உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய-வங்கதேச எல்லையில் தவிக்கும் இந்திய அகதிகள்

இந்திய-வங்கதேச எல்லையில் தவிக்கும் இந்திய அகதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கத தேச வாழ் இந்தியர்கள் அகதிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய- வங்கதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றனர். அவர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்துநிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.மாணவர் போராட்டத்தால் வங்கதசே பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் .வங்கதேச பார்லிமென்ட் கலைக்கப்பட்டு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி அமைக்க உள்ளது.இந்நிலையில் வங்கதேச வாழ் இந்தியர்கள் அகதிகளாக தஞ்சம் கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய -வங்க தேச எல்லையான மேற்கவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சத்குரா கிராமம் வழியாக இந்தியாவிற்கு நுழைய முயன்றனர். அவர்களை பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் எல்லையில் அவர்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Aroul
ஆக 11, 2024 06:42

என்னடா டைட்டில் இது, அவங்க வங்க தேச ஹிந்துக்கள். இந்தியர்கள் இல்லை.


Nandakumar Naidu.
ஆக 08, 2024 11:00

வங்க தேச வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு நம் பாரதம் அடைக்கலம் கொடுக்க வேண்டும். ஹிந்துக்கள் தானா என்று தீர விசாரித்து உள்ளே விட வேண்டும். நான் நாட்டில் உள்ள மதசார்பற்ற என்று சொல்லிக்கொள்ளும் எதிர்கட்சிகள் பங்களாதேஷில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாரும் பேசவில்லை என்பதை நம் நாட்டில் உள்ள ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தான் உண்மையான மதவாதிகள் என்பதை உணரவேண்டும். இதை மனதில் கொண்டு ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு இந்த மத வெறியர்களை வரும் தேர்தல்களில் மண்ணோடு மண்ணாக அழிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களி சொந்த நாட்டிலேயே அகதிகளாக சாக வேண்டியது தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


Kalyanaraman Andhukuru.R.
ஆக 09, 2024 09:37

உண்மையான கருத்து இதை இந்துக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் ஹரி ஓம்


Ramakrishnan Sathyanarayanan
ஆக 08, 2024 08:02

வங்க தேசிகர் புரிகிறது. வங்க தேச வாழ் ஹிந்துக்கள் என்றால் புரிகிறது. வங்க தேசத்தில் வெளியேற முடியாத ஹிந்துக்கள் என்றாலும் புரிகிறது. அது என்ன வங்க தேச வாழ் இந்தியர்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ