மேலும் செய்திகள்
ராணுவ தேர்வுக்கு வந்த இளைஞர்கள் மீது தடியடி
11-Nov-2024
கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம் குறித்து கிராம சபையில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், 'தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா' எனப்படும் கிராம இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஏழை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே திட்டத்தின் நோக்கம்.'திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 18 முதல், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புடன் கூடிய திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்குவது தொடர்பாக, கிராம இளைஞர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞர்களை விண்ணப்பிக்க செய்ய வேண்டும்' என, தமிழக ஊரக வளர்ச்சி இயக்குனர் அறிவுறுத்திஉள்ளார். - - நமது நிருபர் -
11-Nov-2024