வாசகர்கள் கருத்துகள் ( 2 )
படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே தமிழக சர்வாதிகாரி உடையணிடியின் படமும் இல் வெளிவந்து அப்படியே மிரட்டி விட்டது
நாலு கம்பியை கட்டி வைத்தால் அது யுரேனியும் செறிவூட்டும் ஆலையாகிவிடாது.
பையோங்யங் : வடகொரியாவில் யுரேனியம் செறிவூட்டும் மையத்தினை அதிபர் கிம்ஜோங் உன் பார்வையிடும் புகைப்படம் முதன்முறையாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன், 40, உளளார். இவர் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில், அணு ஆயுதச் சோதனையும் நடத்தி வருகிறார். கடந்த 2006ம் ஆண்டு முதல் 2017 வரை 6 முறை அணு குண்டு சோதனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை அவ்வப்போது மிரட்டுவதும் அவருக்கு வாடிக்கை.இந்நிலையில் நேற்று இணையதளத்தில் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் வடகொரியா அணு ஆயுதம் தயாரிக்கும் மையம், மற்றும் யுரேனியம் எரிபொருள் செறியவூட்டும் மையம் ஆகியவற்றினை கிம்ஜோங் உன் ஆய்வு செய்யும் புகைபடம் தான் அது. வடகொரியாவில் முதன்முறையாக இப்புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் வடகொரியாவில் எங்கு உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே தமிழக சர்வாதிகாரி உடையணிடியின் படமும் இல் வெளிவந்து அப்படியே மிரட்டி விட்டது
நாலு கம்பியை கட்டி வைத்தால் அது யுரேனியும் செறிவூட்டும் ஆலையாகிவிடாது.