உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விமான விபத்தில் மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் பலி

விமான விபத்தில் மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லிலோங்வி: மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானது. விமானம் விபத்தில் சிக்கி, துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவி நாட்டின் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா இருந்து வந்தார். அவர் நேற்று (ஜூன் 10) 9 பேருடன் ராணுவ விமானம் மூலம் சென்றார். அவர் பயணித்த விமானம் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காமல் திடீரென மாயமானது. விமான கண்காணிப்பு ரேடாரிலிருந்து விலகியது. விமானத்தை தேட அந்நாட்டு அதிபர் லாசரஸ் சக்வெரா உத்தரவிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z09ddm4g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாயமான விமானத்தை தேடும் பணி நேற்று முதல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. மாயமான விமானம் விபத்தில் சிக்கியது கண்டறியப்பட்டது. இந்நிலையில் விபத்தில் சிக்கி, துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர் என மலாவி அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். துணை அதிபர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. துணை அதிபர் உயிரிழப்பிற்கு அந்நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ