில், ஒசாக்கா வில் என் நண்பன் இருக்கிறான். அவன் சொன்னது : கடந்த கிறிஸ்துமஸ் அன்று ஒரு பேக்கரியில் காலையில் 7 - 9 மணி வரை ஒரு நபருக்கு 2 Douugh nuts இலவசம். மக்கள் வரிசையில் நின்று வாங்கினார்கள்.


Mohan
ஜன 16, 2025 12:21

திராவிடத்தை எதிர்த்து கருத்துகள் மட்டுமே எழுதும் பாஜக மற்றும் சனாதனிகளை எரிச்சல் படுத்துவதே ஒரே வேலை எந்த சனாதனியும் நினைத்துக்கூட பார்க்காத அறிவிலித்தனமான பெயரை வைத்து எழுதும் நபர்.....என்று இருக்கும் திராவிட, பிச்சை போடும் ஜெபிப்பவர்களின் சம்பள ஆளான இந்த நபர் அவலை இடிப்பதை விட்டு ""உரலை"" இடித்து தனது சுய வெறுப்பை வெட்ட வெளிச்சமாக்குகிறார். மிகப் பெரிய முரண் தமிழக அரசியலில் நடப்பது.... என்ன தெரியுமா?.... கிறித்துவர்களும் முஸ்லீம்களும், கடவுளை திட்டிய ஈ.வெ.ராமசாமி நாயக்கரை கூட்டணியில் இடம் கிடைப்பதற்காக புகழ்வது தான்


S.V.Srinivasan
ஜன 17, 2025 08:07

ஈ வே ரா கடவுளை திட்டியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கிறிஸ்துவர்களுக்கும், முகமதியர்களுக்கும் இந்தியாவில் என்ன வேலை. உடனடியாக வெளியேற்றபட வேண்டும் என்று கூறிய ஆள்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 16, 2025 12:19

திமுக வின் 27% வாக்குகளை யாராலும் பிரிக்க இயலாது. ஸ்டாலின் அவர்களின் கடந்த 4 ஆண்டு ஆட்சி இன்னொரு 4% - 6% வாக்காளர்கள் அதிமுக, நாதக மற்றும் பாமக கட்சிகளிலிருந்து திமுக விற்கு வந்துவிட்டார்கள். இது தான் கள நிலவரம். இதனால் தான், ஈரோடு இடைத்தேர்தலில் நிற்காமல் எல்லோரும் தெறித்து ஓடிவிட்டார்கள். நாதக நிற்பது ஏனென்றால், அதிமுக அணி மற்றும் பாஜக அணியின் வாக்குகளில் கொஞ்சம் நாதக விற்கு வரலாம். கடந்த தேர்தலை விட 1-2% கூடுதல் வாக்குகள் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் அதிகம் கோடிகள் வாங்கலாம் என்று தான் நிற்கிறது. , 2026 தேர்தலில் பேரம் பேச கூடுதலாக கொஞ்சம் கிடைக்கும் என்று தான் நிற்கிறது. அதிமுக அணி மற்றும் பாஜக அணியின் தலைவர்கள், ஈரோடு இடைத்தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அவர்களின் தொண்டர்களுக்கு அறிக்கை அறிவுரை வழங்க வேண்டும். இல்லையென்றால், இரண்டு அணிகளின் வாக்குகளும் சிதறி, தொண்டர்களும் வெறுத்துப் போய், 2026 ல் தேர்தல் வேலைக்கும், வேட்பாளராவதற்கும் யாரும் முன் வர மாட்டார்கள்.


Sivasankaran Kannan
ஜன 16, 2025 12:02

vijay சொந்த அறிவில்லாத ஒரு தற்குறி.. அரசியலில் இன்னொரு பாக்யராஜ், ராமராஜன், கமல்ஹாசன்.. இந்த தற்குறி பற்றி திராவிட திருட்டு கும்பல் கவலை படாது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை